சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++
++++++++++++++
வக்கிரக் கோள் வழி தவறி
வையத்தில் மோதிச்
சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி
பிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும் !
பரிதிக்கு அப்பால் பெயர்ந்து
பூமி சூடு தணியும் !
டைனசார்ஸ் மரித்தன,
நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் !
வானர மூளை உன்னத மாகி
மேனிலை மானிடம் உதிக்கும் !
மீண்டும் டைனசார்ஸ் தோன்ற வில்லை !
பிழைத்தவை பறவை இனம் !
பூமியின் ஆட்டத்தில்
பொங்கி எழுந்தன எரிமலைகள் !
புவியும் தீக்குளிப்பில்
புத்துயிர் பெற்று மீண்டது !
புதிய பயிரினம் பல தோன்றின !
புரட்சி யுகம் பிறந்து,
ஒரே தருணத்தில்
ஐந்தறிவு வானரம் உயர்ந்து
ஆறறிவு மானிடர்
உன்னத மூளையும் மேனியும்
பெற்றுத் தடம் வைத்தார் !
வையத்தை மேன்மையுறச் செய்வார் !
கடவுளின் வாரிசாய்ப்
படைக்கும் மனிதருக்கு நிகராய்ப்
பிறக்க வில்லை எவரும் !
+++++++++++++++++
பூகோளச் சுற்றுப்பாதை & சுழலச்சு சாய்வுக் காலநிலை மாற்றங்கள்
பூமியின் சுற்றுப்பாதை முழுவட்டம் போல் தோன்றினாலும், மெய்யாக அது சிறிது நீண்ட நீள்வட்டப் பாதை [Elliptical Orbit] ஆகும். மிகச்சிறு திரிபு : [Low Eccentricity] 0.0034 & மிகப்பெரும் திரிபு : [High Eccentricity] 0.058. பூமியின் சுற்றுப் பாதை நீட்சி / தாழ்ச்சி ஒருமுறை முழுவதும் நிகழந்து மீளச் சுமார் 100,000 ஆண்டுகள் ஆகும். அதாவது சூரியனைச் சுற்றிவரும் பூமி அதை நெருங்கியும், அப்பால் சென்றும் மாறி மாறிச் சூரிய வெப்பக் கதிர்வீச்சுப் பொழிவுகள் பூமிமேல் கூடியும், குன்றியும் தாக்கும். தற்போதைய திரிபு [2017] : 0.0167. அதாவது வட்டப்பாதை மையத்தை விடப் பூமி இப்போது சூரியனுக்கு அருகே உள்ளது.
பூமியின் பருவக் காலநிலை மாறுதலுக்குக் காரணம் அதன் சுழலச்சுக் கோணத் திரிபு [Earth’s Axis Tilt] என்று நாம் அறிவோம். பூமியின் வடகோளப் பகுதியில் வேனிற்காலமும், தென்கோளப் பகுதியில் குளிர்காலமும் இருந்தால், வடதுருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் பூமியின் சுழலச்சுக் கோணம், 41,000 ஆண்டுக்கு ஒருமுறை மாறுகிறது என்று பலருக்குத் தெரியாது. சுழலச்சுக் கோணம் 22.1 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை மாறி வருகிறது. தற்போதைய சாய்வு : [2017] 23.5 டிகிரி.
எல்லாவற்றிலும் சிக்கலான சுற்றுப்பாதை மாறுபாடு, பம்பரம் போன்று ஆடும் அதன் தலையாட்டமே [Precession]. அதுவே பருவக் காலநிலை உக்கிரத்துக்கும், தணிவுக்கும் காரணம். பூமியின் தலையாட்டம் [21,000 – 26,000] ஆண்டுக்கு ஒருமுறை உச்ச- நீச்சத் தவிப்பு நிலை அடைகிறது. அதாவது பூமியின் சுற்றுப்பாதை, சுழலச்சுத் திரிபு, தலையாட்டம் ஆகிய இம்மூன்றும் சூரிய ஒளிக்கதிர்ப் பொழிவைக் கூட்டியோ, குறைத்தோ பூகோளச் சூடேற்றத்தை நீட்டியோ, சுருக்கியோ சீர்கேடாக்குகிறது.
பூமியின் சுற்றுப்பாதை மாற்றம், காலநிலை வேறுபாடு, மானிட மூளை உன்னதம் பெற வசதி செய்கிறது.
