‘கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும்’ ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு

author
0 minutes, 7 seconds Read
This entry is part 12 of 14 in the series 7 மே 2017

kaninid
Certificate Course in ‘Fundamentals and Use of Tamil Computing’

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – Fundamentals & Use of Tamil Computing எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு 08.05.2017 முதல் 31.05.2017 வரை 6வது ஆண்டாக நடைபெறவுள்ளது.

கணினியின் அடிப்படைப் பயன்பாடுகளும் அதில் தமிழைப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகளும் பயிற்சியளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் வாயிலாகத் தங்களது கணினிசார்ந்த பணிகளைத் தாங்களே செய்துகொள்ள முடியும். ஊடகத்துறையிலும் பிற கணினித்துறை சார்ந்த அலுவலகங்களிலும் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் எனப் பொதுமக்கள்  அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

குறைந்தபட்சக் கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு. வயது வரம்பு இல்லை.

வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.

விண்ணப்பத்தை www.srmuniv.ac.in எனும் இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.05.2017.

வெளியூரிலிருந்து வருபவர்களுக்குத் தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு முனைவர் இல. சுந்தரம், தமிழ்ப்பேராயம், SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் – 603 203. தொலைபேசி: 2741 7379, செல்பேசி: 97 90 900 230.

இந்தப் படிப்பு குறித்து உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துப் பயன்பெற வழிவகை செய்யுங்கள்…

விளக்கக் குறிப்பு, விண்ணப்பம் இணைப்பில்.

Series Navigationஆசி கந்தராஜாவின் படைப்புலகம் – ஓர் இரசனைக் குறிப்புயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *