THE CONTRACT (1999)
Dir: K.C.Boscombe
DOP : Jay Ferguson
Music : Haig Armen
0
– சிறகு இரவி
0
ஆக்ஷன் மூவிஸ் என்று போட்டால் யூ ட்யூப்பில் இந்தப் படம் கிடைக்கிறது. ஆனால் கொஞ்சம் இணைய இணைப்பில் நொண்டித்தனத்தால் மெதுவாக விரிகிறது.
ஆரம்பமே அட்டகாசம். ஒரு ஆக்ஷன் படத்திற்கு ஆரம்பக் காட்சி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இதில் இருக்கிறது.
லூகோஸ் ஒரு கட்டிடத்தின் மாடி அறைக்கு போகிறான். தன் கையில் இருக்கும் நீளப் பெட்டியைத் திறந்து மெதுவாக ஒரு நீண்ட டெலஸ்கோப் விஷனுடன் கூடிய துப்பாக்கியை எடுத்து இணைக்கீறான். குறி பார்த்து ஒரு மாளிகையின் கதவை தன் சிலுவை ரோமத்திற்குள் கொண்டு வருகிறான்.
சில தப்படி தூரத்தில் ஒரு குழந்தையை தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு ஒரு இளம்பெண் மெல்ல நடந்து வருகீறாள். சரியாக அவன் குறி வைத்த கதவின் முன் குழந்தை அழுகிறது. நின்று அதை சமாதானம் செய்ய முயல்கீறாள்.
கதவைத் திறந்து பாதுகாப்பு தடியன்கள் வருகீறார்கள். காத்திருக்கும் காரை சோதனை செய்கீறார்கள். ஒருவன் பெண் அருகே போய் ” இந்த இடத்தை காலி பண்ணு ” என்கிறான். கதவின் வழியாக மாஃபியா பாஸ் ஆண்டனி பாஸியோ வருகிறார். அவரை சுற்றி பாதுகாப்பு தடியன்கள்.
” நிறுத்து! பெண்ணை ஏன் மிரட்டுகிறாய்? ” பாஸியோ அவளருகில் வந்து ” என்ன ஆச்சு செல்லம்?” என்கீறார். சட்டென்று குழந்தை மேலிருந்த துணியை அகற்றி, குழந்தையை கொஞ்ச குனிந்த பாஸியோவை உள்ளிருந்த துப்பாக்கியால் சுடுகீறாள். சட்டென்று திரும்பி டப் டப்.. இரண்டு தடியன்கள் காலி. மீதம் இருக்கும் தடியன்கள் சுதாரிப்பதற்குள் மேலிருந்து லூகாஸ்.. அவர்களும் அடங்கிப் போகீறார்கள். வண்டியை விட்டு விட்டு, பூனை நடையில் மெல்ல நடந்து வெளியேறுகிறாள் அந்தப் பெண்.
லூகாஸ் வீட்டில் இருக்கிறான். அந்தப் பெண் உள்ளே வருகிறாள்.
” லூ! நான் சரியாக செய்தேனா?’
” சூப்பர் ஹானா! உனக்கு சொல்லித் தரணுமா என்ன?”
செனட்டர் ஹார்மன் தன் ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்கீறார்.
” லூவிடம் ஒரு வேலை கொடுத்தால் கச்சிதமாக முடியும் என்று சொன்னேன் இல்லையா?’
லூகாஸுக்கு ஒரு மின்னஞ்சல் வருகீறது. பின்னால் இருந்து ஹானாவும் பார்த்துக் கொண்டிருக்கீறாள்.
” பன்றிக் குட்டி வழி தவறுது! பிடித்துப் போட ஆள் நிக்குது ”
நர்சரி ரைம் போல இருக்கீறது அந்த மின்னஞ்சல். அனுப்பியது யார் என்று தெரியவில்லை.
” இது ஆபத்து. எடுக்க வேண்டாம் ”
” எதிர்பாராத தொகை! ஏன் வேண்டாம் என்கிறாய்”
” எனக்கென்னவோ சரியாக படவில்லை”
லூ போனவுடன் அந்த வேலையை ஒப்புக் கொள்கிறாள் ஹானா.
ஹானாவின் காதலன் ஜேம்ஸ். அவன் ஒரு ஓவியன். ஆனால் பிழைப்பிற்காக பெரிய ஆர்ட் காலரியில் வேலை செய்கிறான். அவன் ஓவியங்கள் இன்னும் பிரபலமாகவில்லை. ஹானா அவனை சந்தித்து விட்டு வெளியேறி, அந்த ஆபத்தான வேலைக்காக ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வருகிறாள்.