அந்தறிவுள்ள ஸிம்பான்சி படிப்படியாக உயர்நிலை அடைந்து, மனிதன் படிப்படியாக உருவானான் என்று டார்வின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு கூறுகிறது. அதாவது மனிதனின் ஆறறிவு மூளை, உடற் பாகங்கள், அங்கங்கள் தனித்தனியாய்ப் படிப்படியாய் வளர்ச்சியுற்றன என்பது டார்வின் கோட்பாடு. அப்படியானால் கால் மனிதன், அரை மனிதன் எங்காவது இருந்தானா என்னும் விடை இல்லாத ஒரு பெரும் வினா எழுந்து கொண்டிருக்கும். உண்மையில் ஸிம்பான்சிக்குப் பிறகு மானிடர் ஒரே சமயத்தில் மூளையும், உடலும் உன்னதம் பெற்று, முழுமையாகத் தோன்றினர் என்பதே மெய்ப்பாடு. அதற்கு இயற்கையே வசதி அளித்தது என்கிறது 2017 மே மாதம் 29 ஆம் தேதி வந்த செய்தி. சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப் பாதை நகர்ச்சியால் கொந்தளிப்பு, சுழலச்சுக்த் கோணத் திரிபால் ஏற்படும் காலநிலைப் பருவ மாறுபாடுகள், இரண்டு மில்லியன் ஆண்டுகட்கு முன்பு, கிரேட் ரிஃப்ட் வால்லி, கிழக்கு ஆஃபிரிக்காவில் [Great Rift Valley in East Africa] பல மகத்தான உயிரின மலர்ச்சியை உண்டாக்கின என்பது தெரிய வருகிறது. ஸிம்ப்பான்சி மனிதக் குரங்குகள் வானரத்திலிருந்து உன்னத மூளை பெற்று உயர்நிலை அடைந்து முடிவில் பேசும் மானிடாராக, ஈட்டி முதல் ராக்கெட் போன்ற நூதனச் சாதனங்கள், மின்னியல் கருவிகள் பற்பல பயன்படுத்தும் ஞானியாக உதயமானார். சமீபத்திய விஞ்ஞானச் சான்றுகள், இத்தகைய புதிய பரிணாம மலர்ச்சிக்குக் காரணமாக, கிழக்கு ஆஃபிரிக்காவின் கிரேட் ரிஃப் வால்லியில் நிகழ்ந்த காலநிலை மாறுதலைக் காட்டுகிறார்கள்.
++++++++++++
++++++++
கடந்த 282,000 ஆண்டு கணிப்புத் தகவல் இலக்கங்களை [Data] ஆராய்ந்ததில், முதன் முறையாக பூகோள அச்சின் சாய்வுக்கும், பூமியின் பேரளவு நீர்மை, உஷ்ணப் பாதிப்புக்கும் பூமத்திய ரேகை உட்புறத் தளங்களில் [Inter-tropical Convergence Zone -ITCZ] ஓர் தொடர்பு உள்ளதைக் கண்டுபிடித்தோம். தகவல் இலக்கங்களை நாங்கள் கணித முப்பட்டை [Mathematical Prism] வழியாக அணித்துவத்தைப் [Pattern] பார்த்ததில் 41,000 ஆண்டு சுழற்சியில் மாறும் பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்குத் தொடர்பு உள்ளதை அறிந்தோம்.
கிரிஸ்டீன் திலாங், பூதளக் காலநிலை விஞ்ஞானி [University of Science & Technology of China & National Taiwan University Research Collaborators]
பூகோளம் மின்வலை யுகத்தில்
பொரி உருண்டை ஆனது !
ஓகோ வென்றிருந்த உலக மின்று
உருமாறிப் போனது !
பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
பூச்சரித்துக் கந்தை ஆனது !
மூச்சடைத்து விழி பிதுக்க
சூட்டு யுக வெடிப் போர் மூளுது !
தொத்து நோய் குணமாக்க
தூயநீர் வளம், காற்று வளம் தேவை !
காலநிலை மாறுத லுக்குக்
காரணிகள் வேறு வேறு !
கரங் கோத்து பூமி காக்க, அனைவரும்
வருவீ ர் எனக் கூறு கூறு !
ஓரிடத்தில் எரிமலை வெடித்து
உலகெலாம் பரவும்
கரும்புகை மூட்டம் !
துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
உருகி, உருகி
உப்பு நீர்க்கடல் மட்டம் உயரும் !
உஷ்ணம் மெதுவாய் ஏறும் !
தாளம் தடுமாறி
வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
கோடை காலம் நீடிக்கும்,
குளிர் காலம் குறுகிப் போகும்,
பனி மலைகள் வளராமல்
குள்ள மாகும்
நில வளம் செழிப்பிழக்கும் !
நிலப் பகுதி நீர்மய மாகும் !
நீர்ப் பகுதி நிலமாகிப் போகும் !
உணவுப் பயிர்கள் சேத மாகும் !
மனித நாகரீகம் நாசமாகி
புனித வாழ்வு மோசமாகி
வெறிபிடித் தாளும்
வெப்ப யுகப் பிரளயம் !
+++++++++++++++++++++++++
பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்கும், பூமியின் நீர்மை / உஷ்ணப் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது.
பூகோளச் சுற்று அச்சின் சாய்வு 41,000 ஆண்டுச் சுழற்சி மீட்சியில் மாறி வருகிறது. உச்ச அளவுச் சாய்வு : 24.5 டிகிரி. அதம அளவு : 21.5 டிகிரி. தற்போதைய அளவு : 23.5 டிகிரி. பூமியின் சுற்றச்சு சாய்வுத் திரிபு 23,000 ஆண்டு சுழற்சியில் பூமியில் பனித்தட்டு உருவாக்கத்தைப் பாதிக்கிறது. சுமார் 100,000 ஆண்டுக்கு ஒருமுறை சுற்று வீதி மாறும் அந்த நிகழ்ச்சி“சுற்றச்சுத் திரிபாட்டம்” [Precession] என்று குறிப்பிடப் படுகிறது. அதனால் பூமத்தியப் பகுதிகளும் [Tropics] பரிதியைப் பூமி சுற்றும் சுற்று வீதியும் [Earth’s Orbit] பாதிப்படைகின்றன. பூமியின் சுற்று வீதி மாறுதல் பூகோளத்தில் காலநிலைப் பாதிப்பை உண்டாக்கும். அந்த பூகோள சுழற்சி நிகழ்ச்சி “மிலன்கோவிச் சுழற்சி” [Milankovitch Cycle] என்று குறிப்பிடப் படுகிறது.
