“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர், கொள்கை பரப்பை, சினிமா மூலம், பாமர மக்களுக்கு புரிய வைத்தவர்.
அதே நேரத்தில், காந்தியின் சுதந்திர சிந்தனைகளுக்கும் மதிப்பளித்தவர்.தனது, 17வது வயதில், டி,கே.சண்முகம் நாடக சபாவில் சேர்ந்து, நாடக நடிகராக உருவாகி, சதி லீலாவதி , சினிமா மூலம், சினிமாவில் நுழைந்தார். சதி லீலாவதி படத்திற்கு, அவரே, நகைச்சுவை வசனம்,எழுதி நடித்தும் காண்பித்து, எல்லீஸ் டிங்கனிடம் பாராட்டையும் பெற்றார். இந்த துணிச்சில்,அவருக்கு, பிற்காலத்தில், முற்போக்கு கொள்கைகளை புரிந்து கொள்வதற்கும், மக்களின் மூடத்தனத்தை, தனது ந்கைச்சுவை வசனங்களால், பேசியும் நடித்தும்
காண்பித்து, மக்களின், சிந்தனை கதவுகளை திறந்தவர். பெண் சுதந்திரம், பெண் கல்வி பற்றி எல்லாம்,தனது மனைவி மூலமாக, சினிமாவில் புகுத்தி, பெண் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். சினிமா மூலம் கிடைத்த பணத்தை, ஏழை,எழிய மக்களுக்கு கொடுத்துதவியவர். அதை, தம்பட்டம் அடித்து, தன்னை பாரி வள்ளல், என்றுவிளம்பரம் படுத்திக் கொள்ளாதவர்.
இவரது, சிறந்த பண்பு, ஏழை, எழிய மக்களின்
சுக-துக்கங்களில் பங்கெடுத்து, மக்களோடு
மக்களாக வாழ்ந்து காட்டியவர் கலைவாணர்.
ஆகவேதான், தனது வசனங்களை, மக்களின்
மொழியில் எழுதி, மக்களுக்கு புரியும்படி,
நடித்துக் காட்டியவர்.
கலைவாணர் மீது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில்,
கொலைப்பழி, சுமத்தப்பட்ட போதும், அஞ்சி நடுங்கவில்லை,
சிறைக்கு சென்றபோதும், சிரித்துக்கொண்டே சென்றார்.
சிறைகுள்ளும், தனது தொழிலை காட்டி, பல
சிறைக்கதிகளின் துயரங்களை போக்கி, அவர்களையும்
சிந்திக்க வைத்தவர். அவருக்கு சிறையும், இந்த
உலகமும், ஒரே நாடக மேடைதான்.
அவர் சிறை சென்றபோது, பெரியார் அவர்கள்,
கலைவாணருக்காக, மேடை தோறும் பேசி, அவரது,
விடுதலைக்கு வழிவகுத்தார். அண்ணா போன்ற ,
திராவிட நாடு பற்றுக்கொண்ட, முற்போக்கு
சிந்தனையாளர்கள் பலர், தமிழகமெங்கும்,
வீர ஆவேசத்தோடு பேசி, கொலை வழக்கின்
சதியை அம்பல படுத்தினர். அவரது,
விடுதலைக்காக, ஊர் ஊராக சென்று,
திராவிட இயக்கத்தினர் முழக்கமிட்டனர்.
ஆர்பாட்டங்கள் நடத்தினர்.
இரேண்டே ஆண்டுகளில், சிறையிலிருந்து, விடுவிக்க
ப்பட்டார் .இது போன்ற நிகழ்வு, இந்தியாவில்,
வேறு எந்த நடிகருக்கும் நடந்ததில்லை.
கலைவாணர், அன்றே அடுப்படியில் விஞ்ஞானத்தை
புகுத்தியவர். பெண்களின் குடும்ப சுமைகளை குறைக்க,
விஞ்ஞான உதவியுடன், வேலை செய்தால் அலுப்பிருக்காது,
என்று, பல விஞ்ஞான கருவிகளை பற்றியெல்லாம்
கணவுக்கண்டு, அதனை பாடல் மூலமாக, பெண்களின்,
கண்ணீரை துடைக்க பாடியவர். அது இன்று
உண்மையாக உலாவருகின்றது.