இன்னொரு எதிரி. பீட்டர் வெல்லிங்டன் அரசியல் பிரமுகர். செனட்டர் ஹார்மனுக்கு போட்டி. அவனைப் போட வேண்டும்.
லூகாஸ் கணினியில் பார்க்கிறான். ஹானா அந்த ஆபத்தான வேலையை ஒப்புக் கொண்டிருக்கீறாள்!
ஹானா இப்போது ஓட்டல் பணிப்பெண் வேடத்தில். ரூம் நெ 116. வெல்லிங்டன் உள்ளே இருக்கீறார். வாசலில் சூட் தடியன்கள். டப் டப் ! இரு தடியன்களும் அவுட். அறையின் பூட்டை துப்பாக்கியால் துளைத்து, உள்ளிருப்பவர்களை ரவை சல்லடையாக்கி வெளியேறுகிறாள். எதிரே வரும் பெண் காவலி இவளை கவனியாது கடக்கிறாள். விழுந்து கிடக்கும் தடியன்களை பார்த்து அதிர்ந்து, மிச்ச தடியன்களுக்கு செய்தி சொல்கீறாள்.
ஹானாவை துரத்தி ஓடுகிறாள். ஹானாவின் பின் வந்து துப்பாக்கியால் அவள் தலையைக் குறி வைக்கும்போது “டுப்” காவலி அவுட். சரிந்து விழும் அவள் பின்னால் நிற்கிறான் லூகாஸ்.
” ஓடு தப்பித்துக் கொள்! நான் பிறகு வருகீறேன்”
ஹானா ஓடும்போது துப்பாக்கி சத்தம் கேட்கிறது. திரும்பி லூகாஸ் இருக்கும் இடத்திற்கு வருகிறாள். லூகாஸை சுட்டு விட்டார்கள். அவன் உயிர் பிழைப்பது துர்லபம்.
விசாரிப்பில் தெரிகிறது. சுட்டது ஃப்ராங்கோவும் ஏஞ்சலும். அவர்கள் ஹெர்மனின் ஆட்கள். இந்த வேலையே லூகாஸுக்கான பொறி. அவன் உபயோகம் முடிந்து விட்டது. ஹெர்மனின் ரகசியங்கள் அவனோடு மடிய வேண்டும்.
ஜேம்ஸ் வீட்டில் ஹானா தனியாக இருக்கும்போது
வாசல் கதவு அழைப்பு மணி ஒலிக்கீறது. திறந்தால் ஏஞ்சல். கையில் துப்பாக்கி. சட்டென்று அவனை இழுத்து தள்ளி போராடி சுட்டு கொன்று மறைக்கீறாள் ஹானா. பின் வெளியேறுகிறாள். திரும்பி வந்த ஜேம்ஸ் ஹானாவைக் காணாமல் திகைக்கீறான்.
” பிராங்கோ பெண் பித்தன். லோ க்ளாஸ். கடற்கரையோரம் தினம் ஒரு பெண்ணை பேசி முடிப்பான். அவளோடு இரவைக் கழிப்பான் ”
தகவல் உண்மையாகிறது. அரைகுறை ஆடையுடன் படுக்கையில் பிராங்கோ. எதிர்பாராத தருணத்தில் நுழையும் ஹானா. அழகி துணிகளை அள்ளி கொண்டு ஓடுகிறாள்.
” ஏன் லூகாஸை கொன்றாய்?’
” எனக்கு எதுவும் தெரியாது. ஹெர்மனைக் கேள் ”
பிராங்கோ மடிகீறான். வாசலில் ஏதோ சத்தம். குளியலறைக்குள் ஒளிந்து கொள்கிறாள் ஹானா. நூலிழை இடைவெளியில் நடப்பதை பார்க்கிறாள்.
ஹெர்மன் சில தடியன்களோடு வருகிறான். பிராங்கோ இறந்து விட்டதை பார்க்கிறான். ஹானா மடிவது முக்கியம் என்கிறான்.
ஜேம்ஸும் ஹானாவும் தனிமையில் ஒரு அத்வானத்தில் இருக்கும்போது இரு ஹெர்மன் ஆட்கள் துப்பாக்கியுடன் சூழ்கிறார்கள்.
