நான் கவிஞன் இல்லை. ஓர் எழுத்தாளன். கவிதைகளை இரசிப்பவன். ஆனால் அவை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தால் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பது வீண் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஆங்கிலப் பள்ளியில் முழுதுமாக என்னுடைய கல்வியைத் தொடர்ந்ததால் ஆங்கிலக் கவிதைகளை நிறைய படித்து இரசித்துள்ளேன். அவை பெரும்பாலும், ” The Golden Treasury ” என்னும் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்துதான் என்று கூறலாம். உலகப் புகழ்மிக்க இந்த நூலைத் தொகுத்தவர் Francis Turner Palgrave என்பவர். இதில் மொத்தம் 517 கவிதைகள் உள்ளன. அதை நான் சிங்கப்பூரில் ரேபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பாட நூலாக பயன்படுத்தினேன். ( இப்போதும் அது சென்னை ஹிக்கின்பாத்தம் புத்தகக் கடையில் விற்பனையில் உள்ளது.)
நான் ஷேக்ஸ்ப்பியர், ஷெல்லி , கீட்ஸ், வொர்ட்ஸ்வோர்த் , பைரன், டென்னிசன், மில்ட்டன், ஹார்டி ராபர்ட் ஃப்ராஸ்ட் , யீட்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த கவிஞர்கள் எழுதிய ஆங்கிலக் கவிதைகளைப் படித்து மகிழ்ந்துள்ளேன். அதுபோன்றே தமிழில் பாரதி, பாரதிதாசன் கவிதைகளையும் படித்து இரசித்துள்ளேன்.
ஆனால் ஏனோ தெரியவில்லை, இவற்றில் ஏதும் என் மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரம் இடவில்லை – ஒருவர் எழுதிய கவிதையைத் தவிர! ஒருவேளை அந்தக் கவிதை என் உள்ளம் கவர்ந்த ஒருவருக்காக உருக்கமாக எழுதப்படட இரங்கற்பா என்பதால் இருக்கலாம்.
ஆம். அது ” இதயத்தைத் தந்திடு அண்ணா ” என்று அண்ணா மறைந்ததையொட்டி 9.2. 1969 அன்று சென்னை வானொலியில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அளித்த கண்ணீர்க் கவிதாஞ்சலிதான்!
அண்ணன் நினைவாக கலைஞரின் கண்ணீர் ( கவிதை ) மழை இதோ:
பூவிதழின் மென்மையிலும் மென்மையான
புனித உள்ளம் – அன்பு உள்ளம் –
அரவணைக்கும் அன்னை உள்ளம்! அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும் –
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும் –
விழிமலர்கள் வேலாகும், வாளாகும்
தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகுதென்றால் !
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது ;
கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை!
அம்மலரே எதிரிகளை மன்னித்து
நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்!
மக்களாட்சி மலர் குலுங்க
சமதர்மப் பூ மணக்க
நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே – தினம்
பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்.
உனக்காக எனைத் துறப்பேன்; என –
ஒரு கோடித் தமிழ் இளைஞர்
பாடி நின்ற பாட்டுக்குப் பெருந் தலைவன்…
முறுகிற் செறிந்த தமிழார்வம்
முதிரா இளைஞர் ஆருயிராய்ப்
பெருகச் செய்த செயல் மறவர்
சிறப்பைப் பாடக் கேண்மினோ!
தங்கு சனி வேல் செய்த புண்களை
அன்பெனும் வேது கொண்டொற்றியும்
செங்கனி வாய் மருந்தூட்டுவார்
சீர்மையைப் பாடக் கேண்மினோ!
பொருதடக்கை வாளெங்கே; மணி மார்பெங்கே?
போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று
தம்பியரைக் கேட்டதனைக் கேண்மின்!
கேண்மின்!
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற் சென்னி
காஞ்சியிருக்கக் கலிங்கம் தொலைந்த
களப் போர் பாடத் திறமினோ என்று
மயல் கொண்ட மாதர்தமைத் துயில் எழுப்பச்
செயங் கொண்டார் பாடினார்,
களப்பரளி … கலிங்கத்துப் பரணி
அளப்பரிய வீரத்தின் புகழ்ப்பரணி – யான்
கவிப்பரணி யேறி, காஞ்சிபுரப் பரணி
பாடி நின்றேன் இன்று
நன்றென்றார் அண்ணா –
- நோய்வாய்ப்பட்ட ” சுமங்கலிகள் “
- மிளிர் கொன்றை
- திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி
- எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”
- கொதிக்கிறது மக்கள் வெள்ளம்
- திருப்பூர் திரைப்படவிழா :சுப்ரபாரதிமணியன்
- ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்
- நெகிழன் கவிதைகள்
- இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை
- தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15
- இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்