J.P..தக்சணாமூர்த்தி DEEE,. BE.,
dhakshna@hotmail.com
கடன் அட்டை, ஏடிம் அட்டை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை செய்ய நினைப்பவர்களுக்கு இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி இருந்தால் போதுமாம்! தற்போது பெரும்பாலானா பண விடயங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே நடைபெறுகின்றன. இது பல்வேறு வளைதளங்கள் மூலம் அதிகளவில் நடைபெறுவதால் இந்த முறைகேடுகளை கண்டுபிடிப்பது முடியாத காரியமாகும். முதலில் கார்டு எண்ணை டைப் செய்து, பின்னர் கார்டின் முடிவு திகதி
மற்றும் வருடத்தை டைப் செய்து விட்டால் முக்கிய நம்பரான CVV நம்பர்
திரையில் காட்டும். இதன் மூலம் ஹேக் செய்து மோசடியில் ஈடுபட முடியும்.
இது நம்பர்களை பெறுவது எப்படி ஹேக்கர்களுக்கு சாத்தியமாகிறது?
ஒருவர் பலமுறை முயன்றும், யூகித்தும் ஒரு கார்டின் தகவல்களை பெற முடியும்.
இது 10 அல்லது 20 முறை முயற்சித்தாலே பலருக்கு சாத்தியபடுகிறது என நியூ
காசில் பல்கலைக் கழகத்தின் முனைவரான முகமது அலி கூறுகிறார்.
இன்னொரு வழியாக இணையதளம் மூலம் செலுத்தப்படும் பல விதமான பேமண்ட்டுகள்
விபரத்தை வைத்தும் கார்டு நம்பர் பற்றிய தகவல்கள் ஹேக் செய்யபடுகின்றன.
முதல் ஆறு இலக்க விவரங்களைத் தவிர எந்த விவரமும் இல்லாமல் தொடங்கப்படும்
முயற்சியும் கூட கார்டின் வகையையும் வங்கியின் விவரத்தையும் தரும். இதை
வைத்து கூட மோசடி செய்யப்படலாம். கார்டு வைத்திருப்பவர்கள் அதில் இருக்கும் உச்சவரம்பு பணத்தை குறைவாக வைத்து கொள்வதே இதை சமாளிக்க சிறந்த வழி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
- காலநிலையும் அரசியலும்
 - யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12
 - நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.
 - சரியும் தராசுகள்
 - ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
 - இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி
 - பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)
 - கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்
 - அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்
 - கனவு : இலக்கிய நிகழ்வு
 - பாரதியாரின் நவீனத்துவம்
 - வெண்ணிற ஆடை
 - சோ – மானுடத்தின் பன்முகம்
 - தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்
 - உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3
 - திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்
 - இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016