பறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’

This entry is part 3 of 13 in the series 18 டிசம்பர் 2016

kamalathaas

பாவண்ணன்

மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக கவனத்தைப் பெற்ற கமலாதாஸ் தன் நாற்பதுகளையொட்டிய வயதில் தன்னுடைய தன்வரலாற்றை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுபதுகளில் வெளிவந்து அவருடைய புகழ்வெளிச்சத்தை மேலும் அதிகமாக்கியது. ஏறத்தாழ  நாற்பதாண்டுகள் கழித்து நிர்மால்யாவின் மொழியாக்கத்தில் அந்த நூல் தமிழ்வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது. சொந்த அனுபவம் சார்ந்து கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கும் முன்னுரை இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நிர்மால்யாவின் மொழியாக்கம் சிறப்பாக உள்ளது.

சிறுகச்சிறுக தன்னை ஓர் ஆளுமையாக வளர்த்துக்கொள்ளவும் நிறுவிக்கொள்ளவும் கமலாதாஸ் கடந்த பாதைகளும் பயணங்களும் வலிகளும் வேதனைகளும் இல்வாழ்க்கையில் அவர் கடந்துவந்த உறவுச்சிக்கல்களும்  இப்புத்தகத்தில் பல்வேறு அத்தியாயங்களில் அடங்கியிருக்கின்றன. இன்றைய வாசிப்பில் அவை சற்றே நிறம் மங்கியவைபோலத் தோற்றம் தரக்கூடும். ஆனால் இவை அனைத்தும் அரைநூற்றாண்டுக்கும் முன்பாக நடைபெற்றவை என்பதை கருத்தில் கொண்டால் மட்டுமே, இந்தத் தன்வரலாற்று நூலில் நிகழும் உணர்ச்சிமோதல்களையும் சம்பவங்களையும் ஒரு வாசகன் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

‘ஒரு குருவியின் அவலம்’ என்ற தலைப்பில் உள்ள முதல் அத்தியாயம் கமலாதாஸின் மருத்துவமனை வாசத்திலிருந்து தொடங்குகிறது. ஐம்பதுகளின் இறுதியை ஒட்டிய வயதில் கல்லீரலும் நுரையீரலும் பாதிக்கப்பட்டு ஒருமுறையும் இதயமும் கருப்பையும் பாதிக்கப்பட்டு இன்னொருமுறையுமென இரண்டு முறைகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் தங்க நேர்ந்த சூழல்களே ஒருவேளை கமலாதாஸ் அவர்களுக்கு இந்தத் தன்வரலாற்றை எழுதுவதற்கான தூண்டுதலை வழங்கியிருக்கக்கூடும்.

ஏறத்தாழ நூற்றியைம்பது பக்கங்கள் உள்ள இந்த நூலில் தன் சொந்த வாழ்க்கை சார்ந்து பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களுக்கு நிகராக வாழ்நாள் முழுக்க பார்த்துப்பழகிய சிலரைப்பற்றியும் அவ்வப்போது சந்தித்து மறைந்துபோன சிலரைப்பற்றியும் கமலாதாஸ் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய தன்வரலாற்றில் கோட்டோவியங்கள்போல விழுந்திருக்கும் அம்முகங்கள் மறக்கமுடியாதவையாக உள்ளன. உதிர்ந்துபோன மலர்களாக இந்தத் தன்வரலாற்றுநூலில் அவை காணப்படுகின்றன. ஒரு புனைகதையின் பாத்திரங்கள்போல வாழ்ந்திருக்கும் அவர்களை ஒரு வாசகனால் ஒருபோதும் மறக்கமுடியாது. இருபத்தேழு அத்தியாயங்களாக நீளும் இந்தத் தொகுதியில் அத்தியாயத்தின் மையத்துடன் இணைந்தும் இணையாமலும் கவித்துவத்துடன் எழுதியுள்ள பல வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தக்க சித்தரிப்புகளுடன் உள்ளன. கமலாதாஸின் தனிப்பட்ட வாழ்க்கையைவிட, இந்த வாசிப்பு அனுபவங்களே இந்தப் படைப்பை முக்கியமானதாக்குகிறது.

புத்தகத்தின் முன்னுரைப்பகுதியில் போகிற போக்கில் ஒரு இளைஞனைப்பற்றிய குறிப்பைக் கொடுத்திருக்கிறார் கமலாதாஸ். புகைப்படம் எடுக்கும் இளைஞன் அவன். திருமணம் நிச்சயித்திருக்கும் பதினைந்து வயதான பெண்ணை வெளியே அழைத்துச் சென்று பல கோணங்களில் நிற்கவைத்து அவன் படமெடுக்கிறான். அப்பெண்ணின் அழகை மனமாரப் பாராட்டுகிறான். அவளுக்குத் திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணத்திலும் அவன்தான் படமெடுக்கிறான். திருமணத்தையொட்டி திடலில் ஒரு கதகளி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நிகழ்ச்சிக்கு  அந்த மணப்பெண்ணை வரும்படியும் அப்போது நிறைய படங்களை எடுக்கலாம் என்றும் சொல்லி வைத்திருக்கிறான் அந்த இளைஞன். இரவு கவிந்ததும் குறிப்பிட்ட நேரத்தில் திடலில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேளச்சத்தம் கேட்கிறது. ஆனால் அவளால் செல்ல முடியவில்லை. எதிர்பாராத விதமாக அவளுக்குத் தெரியாமலேயே அவளுடைய முதலிரவு நிகழ்ச்சி அன்று குறிக்கப்பட்டிருக்கிறது. அவள் முதலிரவு அனுபவம் ஏமாற்றத்தில் முடிவடைகிறது. காதில் விழும் கதகளி மேளச்சத்தத்தில் ஆழந்தபடி அந்த இரவை அவள் கழிக்கிறாள். அதிகாலையில் அனைவரிடமும் விடைபெற்றுச் செல்வதற்காக வாசலில் வந்து நிற்கும் அந்த இளைஞனைப் பார்க்கிறாள். அவன் அக்கணமே அங்கிருந்து புறப்பட்டுவிடுகிறான். ஒரு சிறுகதைக்குரிய திருப்பத்துடன் எழுதப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி வாசிக்கும்போதே மனத்தில் பதிந்துவிடுகிறது.