சமீபத்தில் இந்த ஆய்வு முடிவை வெளியிட்ட குழுவினர் சைனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவியல் காலநிலை விஞ்ஞானி கிரிஸ்டீன் திலாங்க் [Kristine DeLong] தலைமையில் பணியாற்றியவர். அவர்கள் கடந்த 282,000 ஆண்டுகளாய்க் கிடைத்த தகவல் இலக்கத்தை வைத்து ஆய்வுகள் செய்து, முதன்முறையாக பூமியின் சுற்றச்சு சாய்வு திரிபுக்கும், பூமத்தியப் பகுதி நீர்மை, உஷ்ண மாறுதலுக்கும் தொடர்பு உள்ளதென அறிவித்தார். அந்த முடிவறிக்கை 2015 நவம்பர் 25 தேதி “இயற்கை வெளியீட்டு” [Nature Communications] இதழில் வெளி வந்துள்ளது.
பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை விளைவிப்பதால், அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது. அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது. உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி, அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.
ஜான் கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]
2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million] என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டுள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள். அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது. அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன. கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !
ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder’s Institute of Arctic and Alpine Research]
அடிப்படை விதிப்படி ஆர்க்டிக் பனித் தளங்கள் உருகும் போது, ஆர்க்டிக் கடல் ஒரு பெரும் நீர்மை ஆவிப் போர்வை, முகிலை [Blanket of water vapour and clouds] உண்டாக்கி, ஆர்க்டிக் துருவப் பகுதியைச் சூடாக வைத்துக் கொண்டு வருகிறது.
ஜேம்ஸ் ஒயிட்.
“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”
அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]
“கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”
ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]
“கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது. அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் ! எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”
கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]
“55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது. அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது. அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”
ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]
“மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது. அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று. வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது. மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”
டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்
“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”
அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]
பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]
சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்
பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?
பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும். வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் ! சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன. ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே. ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.
அல் கோர்
சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார். மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது. பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது. உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.
சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !
பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன. துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தன மாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன. நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது. மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !
1. கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5] எண்ணிக்கை இரட்டித்துள்ளது.
2. கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.
3. குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.
4. 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.
3. குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.
4. 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.
மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.
1. அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.
2. கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.
3. 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.
Earth’s Axis Wobbles
4. 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.
5. வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.
6. நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.
சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும். அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !
(தொடரும்)
தகவல்:
1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)
2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)
2(a) The Assault on Reason By Al Gore (July 2007)
3. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)
4. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)
5. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)
6. The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
7. Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)
8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)
9. http://www.terradaily.com/r
10. http://www.livescience.com/to
11. http://www.nrdc.org/global
12. http://en.wikipedia.org/wiki/
13. http://www.answers.com/topic/
14. http://en.wikipedia.org/wiki
15. http://www.terradaily.com/
16. http://www.terradaily.com/
17. http://www.planetseed.com/
18. https://en.wikipedia.org/w
19. http://www.bgs.ac.uk/disco
20. http://www.spacedaily.com/
21. https://www.mnn.com/earth-mat
22. http://aa.usno.navy.mil/fa
23. https://en.wikipedia.org/w
24. https://en.wikipedia.org/wiki
25. http://aa.usno.navy.mil/fa
26. http://www.astrobio.net/also-
++++++++++++++++++++
Preview YouTube video Global Warming and Global Seismic Activity
Preview YouTube video Mechanism of The Seasons
Preview YouTube video Effect of Earth’s Tilt on Weather
Preview YouTube video 5 – 4 Milankovitch Cycle
Preview YouTube video FIDO BOXING WEEK Preroll 15s ENG
Preview YouTube video Milankovitch cycles precession and obliquity | Cosmology & Astronomy | Khan Academy
Preview YouTube video Global Warming or a New Ice Age: Documentary Film
Preview YouTube video PBS Global Warming The Signs and the Science
Preview YouTube video The Scientific Case for Urgent Action to Limit Climate Change
Preview YouTube video Climate Change Politics and the Economy: Rhetoric v. Reality
S. Jayabarathan [jayabarathans@gmail.com] (June 3, 2017) [R-1]
https://jayabarathan.wordpress
- எனக்குப் பிடித்த சிறுகதைகள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.
- புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- தொடுவானம் 172. புது இல்லம்
- கவிதைகள்
- நினைவில் உதிர்தல்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 15
- திருகுவளையில் உதித்த சூரியன்
- மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்