” ஏய் பையா! ஓடிப் போய் விடு. இல்லையென்றால் இவளோடு நீயும் செத்து விடுவாய்”
ஜேம்ஸின் தலையில் துப்பாக்கி! கழுத்தில் தடியன் கை. ஹானா துப்பாக்கியை இறக்கும் அந்த நொடியில் ஜேம்ஸ் உடலை வளைத்து தடியனை கீழே தள்ளுகீறான். ஹானா அவனை சுடுகிறாள். விழுந்த தடியன் எழுவதற்கு முன் அவன் துப்பாக்கியை எடுத்து அவனை சுடுகிறான் ஜேம்ஸ்.
இரு உடல்களையும் அவர்கள் வந்த கார் டிக்கியிலேயே போட்டு மூடி விடுகிறார்கள் ஹானா, ஜேம்ஸ். வழியில் வரும் ஒரு மார்ஷல் அவர்களை பார்த்து விடுகிறான்.
கார் டிக்கியிலிருந்து ரத்தம் வழிவதும் அவன் பார்வையில் படுகிறது. துப்பாக்கியால் மிரட்டி சரண்டர் ஆக உத்தரவிடுகிறான்.
ஜேம்ஸ் அவனிடம் பேசுகிறான்.
” எங்கள் உயிர் முக்கியமில்லை. ஆனால் உன் உயிர் முக்கியம். உனக்கு குடும்பம் இருக்கிறது. பிள்ளை இருக்கிறான் ஏன் சாக நினைக்கிறாய். துப்பாக்கியை இறக்கு. உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்”
நைச்சியமாக பேசி அவன் துப்பாக்கியை வாங்கி விடுகிறான் ஜேம்ஸ். கை விலங்கால் அவனை காருக்குள் பிணைத்து விட்டு வெளியேறுகிறார்கள் ஹானவும் ஜேம்ஸும்.
” லூகாஸ் இடத்தை உனக்கு கொடுக்கலாம் போலிருக்கிறதே ஜேம்ஸ் ”
ஓஸி எனும் படகுக்காரன் லூகாஸோடு வியட்நாமில் வேலை பார்த்தவன். ஹானாவை குழந்தையாக அவனுக்கு தெரியும். லூகாஸின் நல்ல நண்பன்.
” எல்லோரும் வியட்நாம்ல ஒண்ணா தான் இருந்தோம். அப்புறம் லூகாஸை பிளாக் ஆப் வீரனாக மாற்றி பிரித்து விட்டார்கள். அவனோடு போன பாப் ரியல் இன்னும் சில பேர் இறந்து போனார்கள். லூகாஸ் மட்டும் உயிரோடு இருந்தான். அவனையும் காலி பண்ணீ விட்டார்கள். இப்போது உன்னைக் குறி வைத்திருக்கிறான் ஹெர்மன். அவன் எதிரிகளை ஒழிக்க லூகாஸை பயன்படுத்திக் கொண்டான். அது தெரிந்த உன்னை சும்மா விட்டு வைக்க மாட்டான்.”
எல்லாவற்றிற்கும் காரணம் அந்த நர்சரி ரைம்ஸ் மின்னஞ்சல். யார் அனுப்பியிருப்பார்கள்? ஜேம்ஸ் கணிப்பொறியில் தேடி அது கென்ஸ்டன் பப்ளிக் பள்ளியிலிருந்து வந்ததாகச் சொல்கீறான்.
ஹானா இப்போது அந்தப் பள்ளியில். ஒரு அறை முழுக்க கணிப்பொறிகள். எதில் இருந்து வந்திருக்கும் அந்த மின்னஞல்?
” நான் சொல்கீறேன் ” குரல் கேட்டு திரும்புகிறாள் ஹானா. இறந்து விட்டதாக நம்பப்பட்ட பாப் ரியல் நிற்கிறான்.
ஹெர்மனை அழிக்க லூகாஸை இல்லை. அதனால் அவனுக்காக பாப் தன்னோடு வரவேண்டும் என்கீறாள் ஹானா.
” நான் தான் செத்து விட்டேனே ”
” உயிர்த்தெழு. இது உனக்கான வேலை. லூகாஸுக்கான சேவை ”
ஹெர்மன் இப்போது ஓஸியின் படகில்.. ஜேம்ஸும் ஓஸியும் அவன் பிடியில். ஹானா போயிருக்கும் இடம் கேட்டு, பதில் கிடைக்காமல் ஓஸியை சுட்டு விடுகிறான் ஹெர்மன்.
ஹானா பாப் உடன் படகை நெருங்கிக் கொண்டிருக்கீறாள். மேலே தடியன்கள் நடமாட்டம் தெரிகிறது. உஷாராகிறாள்.
” பொண்ணு வந்தாச்சு ”
” பத்திரமாக அவளை இங்கே கொண்டு வா! ஏ பீட்டர்! வெடிகுண்டுகளை படகு முழுவதும் பொருத்து. மொத்தமாக எரிந்து சாகட்டும்”
ஹானா கைகளை தூக்கியபடி ஒரு தடியனோடு வருகிறாள். மேலே ஒருவன் துப்பாக்கியால் குறிபார்த்துக் கொண்டிருக்கீறான். பாப் குறி பார்த்து ஹானாவை கொண்டு செல்லும் தடியனை சுடுகிறான். ஹானா, தடியன் துப்பாக்கியால் மேலே குறி பார்த்துக் கொண்டிருந்த தடியனை சுடுகீறாள். டப் டப் டப்! எல்லா தடியன்களும் காலி. குண்டு வைக்கப் போன பீட்டர் மட்டும் இருக்கிறான்.
ஹெர்மன், ஜேம்ஸ் தலையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு, படகின் உள்ளிருந்து வருகிறான்.
” ஹானா உன் ஆட்டம் ஓவர். சரணடைந்து விடு! ”
பாப் இருக்குமிடத்தை நோக்கி ஓடுகிறாள் ஹானா. எதிரிகளின் குண்டு துளைத்து பாப் ரத்தப் போக்கில் இருக்கிறான். தனக்கு நேரம் வந்து விட்டது என்கிறான்.
“லூவுக்காக ஒரே ஒரு முறை போராடு. முடிந்தவரை சுடு! அதற்குள் நான் படகுக்குள் போய் விடுகிறேன்”
ஹானா நுழையும்போது பீட்டர் வெடிகுண்டுகளை பொருத்தி விட்டு வருகையில், அவளைப் பார்க்கிறான். சூடான சுடு ஆட்டம். பீட்டர் காலி. ஹெர்மனை எதிர்கொள்கீறாள் ஹானா.
” துப்பாக்கியை கீழே போடு! என் ஆட்டம் இனிமேத்தான் ஆரம்பம்”
ஜேம்ஸை இடுப்பில் சுடுகிறான் ஹெர்மன். அவன் சரிந்து விழுகிறான். அவன் தலையில் ஹெர்மனின் துப்பாக்கி. கூரிய பொருள் ஒன்றால் ஹெர்மனின் காலை குத்துகிறான் ஜேம்ஸ். வலியில் விலகுகிறான் ஹெர்மன். அவன் துப்பாக்கியை தட்டி விடுகிறான் ஜேம்ஸ். தவ்வி தவ்வி வெளியேறுகிறான் ஹெர்மன்.
கைத்தாங்கலாக ஜேம்ஸை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறாள் ஹானா. சாலையில் காரில் ஏறிக் கொண்டிருக்கீறான் ஹெர்மன். அவன் கையில் குண்டுகளை வெடிக்க செய்யும் ரிமோட்.
விழுந்த கிடந்த தடியனின் தூரநோக்கு லென்ஸ் பொருத்திய துப்பாக்கியை எடுத்து குறி பார்க்கிறாள் ஹானா. ஒரே குண்டில் கார் வெடித்து சிதறி பற்றிக் கொள்கிறது.
நிசப்தமும், இசையும், தெளிவான ஒளிப்பதிவும் ஆங்கில சப்டைட்டில்களும் இன்னமும் வசதியாக கதையை புரிய வைக்கின்றன.
லூகாஸாக ;லாரன்ஸ் இம்பால்ட், ஹெர்மனாக பில்லி டி வில்லியம், ஜேம்ஸாக மாத்யூ ஆலிவர், ஓஸியாக ட்வுக் ரிச்சர்ட் என்று அனைவரும் கச்சிதம். ஜோஹானா ப்ளாக், ஹானாவாக பஞ்சாமிர்தம்!
0
The Contract – Fully filled! with Anand Ram& Prakash K
0
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17
- சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்
- வெய்யில்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- அருவம்
- பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை
- தொடுவானம் 176. முதல் காதலி
- இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது
- தந்தையர் தினம்
- ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை
- நித்ய சைதன்யா கவிதைகள்
- கவிநுகர் பொழுது-16 கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017
- இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா?
- தி கான்ட்ராக்ட்
- கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்
- வ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 19