இன்னொரு சித்திரம். ஒருமுறை கமலாதாஸின் சித்தி குருவாயூருக்குச் சென்று இறைவனை வழிபட்டு முடித்த பிறகு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார். அங்கே நடைக்கல்மீது நின்றிருந்த ஒரு பிச்சைக்காரக்கிழவி அவளை நோக்கிக் கைநீட்டிக் கெஞ்சுகிறாள். அவள் முகத்தை உற்றுப் பார்த்த சித்தி அவளை அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறாள். “நீங்க உண்ணி மாயம்மாதானே? ஏன் இந்தக் கோலம்?” என்று கேட்கிறாள். அந்தக் கிழவி ஓவென்று அழுகிறாள். நாலப்பாட்டுக்குடும்பத்துடன் தொடர்புவைத்திருந்த வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி அவள். அவளுடைய இரண்டாவது மகள் தாழ்ந்த சாதிக்காரன் ஒருவனுடன் ஊரைவிட்டு வெளியேறியபோது, வாழ வேறு வழியில்லாத மாயம்மாவும் அவர்களோடு சென்றுவிட்டாள். பின்னர் வறுமையின் கொடுமையால் அவர்களால் கைவிடப்பட்டு கோவில் வாசலில் பிச்சையெடுத்துப் பிழைக்க வந்துவிட்டாள். சித்தி அவள்மீது இரக்கம் கொண்டு தன்னோடு வீட்டுக்கே அழைத்து வந்துவிடுகிறார். வீட்டில் ஒரு இடம் ஒதுக்கித் தந்து அவளுடைய இறுதிக்காலம் வரைக்கும் வைத்திருந்து காப்பாற்றுகிறார்.

மற்றொரு காட்சி. நிறம் மங்கிய மல்மல் வேட்டியும் ரவிக்கையும் அணிந்து தன் வாழ்க்கையைக் கழித்தவர் கமலாதாஸின் பாட்டி. முப்பத்தாறு வயதில் விதவையானவர் அவர். நல்ல உடலழகும் சரும மினுமினுப்பும் கொண்டவர். ஒருநாள் அவர் குளிப்ப்தற்காக குளத்தில் இறங்கியபோது, அவர்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து தங்கியிருந்த வழக்கறிஞர் ஒருவர் குளப்புரையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துவிடுகிறார். கேரளம் முழுதும் நன்கு அறியப்பட்ட  பெண்பித்தர் அவர். படிக்கட்டுகளில் இறங்கி தன்னை நோக்கி நெருங்கி வரும் அந்த மனிதனைக் கண்ட பாட்டி அஞ்சி நடுங்குகிறாள். பிறகு ஈரத்துண்டைச் சுற்றியபடி அங்கிருந்து ஓட்டமெடுக்கிறாள். அந்த அச்சமும் நடுக்கமும் சாகும் வரைக்கும் அவரைத் தொடர்ந்தபடி இருக்கின்றன. தனிமையில் இருக்கும்போதெல்லாம் அச்சம்பவம் அக்கணத்தில்தான் நிகழ்ந்தது என்பதுபோல தன்னிச்சையாக விவரிக்கத் தொடங்குகிறாள். அந்த அதிர்ச்சியிலிருந்து அவளால் ஒருபோதும் மீளமுடியவே இல்லை.

அந்தப் பாட்டிதான் கமலாதாஸின் குழந்தையை பிறந்ததில் இருந்து தன் பக்கத்திலேயே படுக்கவைத்து, கண்ணும் கருத்துமாகக் கவனித்து வளர்த்துக்கொடுத்தவள். ஒருமுறை பம்பாயிலிருந்து கிராமத்துக்கு வந்தபோது அந்தப் பாட்டி கமலாதாஸைச் சந்தித்து தன்னுடைய வீட்டிற்கு வந்து ஓரிரவு முழுதும் தங்கி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறாள். அது ஒரு சின்ன ஆசைதான். நிறைவேற்றிவைக்கக் கூடிய விழைவுதான் என்பதால் கமலாதாஸும் அத்திட்டத்துக்கு ஒத்துக்கொள்கிறார். ஆனால் அது கார்த்திகை மாதம். மழைக்கான எச்சரிக்கையை விடுத்தபடி அவ்வப்போது காற்று சீறிக்கொண்டிருந்தது. இரவு வேளையில் சாப்பிட்டுவிட்டு தன் வீட்டிலிருந்து பாட்டி வீட்டுக்குப் புறப்பட்டபோது அவருடைய தந்தையார் அவரைத் தடுத்துவிடுகிறார். சிதிலமடைந்துபோன அந்த வீட்டில் மகள் உறங்கச் செல்வதை அவர் விரும்பவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் அந்தப் புதிய வீட்டிலேயே படுத்துவிடுகிறார் கமலாதாஸ். நீண்ட மனப்போராட்டத்தில் எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிவிடுகிறார். நள்ளிரவில் விழிப்பு வந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது பாட்டியின் வீட்டில் விளக்கு எரிந்தபடியே இருப்பதையும் பாட்டி சுவரோடு சரிந்து உட்கார்ந்திருப்பதையும் பார்க்க நேர்கிறது.  துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார் அவர். அங்கிருந்து கிளம்புவரைக்கும் அந்தப் பாட்டியின் விருப்பத்தை அவரால் ஈடேற்றமுடியவில்லை. ஊரைவிட்டு புறப்படும்போது அவரிடம் விடைபெறச் செல்லும்போது பாட்டி கண்கலங்குகிறாள். “விஷுவுக்கு வரணும் தெரிஞ்சதா?” என்று சொல்லி விடைகொடுக்கிறாள். ஆனால் துரதிருஷ்டவசமாக விஷுவுக்கு இரு வாரங்கள் முன்பாக அவர் உயிர் பிரிந்துவிடுகிறது.