அதேபோல், குடும்பக்கட்டுபாட்டு கொள்கையை,
தனது நகைச்சுவை மூலமாக பரவ செய்து, மக்களுக்கு,
அதன்மேலுள்ள பயத்தை போக்கினார்.அவரது பல
பாடல்கள், இன்றும், உயிருடன் உலாவருகின்றது.
இன்றைய, இளம் தலைமுறை, இதனை கேட்டு,
அவரை பராட்டுகின்றது. அவர், புகழின் உச்சாணியில்
இருந்த போதே, இவ்வுலகைவிட்டு மறைந்தார்.
இந்திய சினிமா சரித்திரத்தில், “கலைவாணர்”
என்ற பட்டம், என்.எஸ்.கிருஷ்ணன் ஒருவருக்கே கிடைத்துள்ளது.
ஆனால். இவரது வாரிசுகள் இன்று கஷ்ட ஜீவனத்தோடுதான்
காலத்தை தள்ளுகின்றனர். திரை துறையிலும் இவர்களுக்கு
யாரும் கை கொடுத்து தூக்கிவிடுவதாக இல்லை,
எம்ஜிஆர் காலத்தில், அவரின் கருணையால்,
ஏதோ உதவி கிடைத்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
ஒரு கலைஞன், இந்த சமூதாயத்திற்கு கொடுத்த கலைக்கொடையை, இன்று யாரும் நினத்து பார்க்க நேரம் இல்லாமல்தான் ஓடிக்கொண்டுள்ளனர்.
“பாகவதர்” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட, தியாகராஜ பாகவதர், கர்நாடக இசைவழியே, தனது இனிய குரல் வளத்தால், சினிமாவில் நுழைந்தவர். இவரது, வசீகர குரலும்,முகவெட்டும்,சிகை அலங்காரமும், பல கன்னி பெண்களின் உள்ளத்தை கொள்ளைக்கொண்டது. தமிழ் சினிமாவில், 1934ல் பவளக்கொடி என்ற படம்
மூலமாக, அறிமுகமானார். அந்த படத்தில்,60 பாடல்களை பாடி, மக்களை மயங்க வைத்து
சாதனை படைத்தார். இவர் தான், அன்றைய சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து, முதல் படத்திலேயே 1000/=ரூபாய் சம்பளமாக பெற்றவர்.
தமிழ் சினிமா வரலாற்றில், அன்றைய நாளில், கர்நாடக
இசையோடு, மெல்லிசை கலந்து பாடி, பல கர்நாடக
மூத்தவர்களை அதர்ச்சிகுள்ளாக்கினார். ஆனால்,
அன்றைய, இளசுகள் இவரது, பாடல்களை ரசிக்க தொடங்கினர்.
பாகவதர் கிராப் அந்த காலத்தில், பல இளைஞர்களின்,
சிகை அலங்கரமாக திகழ்ந்தது. பல இளம் பெண்களின்
கனவு நாயகனாக திழ்ந்தார். இதனால், பல பெண்கள்,
இவரது வலையில்,சுலபமாக விழ்ந்தனர். ஹரிதாஸ்
என்ற இவரது படம், மூன்று தீபாவளிக்கண்டது.
இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்.
மிதமிஞ்சிய பணம், பெரிய பங்களா வாழ்க்கை, படகு போன்ற கார்கள், செல்வ செழிப்பில் மிதந்தார்.
பாகவதர் ஒரு இசை நாயகனாகத்தான், மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தார்.
அன்றைய சினிமா உலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர்.பணம் சம்பதிப்பதே, இவ்ரது ஒரே குறிகோளாக இருந்தது.
இவரது சக்கரவர்த்தி வாழ்க்கைக்கு, முற்றுப்புள்ளி வைக்க பலர், எதிராக உருவாகினர். அதி முக்கியமாக, லட்சுமிகாந்தன், மஞ்சள் பத்திரிகை முக்கிய இடம் பிடித்தது. இதனை தடுக்க,
பாகவதர், பல தடைகளை உருவாக்கினார். தீடீரென்று, லட்சுமிகாந்தன் கொலை செய்யப்படுகின்றார். அந்த பழி, பாகவதர் மேல் சுமத்த்ப்பட்டு, கைது செய்யப்படுகின்றார்.
அவரது ரசிகர்கள்தான் கவலைப்பட்டனர்.
வழக்கு விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. இவரின் சினிமா பயணத்தில் பெரிய இடி விழுந்தது. வழக்கு நடத்துவதற்கு, அவரது சொத்துக்களை எல்லாம், ஒவ்வொன்றாக விற்று, வழக்கை நடத்தினார். அன்றைய பிரபல வழக்கறிஞர் பாரிஸ்டர் எத்திராஜ்,
பாகவதரின் வழக்கை,லண்டன் ப்ரிவியு கவுன்சிலில் மேல் முறையீடு செய்து, வாதாடி, பாகவரை விடுதலை பெற செய்தார். இரண்டரை ஆண்டு சிறை வாசமும், வழக்கிற்கு ஏகப்பட்ட பண செலவும் ஆனதால், அவரது சொத்து சுகத்தை யெல்லாம் விற்க நேர்ந்தது. அவரிடம், கொஞ்சம் மிஞ்சியுள்ள பணத்தை வைத்து, ” ராஜமுக்தி” என்ற படத்தை எடுத்தார். இந்த படத்திற்கு, புதுமைப்பித்தான் திரைக்கதை வசனம் எழுதினார். ஆனால், படம் படுதோல்வி அடைந்தது.
இது, இவருக்கு பெரிய அளவில் மனபாதிப்பை ஏற்படுத்தியது. அதற்குள், பலர், இவரது இடத்தை பிடிக்க முன்வந்தனர். ரசிகர்களின், ரசிப்பு தன்மையும் மாற ஆரம்பித்து, இவரை ஓரம் கட்டினர். அவரது பழைய ரசிகர்கள்தான், அவரது பாடல்களை மட்டும் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தனர்.
அதே கவலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு, கண் பார்வையும் குறைந்து, மிகுந்த வறுமையில் வாடி இறந்தார்.அவர் சர்க்கரை வியாதியால், பெரிதும் பாதிக்கப்பட்டு, கடைசியில் பக்தி மார்க்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
அவரின் இரண்டு மனைவிகள், குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்க ஆரம்பித்தனர். வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்த செய்தியை, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் உதவியுடன், பாகவதரின் ஏதோ ஒரு வீட்டை மட்டும் மீட்டுக் கொடுத்தார்.
அவரை சுற்றித்திரிந்த காக்கா கூட்டம், அவரது சொத்துக்களை, தில்லு முல்லு செய்து கபளீகரம்
செய்து ஏப்பம் விட்டது.
இரண்டு மனைவிகளும் உலகம் தெரியாமல் வாழ்ந்ததால், மிகப்பெரிய படுகுழியில் தள்ளப்பட்டனர். இன்று கூட, அவரது வாரிசுகள், பேரன் பேத்திகள் வசதியில்லாமல் வாழ்ந்து வருவதாக, செய்திகள் கூறுகின்றது.
- இரு கோடுகள் (மூன்றாம் பாகம்)
- தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?
- கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்
- நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு
- தேசபக்தி!!
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1
- தாத்தா வீடு
- அழியா ரேகை
- கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)
- பண்ணைக்காரச்சி
- இரண்டு கேரளப் பாடல்கள்
- வேழப்பத்து 14-17
- தளர்வு நியதி
- பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை
- தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு
- இன்குலாபுக்கு அஞ்சலிகள்
- The Impossible Girl
- கிரகவாசி வருகை
- ஒட்டப்படும் உறவுகள்
- சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா
- சுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா ?
- முதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு