நோய்வாய்ப்பட்ட ” சுமங்கலிகள் “

This entry is part 1 of 12 in the series 8 ஜனவரி 2017

டீ சர்ட் போட்ட பொண்ணா இருந்தா கார்மெண்ட்சில வேலை பாத்த ” பொண்ணா இருக்கும் சட்டைப் போட்ட பொண்ணா இருந்தா மில்லில் வேலை பாத்த “ பொண்ணா இருக்கும் . லுங்கி கட்டிய பொண்ணா இருந்தா வீட்டு வேலை பாத்த பொண்ணா இருக்கும் . இல்லீன்னா வீட்லே வேலை பாக்கற பொண்ணா இருக்கும். நைட் கவுன் போட்டப் பொண்ணா இருந்தா வீட்லே சமைக்கறதுக்குன்னே இருக்கற பொண்டாட்டிமாரா இருக்கும் . – இப்படி பெண்களுக்கான டிரஸ் கோட் dress […]

திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி

This entry is part 3 of 12 in the series 8 ஜனவரி 2017

                                                   முருகபூபதி இலக்கியச்சிந்தனை அமைப்பின்  விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன்  உரையாடியபொழுது,  ” இலங்கை  திரும்பு முன்னர் சென்னையில்  ஓடிக்கொண்டிருக்கும்  அர்த் சத்யா படத்தையும் பார்த்துவிட்டுச்செல்லுங்கள். ” என்றார். 1981 இல் இரண்டு முக்கிய அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் பொலிஸார் நடத்திய வேட்டையில்  யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டதை  சித்திரிக்கும் ஒரு  இலட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையும் […]

எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”

This entry is part 4 of 12 in the series 8 ஜனவரி 2017

அன்பு நண்பர்களுக்கு, காவ்யா வெளியீடாக எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?” தமிழின் முதல் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷன் நாவலாக வெளியாகியிருக்கிறது. தமிழில் Mathematical Fiction என்று கைகாட்டப்படும் நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன.. அகல் பதிப்பகத்தின் “எண்ணும் மனிதன்” , இரா. நடராசனின் நம்பர் பூதம் போன்றவைகள் மொழிபெயர்ப்பு நூல்களே.. கிட்டத்தட்ட shakuntala devi puzzle புத்தகம் போன்றது. Mathematical Fiction என்கிற பகுப்புக்கு தகுதி பெறுவதற்கு அந்த புனைக்கதையின் Plot எண்களால் திசை திரும்பியாகவேண்டிய […]

கொதிக்கிறது மக்கள் வெள்ளம்

This entry is part 5 of 12 in the series 8 ஜனவரி 2017

சூரியப்பெண்ணின் ஆட்சியில்…….   ஒளி யருவியில் குளித்தனர் மக்கள் பிரகாச வெளியில் பறந்தன குருவிகள் வெளிச்சம் பார்த்தன குஞ்சுகள்   சூரியப்பெண்ணுக் கஞ்சி பொய்க்காமல் பெய்தது மழை மறக்காமல் மாறின பருவங்கள்   ஆட்சி சூரியப்பெண்ணிடம் ஆதிக்கமோ சந்திரப்பெண்ணிடம்   சூரியப்பெண்ணின் காலடிச் சுவட்டில் தடம் பதித்தார் சந்திரப்பெண் சூரியப்பெண் இருக்குமிடம் சந்திரப்பெண்ணின் இருப்பிடம் சுய ஒளியில் சூரியர் இரவலில் சந்திரர்   ஒரு நாள்   தோல்வி அறியா சூரியப்பெண் மரணத்திடம் தோற்றார் எப்படி?????   […]

திருப்பூர் திரைப்படவிழா :சுப்ரபாரதிமணியன்

This entry is part 6 of 12 in the series 8 ஜனவரி 2017

” அப்பாக்கள் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலும் கணவன்மார்கள் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை .ஏன் ” என்ற கேள்வியை  நண்பர் ஒருவர் திருப்பூர் திரைப்படவிழாவின் ( முதல்நாளில் திரையிடப்பட்டப் படங்கள் அனைத்தும் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை )  படங்களைப் பார்த்து விட்டுக் கேட்டார்.. அவருக்கான பதிலை நானும் சில திரைப்படங்களிலிருந்தே சொன்னேன். “ முஸ்டாங்  “ என்ற துருக்கியப் படம்  ஒரு குடும்பத்தைச் சார்ந்த அடக்கப்பட்ட சகோதரிகள்  ஒவ்வொருவகையிலும்  குடும்பத்தை விட்டு வெளியேறுவதைச் சொல்கிறது. பெற்றோரை இழந்து மாமனாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்ட  பள்ளி […]

மிளிர் கொன்றை

This entry is part 2 of 12 in the series 8 ஜனவரி 2017

குந்தவை நாச்சியார்     மிளிர்கொன்றை.. சாலை வெறிச்சோடியிருந்தது. தெருவிளக்குகளின்னும் ஒளியூட்டப்பட்டிருக்கவில்லை. அந்தியொரு போர்வையைப்போல கவிழ்ந்திருந்தது. எனது சுண்டுவிரலைப்பற்றியிருந்த சத்யாவின் பிஞ்சுவிரல்கள் வியர்த்திருந்தன. உதிர்ந்திருந்த கொன்றைமலர்களைத் தவிர்த்தபடி நடந்துகொண்டிருந்தோம். எனது வலதுமுழங்காலின் வலிபற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபொழுது சத்யா கேட்டான். ” மம்மி எப்ப டாடி வருவாங்க?” நடந்தபடியே பேசியதில் அவனுக்கு மூச்சிரைத்தது. “மம்மி வில் நெவர் கம்பேக் தம்பி” என்றேன். “ஈஸ் மாம் வெண்ட் டூ காட் டாடி ?” “யாரு உங்கிட்ட அப்டி சொன்னாங்க?” “கிரான்மாதான் டாடி. நிவினோட […]

ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்

This entry is part 7 of 12 in the series 8 ஜனவரி 2017

.இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ● ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றிச் சுய அறிமுகம் செய்து அலுத்து விட்டது. “Mozart Of Madras”, இசைப்புயல், “Musical Storm”, “கிழக்கின் ஜோன் வில்லியம்ஸ்”, “ஒஸ்கார் நாயகன்” இப்படியும் பலபுகழ் கூறி அவரை விழித்து ஏதேனும் எழுதலாம் என்றால், அதையும் நிறையப் பேர் எழுதத் தொடங்கிவிட்டனர். அதையும் தாண்டி, அவரது பாடல்கள் மீது சில ரசனைக்குறிப்புகள் எழுதலாம் என்பதே தற்போதைக்குக் கொஞ்சம் ஆசுவாசமளிக்கின்றது. Lahari Music, Ayngaran Music, Aditya Music, Lahari Music, Sa […]

நெகிழன் கவிதைகள்

This entry is part 8 of 12 in the series 8 ஜனவரி 2017

நெகிழன் 1) கர்த்தாவே நீர் இடது பக்க வானத்தில் சிறகசைக்கும் வெண்புறாவை அண்ணாந்து ரசித்தீர். நானோ உங்களுக்கு பின் திசையில் ஒரு மரக்கிளையில் வில்லேந்தி நின்றபடி அம்பெய்து அப் புறாவை வீழ்த்தினேன். மரணத்தின் விளிம்பில் நின்று குருதியில் மூழ்கித் துடித்த அச் செம் புறாவின் இறக்கையை ஒடித்து ஒவ்வொரு இறகாய் வெடுக் வெடுக்கென பிடுங்கி தீயில் பொசுக்கித் தின்று பசியாறினேன். ஒட்டிய இவ் வயிற்றை சற்றே உப்பச் செய்யும் இம் முயற்சியில் என் பாவக் கணக்கை மேலும் […]

இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை

This entry is part 9 of 12 in the series 8 ஜனவரி 2017

    [HOAG’s Bull’s Eye Galaxy] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பால்மய வீதியின் பரிதி மண்டலக் கோள்கள் சுழன்றோடும் விளையாட்டு மந்தை ! ஒளிமந்தை ஒவ்வொன்றும் ஒருவிதம் ! வட்ட வடிவத்தில் இரட்டை வளையங்கள் சுற்ற மையக்கருவை வணங்கி வலம்வரும் ஒளிமய மான மந்தை ! புதுவித மந்தை ! இதுவரைக் காணா விந்தை ! சூரிய மண்டலம் சுற்றும் சுருண்ட பால்வீதி போலின்றி உருண்டை  வடிவம் ! கோடான கோடி […]

தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்

This entry is part 10 of 12 in the series 8 ஜனவரி 2017

நான் கவிஞன்  இல்லை. ஓர் எழுத்தாளன். கவிதைகளை இரசிப்பவன். ஆனால் அவை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தால் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பது வீண் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஆங்கிலப் பள்ளியில் முழுதுமாக என்னுடைய கல்வியைத் தொடர்ந்ததால் ஆங்கிலக் கவிதைகளை நிறைய படித்து இரசித்துள்ளேன். அவை பெரும்பாலும், ” The Golden Treasury ” என்னும் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்துதான் என்று கூறலாம். உலகப் புகழ்மிக்க இந்த நூலைத் தொகுத்தவர் Francis Turner Palgrave என்பவர். […]