இன்னொரு நிகழ்ச்சி. கமலாதாஸின் குடும்பநண்பர் தேஷ்முக் பல்கலைக்கழகத் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர். ஒருநாள் அங்கே சென்றபோது திடீரென ஒரு மரம் அங்கே பூத்துக் குலுங்குவதைக் காண்கிறார். ஒவ்வொரு கிளையிலும் பெரிய பூங்கொத்துகள். ஒவ்வொரு பூங்கொத்திலும் ரீங்கரிக்கும் வண்டுகள். வண்ணமயமான கோவில் திருவிழாவைப்போல அது காட்சியளிக்கிறது. மறுநாள் காலையில் அந்த அழகான காட்சியைக் காட்டுவதற்காக இரு நண்பர்களையும் அந்தத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். எங்கும் அமைதி. ஒரு பூ கூட இல்லை. எல்லாம் உதிர்ந்துபோயிருக்கின்றன. வெறும் மரம் மட்டுமே அங்கே காட்சியளிக்கிறது.

இப்படி ஒரு புனைகதைக்குரிய திருப்பங்களுடனும் ஆச்சரியங்களுடன் சில நிகழ்ச்சிகள் இத்தொகுப்பில் உள்ளன.

கமலாதாஸின் விவரணை மொழி ஆழ்ந்த வாசிப்புக்குத் துணைபுரிவதாகவே இருக்கிறது.  அவர் வழங்கும் குறிப்புகளும் தீட்டும் சம்பவங்களும் வாசகர்களைக் கட்டிப் போடும் விதத்தில் உள்ளன. ஒருசில தருணங்களில் அவருடைய சித்தரிப்புமொழி கவித்துவச்சாயலுடன் அமைந்திருக்கின்றன. அவை இடம்பெறும் பத்தியிலிருந்து அப்பகுதியை தனியே எடுத்துப் படித்தாலும் கூட தனித்த கவிதைகளாக விளங்கக்கூடிய அளவுக்கு கச்சிதமாக உள்ளன அப்பகுதிகள். அத்தகு பகுதிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

’ஒரு காலத்தில் வரவேற்புகள் நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு பெரிய கட்டடத்தைப் போன்றிருந்தது என் உடல். நடனக்கலைஞர்கள் நடனமாடினார்கள். இசைக்கலைஞர்கள் இசை பாடினார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் நலவிவரங்களை உசாவினார்கள். இறுதியில் கட்டடம் இடிந்தபோது சேரிவாசிகள் தங்களுடைய மூட்டைமுடிச்சுகளுடன் வந்து குடியேறினார்கள்.ஒவ்வொரு காலடியைப் பதிக்கும்போதும் அவர்கள் மன்னிப்பு கோரினர்.’

‘நிலவு வானத்தில் விரைவாக நகர்ந்துகொண்டிருந்தது. தெருவோரக் குப்பைத்தொட்டியில் இரண்டு தெருநாய்கள் உணவைத் தேடிக்கொண்டிருந்தன. அம்பேத்கர் சாலை ஆரம்பமாகும் இடத்தில் பேருந்து ஓட்டுநர்கள் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் நின்றவாறு அங்குமிங்குமாகத் திரும்பி நடனமாடும் ஒரு பைத்தியக்காரன். நான் நான்கடி பின்வாங்கினேன். அந்தப் பைத்தியக்காரனின் தாளத்தைச் சட்டென்று என் கால்கள் வரவேற்றன. நான் என் கூந்தலை அவிழ்த்தேன். உலகில் தனிமை சூழ்ந்த வெண்மாடத்தின்மீது நடனமாடுவதாக எனக்குத் தோன்றியது. கடைசி மனிதனின் உன்மத்த நடனம்.’

’எனக்கு பூனையைப்போல ஒன்பது பிறவிகள் இருந்தன. நெருப்பில் விழுந்து சாம்பலான பிறகும் மீண்டும் உயிர்ப்புடனும் அழகுடனும் வெளிப்படும் ஃபீனிக்ஸ் என்னும் இதிகாசப் பறவையைப்போல மீண்டும் மீண்டும் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிறேன். வாழ்க்கையின் போதையில் மீண்டும் உன்மத்தமாகிறேன். இறைவனின் பெயர்களை உச்சரிக்கும் உதடுகளில் இளம் சிவப்பு வண்ணத்தைத் தீட்டுகிறேன். அவை வார்த்தைகளைத் தேடியெடூக்க இயலாமல் நிலவு வீசும் இரவுகளில் காதல் பாடல்கள் இசைக்கின்றன.’

