ஸ்மார்ட் போன் இல்லையென்றாலும், சாதாரண போன் மூலமாகவே பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 9 of 23 in the series 27 நவம்பர் 2016

ஸ்ரீகாந்த் ராமகிருஷ்ணன்
(ஸ்வராஜ்யா பத்திரிக்கையிலிருந்து)

img_20161125_182759247
சமீபத்திய மத்திய அரசாங்கத்தின் 500 ரூபாய், 1000 ரூபாய் நீக்கத்தின் காரணமாக, பணத்தாள் இல்லாமலேயே பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதன் தேவை பலருக்கும் உறைத்திருக்கிறது. ஆனால்,பலரும் கேட்கும் கேள்வி, “ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் எப்படி பணத்தாள் இல்லாமல் கொடுக்கல் வாங்கல் செய்வார்கள்” என்பதுதான்.

இண்டர்நெட் கனெக்‌ஷன் கொண்ட எந்த ஒரு சாதாரண போனும் இவ்வாறு பணத்தாள் இல்லாமல் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம். இதற்கான வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NCPI) உருவாக்கியிருக்கிறது. இதன் பெயர் யுனிவர்சல் பேமண்ட் இண்டர்பேஸ் என்பதாகும் (UPI)

இவர்கள் உருவாக்கிய NUUP, சாதாரண போன் மூலமாகவே ஒருவரது வங்கியில் உள்ள பணத்தை பார்ப்பது, செலவு வரவு படிவத்தை பார்ப்பது, மற்றவர்களின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புவது ஆகியவற்றை எளியதாக செய்யக்கூடியது.
எல்லா GSM ஜிஎஸ் எம் போன்களிலும் இது ஏற்கெனவே இருக்கிறது. இது 28 ஆகஸ்ட் 2014 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியால், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் ஒரு பகுதியாக துவக்கி வைக்கப்பட்டது.

இந்த NUUP ஐ உபயோகப்படுத்துவது மிக எளியது. போனின் சொந்தக்காரர் தன் போனில் *99# என்று அழுத்தினால் அவரது வங்கியின் பக்கம் வரும். இதற்கு முன்னால் அவரது வங்கியுடன் பேசி தனது போன் எண்ணையும் தனது வங்கி கணக்கையும் அவர் இணைத்து வைத்திருக்க வேண்டும்.

*99# அழுத்தியதும், அவர் தனது வங்கியின் முதல் நான்கு IFSC எண்களை அழுத்த வேண்டும். அது அவரது வங்கியின் கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் பின்னர் தனது கொடுக்கல் வாங்கல் வேலையை செய்ய ஆரம்பிக்கலாம்.

இது எல்லா நாட்களிலும் எல்லா நேரத்திலும் விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நேரத்திலும் வேலை செய்யும். இந்த வசதி தமிழ் உட்பட 12 மொழிகளில் வழங்கப்படுகிறது. வெவ்வெறு மொழிகளை பயன்படுத்த பல USSD எண்களை இந்த அமைப்பு வழங்கியுள்ளது. இந்த NUUP அமைப்பை உபயோகப்படுத்த பல்வேறு போன் நிறுவனங்கள் பல்வேறு கட்டண விகிதங்களை நிர்ணயித்துள்ளன. டெலிகாம் ரெகுலட்டரி அத்தாரிட்டி இதன் மூலம் ஒரு கொடுக்கலுக்கு ரூபாய் 1.50 அதிக பட்ச கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
இந்த *99# எவ்வாறு வேலை செய்கிறது என்பதை வீடியோவாகவும் பார்க்கலாம்.

இந்த NUUP அமைப்பு ஒருவர் மூன்று விதமான வேலைகளை செய்ய வசதி அளிக்கிறது.

பணம் கொடுக்கல் வாங்கல் இல்லாத வேலைகள்:
1) வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பார்ப்பது.
2) வங்கி கணக்கில் வரவு செலவு படிவம் பார்ப்பது
3) போன் வங்கி அமைப்பின் MMID சரி பார்ப்பது
4) பின் எண்ணை சரி பார்ப்பது, பாஸ்வர்ட் உருவாக்குவது போன்றவை

பணம் கொடுக்கல் வாங்கல் செய்வது
பணம் பெறுபவரின் ifsc எண், அவரது போன் நம்பர், அவரது MMID அல்லது அவரது ஆதார் நம்பர் மூலமாக அவருக்கு பணம் அனுப்புவது,

ஆதார் மற்றும் வங்கி கணக்கு உள்ள இணைப்பை பரிசோதித்து பார்ப்பது

இந்த NUUP அமைப்பு மூலமாக பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு அவர் தனது வங்கி கணக்குடன் தன் போன் நம்பரை இணைத்துகொள்ள வேண்டும். தனது வங்கிக்கு சென்று இதனை செய்துகொள்ளலாம். இந்த அமைப்பு மூலமாக அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரைக்கும்தான் கொடுக்கல் வாங்கல் செய்யமுடியும்.

போன் தொலைந்துவிட்டாலும் போனை எடுத்தவரால் இதிலிருந்து பணத்தை எடுக்கமுடியாது. ஏனெனில் வெறுமே *99# என்று அழுத்திவிட்டு பணத்தை எடுக்க முடியாது, மாற்றமுடியாது. கூடவே அவரது வங்கி கொடுத்திருக்கும் குறு எண் (short code ) ஐயும் சேர்த்து கொடுக்க வேண்டும். ஆகவே போன் திருடியவருக்கு எந்த வங்கி என்றும் தெரியவேண்டும். கூடவே அதிக பாதுகாப்புக்கு நீங்களே அதற்கு இன்னொரு பின் pin ஐயும் சேர்த்து வைக்கலாம். இது உங்களுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வர்ட்.

தன் போனுக்கு பதிலாக இன்னொரு போனை உபயோகப்படுத்தி பணம் எடுக்க முடியாது. தன் போனில் சிம் கார்ட் மாற்றிவிட்டாலும் பணத்தை கொடுக்கல் வாங்கல் செய்யமுடியாது. இதனால் 5000 என்பதை அதிக பட்ச அளவாக வைத்திருக்கிறார்கள்.

இது இரண்டு வருடமாக புழக்கத்தில் இருந்தாலும் இது அதிகமாக மக்களால் அறியப்படவில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இந்த வசதி மூலம் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்.

http://swarajyamag.com/technology/no-smartphone-you-can-still-transfer-money-using-a-basic-mobile-phone

Series Navigationகியூபா – 50 ஆண்டு – புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும்கியூபாவின் பொருளாதாரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *