நாளென்பது கேடாய்
நான் என்பது தீண்டதகாததாய்
வாழ்வின்று பாழாய் போனது
யாருக்கும் இல்லை அபத்தமாய்…
ஓடி களைத்ததில் ஒரு மிடறு
நீர் கொடுக்க கைகள் இல்லை
அன்பென்பது வெறும் வார்த்தையாய்…
உண்டு உறங்கி எழுந்து இருந்து
மிச்ச சுழற்சியில் சுழன்று சுழன்று
ஓடாய் தேய்ந்தாலும்
உயிர் இன்னும் விடாமல் ஒட்டிக்கொண்டே…
மதி கெட்ட மனது கையேந்தி கையேந்தி காயங்களைத் தழும்பாக்கிக் கொண்டது
புறங்கணிப்பில் மானம் கெட்டு
வாழ்வுதனில் சிறுமைப்பட்டு
இருத்தலில் பாவங்களைக் கணக்கிட்டு
ஆசைகளுக்கெல்லாம் தீயிட்டு
வார்த்தைகளையெல்லாம் தொலைத்து
ஊனமாகி போனேன் இன்று…
நிஜம் கொன்று நினைவு தின்று நிழலாய் மட்டும் வாழ்வு
நிறங்களற்று…
– தினேசுவரி,மலேசியா
- இந்தியா 2018 ஆண்டில் சந்திரயான் -2 விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் நிலவை நோக்கி ஏவப் போகிறது.
- வேண்டா விடுதலை
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 3
- அரிய செய்திகளின் சுரங்கம் [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]
- நாற்காலி மனிதர்
- பாவங்கள்…
- தொடுவானம் 161. பயிற்சி மருத்துவம்
- ஆச்சி – தாத்தா
- ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18
- கவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும் புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்
- பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலையும் இலக்கியமும்): இடைக்காலம் (கி.பி 476- 1453)
- தளம் சிற்றிதழ் – ஒரு விமர்சனம்