வாழ்க்கை குறித்த கமலாதாஸுடைய கண்ணோட்டங்களும் கருத்துகளும் கலவையானவை. மாறுபட்ட உச்சங்களிடையே ஊசலாடியபடி உள்ளன. ஒரு தருணத்தில் கட்டற்ற சுதந்திரத்தை விரும்பும் அவர் மனம் மற்றொரு தருணத்தில் பாதுகாப்பானதொரு அரவணைப்பை விரும்பும் பறவைக்குஞ்சாகவும் இருக்க விழைவதை இந்தத் தன்வரலாற்றின் மூலம் உணரமுடிகிறது. ஒரே தருணத்தில் பறவையாகவும் குஞ்சாகவும் இருக்க விழையும் மனத்தின் விசித்திரம் ஒரு கவிதையைப்போலவே புதிர் நிறைந்தது.

(என் கதை. கமலாதாஸ். தன்வரலாறு. தமிழாக்கம்: நிர்மால்யா. காலச்சுவடு பதிப்பகம், 669. கே.பி.சாலை, நாகர்கோவில்.)

Series Navigationஅய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்நித்ய சைதன்யா கவிதைகள்
author

பாவண்ணன்

Similar Posts

13 Comments

 1. Avatar
  ஷாலி says:

  “தீவிரமான படைப்புகளை வாசக சௌகரியத்துடன் வெளிப்படுத்தியவர் என்பதே மாதவிக்குட்டியை அல்லது கமலாதாஸை இன்றும் வாசிப்பிற்குரிய எழுத்தாளராக நிலைநிறுத்துகிறது.வாசகன் என்ற நிலையில் மட்டுமல்ல, எழுத்தாளன் என்ற நிலையிலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இருந்தன.மொழியைக் கச்சிதமாகவும் செறிவாகவும் கையாள்வது எப்படி என்பதை ச்சொல்லிக்கொடுத்த மறைமுக ஆசிரியர்கள் பலரில் அவரும் ஒருவர்.

  மொழிசார்ந்து அவரிடமிருந்து பயின்ற பாடங்கள் இவை.இவற்றைவிடவும் பார்வை சார்ந்து அவருடைய எழுத்தின் மூலம் பெற்ற பாதிப்பையே முதன்மையானதாகக் கருதுகிறேன்.” என்கிறார் இந்த நூலிற்கு முன்னுரை எழுதியிருக்கும் கவிஞர் சுகுமாரன்.

  இந்தப் புகழுரை ஒருபுறம் இருக்க,எப்போதும் வித்தியாசமாக யோசித்து கைதட்டல் வாங்கும் திருவாளர் ஜெயமோகன் அவர்கள் இங்கும் வித்தியாசமாகவே பேசுகிறார்.
  கமலாதாஸின் மீதான நாகரிகமற்ற – மிகக்கேவலமான குறிப்புகளை எழுதியிருப்பவர் ஜெயமோகன்.அதுவும் கமலாதாஸ் மறைவுக்குப்பின் அவர் பதிவொன்றினைத் தனது இணையத்தளத்திலே எழுதிய அஞ்சலிக்குறிப்பு அது.

  ஜெயமோகன் எழுதுகிறார்:”கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான்.அவர் அழகி அல்ல.கறுப்பான , குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண்.அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது, இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.எங்கும் எப்போதும் தன்னை

  முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர்.

  கமலா செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார்.ஆபாசமாகப்பேசுவார்.ஒன்றும் தெரியாத மழலையாக நடிப்பார்.உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார்.கீழ்மைகளைப் போற்றுவார்.விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார்.ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்து கொள்வார்.

  என்ன வக்கிரம் இருந்தால் இறந்துபோன ஒரு இலக்கியப்பெரும் ஆளுமைக்கு இத்தகைய ஒரு அவமதிப்பான அஞ்சலிக் குறிப்பை ஜெயமோகன் எழுதியிருப்பார்.கமலாதாஸ் இறுதியில் இஸ்லாத்தை தழுவியதால் ஏற்பட்ட எரிச்சலில் இப்படி எழுதி,தனது ஆணாதிக்க,மத ஆதிக்க கொதிப்பை தணித்திருக்கலாம்.

 2. Avatar
  அழகர்சாமி சக்திவேல் says:

  அன்புள்ள ஷாலி அம்மையார் அவர்களே… எழுத்தாளர் கமலா தாஸ் குறித்து நீங்கள் கூறிய வார்த்தைகள் முற்றிலும் சரியானவை. பெண்களின் செக்ஸ் சம்பந்தப்பட்ட விவகாரங்களை கமலா தாஸ் போல் திறம்பட எழுதிய பெண்கள் சில பேர்தான அப்படிப்பட்ட அவர் எழுத்தை, ஆபாசம் என்று கூறிய திரு ஜெயமோகன் கண்டிக்கத்தக்கவர் என்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால் உங்களிடம் என்து சில கேள்விகள். கமலாதாஸ் என்ற ஒரு பெண் எழுதும் ஆபாச வார்த்தைகளுக்கு நீங்கள் ஆதரவு தருவது எதனால்? காரணம் நீங்கள் ஒரு பெண் இனத்தைச் சார்ந்தவர் அல்லது பெண்ணுரிமையை ஆதரிப்பவர் என்பதால்தானே. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன், ஓரினத் துப்பாக்கி சூடு குறித்து திண்ணையில் ஒரு நண்பர் எழுதிய போது, “ஓரினச்சேர்க்கை ஆபாசமானது” என்று மூன்றாம் இனத்திற்கு எதிராய் நீங்கள் எழுதியதை உங்கள் நினைவிற்கு கொண்டு வர ஆசைப் படுகிறேன். ஆக ஆபாசம் குறித்து ஆணின் சுயநலப் பார்வை போலவே பெண்ணுக்கும் ஒரு சுயநலப் பார்வை இருக்கிறது என்பதை நீங்கள் இப்போதாவது ஒத்துக்கொள்வீர்களா?

  தமிழில் ஆபாச வார்த்தைகள் குறித்து, தமிழ் பத்திரிக்கைகளும், தமிழ் ஆண் மற்றும் பெண் இனமும் கொண்டுள்ள பார்வை மிகவும் நகைப்புக்கு உரியது. உதாரணத்திற்கு, ஒரு சூழ்நிலையைச் சொல்கிறேன். தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையைச் சரி வரச் செய்யாத ஒரு நபரை அவரது முதலாளி கடுமையாய்த் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை ஆங்கிலத்தில் எழுதுகிறவன் “The employee was fucked” என்று எழுதினால், அதை ஆங்கில எழுத்துலகம் ஆபாசமாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், அதையே தமிழில் “அந்த வேலையாள் தன முதலாளியிடம் ஒல் வாங்கினான்” என்று எழுதினால், உடனே பத்திரிக்கை உலகம் “ஐயையோ ஆபாசம்” என்று கொதிக்கிறது. இந்த விந்தையான பார்வை தமிழுக்கு மட்டும் என் வருகிறது தெரியுமா? ஆங்கிலத்தில் நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்ற பிரிவு இல்லை. ஆங்கில வார்த்தைகள் எந்த சூழ்நிலையை சம்பந்தபடுத்தி எழுதப்படுகிறதோ அதை வைத்தே அது அந்த இடத்தில் ஆபாசமான வார்த்தையா அல்லது இல்லையா எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் தமிழில் அப்படி இல்லை. உதாரணத்திற்கு, உணர்ச்சிகரமான ஒரு கதை கட்டத்தில், ‘You dirty ass hole’ என்ற ஒரு வார்த்தையை ஒரு ஆங்கிலக் கதையில் உபயோகித்தால் ஏற்றுக்கொள்ளப் படும் ஆபாசம், “போடா நாறக் குண்டி” என்று தமிழில் எழுதினால், அதை ஆணும் பெண்ணும் ஆபாசமாய்ப் பார்ப்பது ஏன்? குண்டி போன்ற வார்த்தைகளை நாம் தவறான வார்த்தையாய்ப் பார்த்து ஒதுக்கி வைக்கிறோம். இப்படி பற்பல வார்த்தைகளை ஆபாசம் என்று ஒதுக்கி வைத்தல், ஒரு சரியான அணுகுமுறை அல்ல என்பது எனது வாதம்.
  அம்மையீர்.. கமலாதாஸ் என்ற பெண்ணுக்கு ஒரு பெண் மற்றும் ஆணின் ஆபாசங்களை சொல்ல உரிமை இருக்கும்போது, நிச்சயம் ஒரு மூன்றாம் இனத்திற்கும் தங்கள் செக்ஸ் ஆபாசப் பிரச்சினைகளை ஒரு ஆணோடு அல்லது ஒரு பெண்ணோடு சம்பந்தப்படுத்தி சொல்ல உரிமை உண்டு என்பதை நீங்கள் உணர்வீர்களா? என்னைப் பொறுத்த வரை தமிழ் எழுத்து உலகம் மாற வேண்டும். தமிழ்க்கவிதைகளின் வடிவம் மாறியது போல, கதை சொல்லும் வடிவங்களிலும் மாறுதல் வேண்டும். ஜெயமோகன் போன்ற கிழ எழுத்தாளர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். (ஜெயமோகன் சார்..முகநூல் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் வாருகிறார்கள்..நானும் கொஞ்சம் உங்களை வாரிக்கொள்கிறேனே?)
  பெரும்பாலான திராவிடத் தமிழர்கள், தங்கள் வீடுகளில் கொச்சைத் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆபாச வார்த்தைகளை கூச்சமின்றி உபயோகிக்கிறார்கள். சொல்லும் தமிழ்க்கதைகளில், ஒரு உண்மைத்தன்மை வேண்டும் என்றால் இந்த ஆபாசம் அனுமதிக்கப்பட வேண்டும். நான் போன வாரம் ஒரு கதை எழுதி இருந்தேன். அந்தக் கதையில் பெண்களுக்கும் ஓரின ஆசை உண்டு என்றும், ஆண்களின் மீசை என்பதை வைத்து ஒரு பெண்ணின் காம ஆசைகள் இல்லை என்பதையும் சொல்ல வந்திருந்தேன். ஆனால் அந்தக் கதையை நான் எழுத ஆரம்பிக்கையில், ஒரு ஜெயமோகன் போன்ற என் இலக்கியப் பார்வையை விடுத்து, கதையில் சம்பந்தப்பட்ட ஒரு திமிர் நிறைந்த ஆண் நபரே கதை சொல்லும் பாணியில் எழுதி இருந்தேன். ஒரு படிக்காத கிராமத்து தொழிலாளி ஆபாசம் கலந்துதான் பேசுவான். தமிழ் இலக்கணம் பிறழ்ந்துதான் பேசுவான். இது போன்ற ஆபாசப் பிறழ்வுகள் அனுமதிக்கப்படுகிற போதுதான், ஒரு தமிழனின் உண்மையான பரிமாணம் கதை வடிவில் வெளிப்படும் என்பது எனது ஆபாசம் குறித்த பார்வை ஆகும்.
  ஓரினச்சேர்க்கை என்பதே செக்ஸ் உறவின் இன்னொரு பரிமாணமாய் வருவது என்பதால், அங்கே ஆபாசத்தை எழுதுவதில் எனக்கு ஒரு தாராளம் தேவைப்படுகிறது. அப்போதுதான், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தெரியாத சில பல செக்ஸ் உண்மைகளைத் தெளிவாய் சொல்ல முடியும் என்பது எனது தாழ்மையான எண்ணம்.

 3. Avatar
  ஷாலி says:

  //ஓரினச்சேர்க்கை என்பதே செக்ஸ் உறவின் இன்னொரு பரிமாணமாய் வருவது என்பதால், அங்கே ஆபாசத்தை எழுதுவதில் எனக்கு ஒரு தாராளம் தேவைப்படுகிறது. அப்போதுதான்…..//

  அய்யா!-அம்மையார்!-திருநங்கை! சக்திவேல் அழகர்சாமி அவர்களே! நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும்…உங்களுக்கு அதுவெல்லாம் பொருட்டல்ல…எப்படியாவது ஓரினச்சேர்க்கையாளர்களைக் கொண்டு வந்து மணவறை மேடையில் ஏற்றி சுப முகூர்த்தத்தில் “மாங்கல்யம் தந்துநானே” பாடவைக்க வேண்டும் என்று தணியாத ஆசை.

  இந்த முறைகேடான ஆசைக்கு அரசு அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.நாங்களெல்லாம் அதற்கு அட்சதை தூவி ஆசிர்வதிக்க வேண்டும்.இப்படி செய்துவிட்டால் பொதுநலப் பார்வையாளர் என்ற சான்றிதழ் ஷாலிக்கு கிடைத்துவிடும்.

  இந்த ஓரினச் சேர்க்கையாளர்களால் இந்த நாட்டுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது.? ஒரு மண்ணும் இல்லை! கிடைத்தது எல்லாம் எய்ட்ஸ்,ஹெச்ஐவி நோய்களே!இந்த சமுதாய நோய்கள் நாட்டு மக்களுக்கு தாராளமாக தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு ஓரின உறவு (திரு)மணம் அழகர்சாமி அவர்களுக்கு அனுமதிக்கப்படவேண்டும்.

  //ஓரினச்சேர்க்கை என்பதே செக்ஸ் உறவின் இன்னொரு பரிமாணமாய்….// என்று திருநங்கையரின் திருமந்திரத்தை சக்திவேல் அழகர்சாமி அழகாக சொல்லிவிட்டார்.ஆக சுருக்கமாக ஆபாசத்திற்கு,அசிங்கத்திற்கு அங்கீகாரம் தேடி அலைகிறார்.மூன்றாம் பாலினம் என்று துப்பட்டாவை போர்த்தி உண்மையை மறைக்க முடியாது.

  ஆண்டவன் படைப்பில் ஆண் இனம் ,பெண் இனம் மட்டுமே! மூன்றாவது இனம் என்று எதுவுமில்லை.இவர்கள் தங்களை “இரண்டாங்கெட்டனாக” மாற்றிக் கொண்ட மன நோயாளிகள்.அனுதாபத்திகுரியவர்கள். ஆனால் அங்கீகாரத்திற்குரியவர்கள் அல்ல. ஆபாசம் இலை மறை காயாக எல்லா இடங்களிலும் மக்களின் வாழ்வில் இருக்கத்தான் செய்கிறது.இதை பளிச்சென்று எடுத்துக்காட்ட “பெட்ரோமாக்ஸ் லைட்” தூக்கும் வேலையை சக்திவேல் அழகர்சாமி செய்ய வேண்டாம்.
  ஆபாச வார்த்தை எழுதுபவர்களேல்லாம் இலக்கியவாதி திரு.பெருமாள் முருகனாகிவிடமுடியாது.

  1. Avatar
   அழகர்சாமி சக்திவேல் says:

   ஷாலி அம்மையீர்..

   நான் ஆபாசத்திற்கு ஆதரவாக வாதாடவில்லை. ஆனால், ஆபாசத்தோடு சம்பந்தப்பட்ட சமூகப் பிரசினைகளை தொடும்போது, ஆபாச வார்த்தைகள் அனுமதிக்கப்பட்டால், அது அந்த சமூக பிரச்சினைகளின் உண்மைகளை இன்னும் தெளிவாக எடுத்துக்கூற வசதியாக இருக்கும் என்றுதான் சொல்ல வருகிறேன்.

   உலகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அதில் ஒரு சமூகப் பிரச்சினைதான் ஓரினச்சேர்க்கை பிரச்சினை. உலகத்தின் மற்ற பிரச்சினைகளை பேச நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ஓரினச்சேர்க்கை பிரச்சினை பற்றி பேச மிகச்சிலரே முன் வருகிறார்கள். அதை வெளியிட திண்ணை போன்ற ஒரு சில பிரபலமான பத்திரிக்கைகளே முன் வருகின்றன. இதற்கு திண்ணைக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன்.

   தற்போது, பல பெண்கள், living relationship இல் வாழ ஆசைப்படுகிறார்கள். மாங்கல்யமே வேண்டாம் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்க ஓரினச்சேர்க்கை செய்பவர்கள் மணமுடித்து வாழ நினைப்பதற்கு நீங்கள் சந்தோசம்தானே படவேண்டும்? நீங்கள் அட்சதை தூவாவிட்டாலும், தூவுவதற்கு பல படித்த, புரிந்து கொண்ட மனிதர்கள் தயாராய் இருக்கிறார்கள். எனவே நீங்கள் வருந்தி வருந்தி வாந்தி எடுக்க வேண்டாம்.

   கணினி இயலின் தந்தை ஆலன் டுரிங் கதை படியுங்கள். அந்த ஓரினச்சேர்க்கையாளரால் நமக்கு கணினி கிடைத்து இருக்கிறது. கணினி மூலம்தான் நீங்கள் என்னுடன் இப்போது அளவளாவிக் கொண்டு இருக்கிறீர்கள். ஐஸ்லாந்து, லக்சம்பெர்க், பெல்ஜியம் போன்ற பல நாடுகளின் அரசியல் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் ஓரினச் சேர்க்கையாளர்கள்தான் என்று நீங்கள் புத்தகத்தை எடுத்துப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே? ஒலிம்பிக்கில் எத்தனை தங்கப்பதக்கங்கள், டென்னிஸில் மார்டினா நவரோடிலோவா பெற்ற பதக்கங்கள் எத்தனை…இப்படி பல விசயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

   ஆபாசத்திற்கும், அசிங்கத்திற்கும் கமலாதாஸ் போன்றோர் பாவாடையை போர்த்தி மறைக்கையில் மூன்றாம் இனமும், நீங்கள் சொல்லும் துப்பட்டா என்ற மேலாடையை வைத்து மூடி மறைத்தால் என்ன தவறு?

   அறிவியலை முழுமையாய் நம்பும் எவனும் ஆண்டவன் உண்மையிலேயே இருக்கிறானா என்று சந்தேகப்படுகிறான். ஆனால் அறிவியலை முழுமையாய் நம்பும் எல்லோரும் மூன்றாம் இனம் இருக்கிறது என்று முழுமையாய் நம்புகிறார்கள். ஓரினச்சேர்க்கை ஒரு மனநோய் இல்லை என உலக மன நல மருத்துவ சங்கம் சொல்கிறது. இந்திய மன நல மருத்துவ சங்கமும் அதை ஆமோதிக்கிறது. இதையெல்லாம் இணையதளங்களில் நீங்கள் போய் வாசித்துப்பாருங்கள். அப்போது உங்களுக்கே புரியும்..யாருக்கு உண்மையில் மனநோய் இருக்கிறது என்று.

   நான் இலக்கியவாதியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் சமூக அவலங்கள் குறித்துப் பொங்கும் ஒரு சமூகவாதி. என் எழுத்துக்கள் சமூக அவலங்கள் குறித்தே நகர்கின்றன. சாக்கடைகளில் வாழ்வோரே பெரும்பாலும் என் கதைகளின் நாயக நாயகிகள்.

   நீங்கள் என்னை ஆணாகவும் நினைக்கலாம், பெண்ணாகவும் நினைக்கலாம் இல்லை உங்கள் எண்ணப்படி என்னை இரண்டும்கெட்டான் ஆகவும் நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். அது குறித்து எனக்குக் கவலையில்லை. ஏனெனில் என் அகராதியில் இவர்கள் எல்லோரும் மனிதர்களே.

   நன்றி.
   அழகர்சாமி சக்திவேல்

 4. Avatar
  Ali says:

  ஷாலி அவர்களின் ஷரியா சட்டத்தின் மீதான தாகமும்.
  மதமோகமும் தெரிகின்றது :-p

 5. Avatar
  ஷாலி says:

  //ஓரினச்சேர்க்கை ஒரு மனநோய் இல்லை என உலக மன நல மருத்துவ சங்கம் சொல்கிறது. இந்திய மன நல மருத்துவ சங்கமும் அதை ஆமோதிக்கிறது. இதையெல்லாம் இணையதளங்களில் நீங்கள் போய் வாசித்துப்பாருங்கள். அப்போது உங்களுக்கே புரியும்..யாருக்கு உண்மையில் மனநோய் இருக்கிறது என்று…..//

  நாம் இணையதளத்தில் தேடிப்பார்க்கும்போது ஐநா நிறுவனமே மாற்று பாலினத்தவர்களை மன நோயாளிகள் என்று கூறும் செய்திதான் கிடைக்கிறது.இது உலக சுகாதார நிறுவனம் 2018 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாற்றும் வரை இவர்கள் மன நோயாளிகளே!

  According to the World Health Organization, being transgender is a mental illness.

  But that could soon change ,the new version ICD-11 (International classification of diseases) is expected to be approved in 2018.

  http://www.chicagotribune.com/news/nationworld/ct-transgender-mental-illness-classification-20160729-story.html.

  //தற்போது, பல பெண்கள், living relationship இல் வாழ ஆசைப்படுகிறார்கள். மாங்கல்யமே வேண்டாம் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்க ஓரினச்சேர்க்கை செய்பவர்கள் மணமுடித்து வாழ நினைப்பதற்கு நீங்கள் சந்தோசம்தானே படவேண்டும்?…//

  அய்யா அறிவு ஜீவி அழகர்சாமி அவர்களே! ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேருவதே திருமண பந்தம்.இதுதான் இயற்கையான உறவு.

  நீங்கள் ஆதரிக்கும் பெண்ணும் பெண்ணும் சேருவதற்கு பெயர் எப்போதுமே ஓரினப்புணர்ச்சி தான். இது திருமண பந்தத்தில் சேராது.தயவு செய்து திருமணம்,மாங்கல்யம் என்ற சொற்களை கொச்சைப் படுத்தாதீர்கள்”.கெடக்குறது எல்லாம் கெடக்கட்டும் கெழவியை தூக்கி மனையில்” என்பதுதான் அழகர் சாமி அவர்களின் ஆசை.வேண்டாம் சாமி! இந்த விபரீத ஆசை.

  இந்தியா கொஞ்ச நாட்களுக்கு இந்தியாவாகவே இருக்கட்டும்.

  மற்றபடி ஷரியா சட்டத்தின் மீதான தாகமும்.
  மதமோகமும் அதிகமாகத் இருந்ததால்…முகலாய மன்னர்கள் “ஹரம்” என்னும் அந்தப்புரங்களைக் கட்டி, ஆயிரக்கணக்கான பெண்களை அலிகளின் மேற்பார்வையில் விட்டு அனுபவித்தனர் என்பதையும் Ali அறிந்திருக்கக் கூடும்.அதிகார அலிகளை ஆதரிக்கும் மர்மம் இதுதானோ?

 6. Avatar
  Alagersamy Sakthivel says:

  Hi shali,

  Please read this United Nations statement and it talks about the intention of United Nations to protect discrimination against any sexual orientation and gender identity. In my letter, I asked you to refer World Psychiatric Association and Indian Psychiatric association. But you did not go to that websites and finally you referred some other documents of World Health Organisation. It is OK. My answer is, Yes. WHO recommended to take out the homosexuality from disease category and it will be implemented in 2018. That means homosexuality is scientifically OK right? Did you read the article that you specified in your letter thoroughly. In the document that you indicated, WHO describes so many reasons of why WHO want to take out homosexuality from disease category.

  In that case, will you stop your stupidity and arrogance?

  Do you want some more documents? I will give it you.

  Thanks

  Alagersamy Sakthivel

  http://www.ohchr.org/EN/Issues/Discrimination/Pages/LGBTUNResolutions.aspx

 7. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையைச் சரி வரச் செய்யாத ஒரு நபரை அவரது முதலாளி கடுமையாய்த் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை ஆங்கிலத்தில் எழுதுகிறவன் “The employee was fucked” என்று எழுதினால், அதை ஆங்கில எழுத்துலகம் ஆபாசமாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், அதையே தமிழில் “அந்த வேலையாள் தன முதலாளியிடம் ஒல் வாங்கினான்” என்று எழுதினால், உடனே பத்திரிக்கை உலகம் “ஐயையோ ஆபாசம்” என்று கொதிக்கிறது. //

  இங்கேதான் கலாச்சார வேற்றுமை வருகிறது. “Employee is fucked” என்ற பதம் “பணியாள் புணரப்பட்டான்” என்ற பொருளில் வருவதல்ல. அது இடக்கரடக்கல். அதற்கு பணியாள் அவன் எஜமானனால் நிந்திக்கப்பட்டான் / கண்டிக்கப்பட்டான் / தண்டிக்கப்பட்டான் என்றே பொருள். இந்த பொருளுக்கு ஆங்கிலம் மாறி அனேக காலம் ஆகிவிட்டது. அதே போல நமது மொழியிலும் ”** வாங்கினான்” என்ற உரையாடல் புழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. காரணம் ஆங்கிலேயர்கள் – குறிப்பாக ஆண்-பெண் இருபாலருமான அமெரிக்கள் – பொதுவில் மேற்படி சொற்களை (வசவு) புழங்கும் அதே விகிதத்தில் அல்ல நாம் பாவிப்பது.

  இதே வாதம்தான் “நாற குண்டி” சொல்லுக்கும்.

 8. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // தமிழ்க்கவிதைகளின் வடிவம் மாறியது போல, கதை சொல்லும் வடிவங்களிலும் மாறுதல் வேண்டும். ஜெயமோகன் போன்ற கிழ எழுத்தாளர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். //

  நல்ல நகைச்சுவை. ரசித்தேன்.

  1. Avatar
   BSV says:

   எனக்குப் புரியவில்லை. இதில் எங்கே இருக்கிறது நகைச்சுவை?

   1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    புரியவில்லை என்றால் விடுங்கள் BSV. எல்லாருக்கும் எல்லாமும் புரிந்தே ஆகவேண்டும் என்று ஒன்றும் கட்டாயமில்லையே.

 9. Avatar
  Ali says:

  ஷாலி நான் என்ன சொன்னேன் நீங்கள் என்ன பிதற்றுகிறீர்கள், நாடி நரம்பு ரத்தம் எல்லாம் வாஹாபிஸம் ஓடும் ஒருவராலே (மூன்றாம் பால்) இப்படி சிந்திக்க முடியும்.

 10. Avatar
  ஷாலி says:

  // நீங்கள் என்ன பிதற்றுகிறீர்கள், நாடி நரம்பு ரத்தம் எல்லாம் வாஹாபிஸம் ஓடும் ஒருவராலே (மூன்றாம் பால்) இப்படி சிந்திக்க முடியும்.//

  ஜெனாப்.ALI. அவர்கள் நான் பிதற்றுவதாகச் சொல்கிறார்.சரி!….பிதற்றாமல் அலி அவர்கள் சொல்லட்டுமே…இஸ்லாத்தில் மூன்றாம் பால் எனப் பிதற்றப்படும் அலிகளுக்கு அல்லாஹ்வின் சட்டத்தில் பூரண கும்ப மரியாதை உண்டு என்று ஆதாரத்துடன் நிரூபிக்கலாமே!

  நம்மைப் பொருத்தவரை அலிகள் அரியணை ஏறி ஆட்சி செய்துள்ளார்கள்.ஆனால் மணவறை ஏறி ஆணும் ஆணும் …..பெண்ணும் பெண்ணும் சேருவதை திருமணம் என்னும் பந்தத்தில் இணைத்ததாக எந்த மதமும் கூறவில்லை.இந்து மதம் உள்பட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *