மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்

This entry is part 7 of 18 in the series 23 ஏப்ரல் 2017

La couverture

எனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய  இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த  தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு மொழியில் வருவதில் பிரத்தியேக மகிழ்ச்சி. சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே பிரெஞ்சுமொழியில் வரவேண்டும் , வருமென்ற கனவுடன் எழுதப்பட்டவை,  புதுச்சேரி,யையும்  பிரான்சு  நாட்டையும் களனாகக் கொண்டவை, எனவே பிரெஞ்சு வாசகர்களுக்கு அந்நியத் தன்மையைத் தராது என்பது நிச்சயம்.

 

மாத்தா ஹரி நாவலுக்கு தமிழில் பிற எனது படைப்புகளைப் போலவே மனமுவந்து பாராட்டி எழுதியவர்கள்  அதிகம்

 

மாத்தாஹரி நாவலை வாசித்த  திரு. கி. அ. சச்சிதானந்தம் வார்த்தை இதழ் ஆசிரியர் குழுவிலிருந்த திரு. தேவராஜுவிடம், இந்நாவல் குறித்து உங்கள் இதழில் எழுதுகிறேன் என தொலைபேசியில் தெரிவித்து அவ்வாறு எழுதி த் தந்த து தான் முதல் மதிப்புரை, அம்மதிப்புரையில் இடம்பெற்ற குறிப்பிடிருந்த இவ்வரிகள் என்னால் மறக்க முடியாதவை, « ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.” அதன்பிறகு எழுத்தாளர்கள் ரெ. கார்த்திகேசு, வே.சபாநாயம் ; பேராசிரியை  ராஜலட்சுமி, பேராசிரியர், பா. ரவிக்குமார்  என இந்நாவலுக்கு மதிப்புரைகள்  எழுதினார்கள். பிரபஞ்சன் நூலின் முன்னுரையிலும், கோ. ராஜாராம் பதிப்பாசிரியர் என்றவகையில் எழுதியதிலும் இருவருமே பாராட்டியிருந்தனர்.. இதன் தொடர்ச்சிபோல ஓர் அதிசயம் நிகழ்ந்த து.

 

2011 ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரில்  நடைபெற்ற முதல்  தமிழ் எழுத்தாளர்  மாநாட்டில் கலந்துகொண்ட தமிழவன்  « புலம் பெயரியத் தமிழிலக்கியம், சில உட்பொருண்மைகள்  » என்ற கட்டுரையில் மாத்தாஹரி  நாவலைப் பற்றியும் குறிப்பிட்டதோடு, மாநாடு முடிந்த பின்னும் அந்நூல் குறித்து ரெ, கார்த்திகேசுவிடமும் கோ. ராஜாராமிடமும் சிலாகித்து பேச, அமெரிக்கா திரும்பிய திரு ராஜாராமிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, மாத்தாஹரியைப் பிரெஞ்சில்  கொண்டுவந்திருக்கலாமே எனத் தெரிவித்தார். ஆக இந்நூல் பிரெஞ்சில் வர முதற்காரணம் திரு. கோ.ராஜாராம்.  பின்னர் மெல்ல மெல்ல அந்த எண்ணம் உறுதிப்பட்டபோதிலும் எனது நூலை  நானே செய்ய தேவையின்றித்  தயக்கம். அக்கனவு நிறைவேற சில வருடங்கள்  பிடித்த தென்கிறபோதும் அக்கனவு நிறைவேற மூல மொழிபெயர்ப்பும் முதல் மொழிபெயர்ப்புமான பிரதியை மிகச் சிறப்பாக  செய்து,   நூலுக்கு ப்பெருமைச் சேர்த்தவர்,  நண்பர்  சு. வெங்கடசுப்புராய நாயகரின்  முன்னாள் பேராசிரியர், முனைவர் திரு.  கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  நண்பர் நாயகரின் மீதுகொண்டுள்ள அன்பின்பாற்பட்டு இதனைச் செய்தார். நாயகருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். அடுத்ததாக இந்நூலின் பொருட்டு  நான் நன்றி தெரிவிக்கவேண்டிய நபர்  எனது நெடுநாளைய பிரெஞ்சு நண்பன் திரு சவியெ தெபல். « சந்திக்கிறபோதெல்லாம் உனது எழுத்தை நாங்கள் எப்போது படிப்பதாம் » என்பான்.  அவனுடைய பிடிவாத த்தினாலும் இந்நூல் வெளி வருகிறது.

 

« எங்காத்துகாரரும்  கச்சேரிக்குப் போனார் என்ற கதையாக ஆகிவிடக்கூடாது » என்ற அச்சம்  மகிழ்ச்சியை அடக்கமாக அனுபவிக்கச் சொல்லி எச்சரிக்கிறது. அதுவும் நியாயம் தான்.

Bavâni, l’avatar de Mata Hari (roman)

 

  • Krishna NAGARATHINAM

 

 

Edilivre :

175 Bld Anatole France

93200 Saint-Denis

Series Navigationமணல்வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *