வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 19

This entry is part 18 of 18 in the series 2 ஜூலை 2017

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 19. ஜெய்ப்பூரில் மீராபாய் கண்ணாடித் தொழிற்சாலையில் இருக்கும் கிஷன் தாஸ் பிரகாஷுடன் பேசி முடித்த பின் மேலாளர் கொடுத்துச் சென்றிருந்த புகாரின் நகலை எடுத்துப் பிரித்துப் படிக்கிறார். அதைப் படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது முகம் வெளுத்துப் போகிறது கண்கள் பனிக்கின்றன. அவர் உடனே மேலாளர் சேகரை அவசரமாய் அழைக்கிறார். தம்முன் வந்து கைகட்டி நிற்கும் அவரிடம், “அந்தப் பையனை மிகவும் பலமாக அடித்துவிட்டீர்களா?” என்று […]

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17

This entry is part 1 of 18 in the series 2 ஜூலை 2017

பி.ஆர்.ஹரன் யானைகளின் நலனும் காக்கப்பட வேண்டும்; யானைகள் சம்பந்தப்பட்ட ஆலயப் பாரம்பரியமும் தொடர வேண்டும் என்பதற்குத் தீர்வு உண்டா என்கிற கேள்விக்கு, நிச்சயம் உண்டு என்பதே பதில். இது சாத்தியப்பட வேண்டுமென்றால், அரசு, அரசுத்துறைகள், விலங்குகள் நல அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள் உட்பட்ட ஹிந்து இயக்கங்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும். அவர்களுக்குப் பொது மக்களும் ஆதரவு தரவேண்டும். மிகவும் முக்கியமான இந்தப் பிரச்சனைக்குப் பின்வரும் செயல்பாடுகளின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம். • தமிழ்நாடு […]

சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்

This entry is part 2 of 18 in the series 2 ஜூலை 2017

குமரி எஸ். நீலகண்டன். உலகம் மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அழகான உலகம் ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது. வானம், பூமி, காற்று, கடல், நெருப்பு, பனி, தாவரங்கள், விலங்குகள்,பறவைகள், நுண்ணுயிரிகள், மனிதர்கள் எல்லாம் உள்ளடக்கிய உலகத்தை ஒருவன் அழித்து கொண்டிருக்கிறான். அவன்தான் மனிதன். மனிதனின் ஆசை என்ற புயலில் வானம் கிழிந்து போய் கிடக்கிறது. காற்று விஷத்தில் தோய்ந்து கிடக்கிறது. கடலானது பிளாஸ்டிக், குப்பைகள், வேதிப் பொருட்கள் உட்பட்ட நச்சுக் கழிவுகளால் கருப்புக் கடலாகிக் கொண்டிருக்கிறது. […]

வெய்யில்

This entry is part 3 of 18 in the series 2 ஜூலை 2017

முல்லைஅமுதன் வெய்யில் வரும் போது புடவைகளை காயப்போடுங்கள். ‘ம்’ பிள்ளைகளுக்கு உணவை ஊட்டிவிட்டு, பாடசாலை வாகனத்தில் அனுபிவிடுங்கள். ‘ம்’ மின்சாரக் கட்டணம் கட்டவேண்டும். ‘ம்’ அம்மா வரப் போறா வீட்டைத்துப்புரவு பண்ணி வையுங்கள். ‘ம்’ அப்படியே மாடியில காயவிட்ட ஊறுகாயை எடுத்து வைச்சு ,பிறகு சாப்பிடுங்கள். நான் வர தாமதமாகும்.. ‘ம்’ செருப்பை மாட்டியபடி நகர்ந்தாள் மனைவி. நான் இரவுப் பூக்களின் மீதான பனித்துளியை இரசித்தபடி இருந்தேன். என் கனவை மிதித்தபடி வெளியேறினாள்.. முல்லைஅமுதன்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 4 of 18 in the series 2 ஜூலை 2017

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [82] என் புதைந்த எரிச் சாம்பல் குவளையில் இனிய வாசனை எழுந்து கலக்கும் காற்றில். அருகே கடந்து செல்கையில் நாத்திகனும் எதிர்பாராது தன்மேல் படுவதை அறியான். [82] That ev’n my buried Ashes such a Snare Of Perfume shall fling up into the Air, As not a […]

அருவம்

This entry is part 5 of 18 in the series 2 ஜூலை 2017

அருணா சுப்ரமணியன் தனிமை பொழுதின் துணையான கனவினில் சிறகுகள் முளைத்து பரந்த வானத்தில் வலிக்கும் மட்டும் பறந்து திரிந்தேன் நீல மேகத்துள் நீராகி இறங்கினேன் காற்று கலைத்துச் சென்ற கடைசி மேகத்தில் இருந்து கடலுள் குதித்தேன் அலையாய் அலைந்து கரைக்குத் தள்ளப்பட்டேன் மணற்கோட்டை ஒன்றை அணைத்த வேகத்தில் மணலாய்க் கரைந்தேன் அழுது கொண்டே சென்ற சிறுமியின் பாதம் தொட்டு மன்னிப்புக் கேட்டேன் ஒட்டிக்கொண்ட என்னை வீட்டுக்கே கூட்டி போனாள் கூச்சத்தில் நானோ வாசலிலேயே நின்றுவிட்டேன் …

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை

This entry is part 6 of 18 in the series 2 ஜூலை 2017

– நாகரத்தினம் கிருஷ்ணா சென்ற கட்டுரையில் பதினேழாம் நூற்றாண்டு கலை இலக்கியத்தின் தொடர்பாக நாடகத்துறையையும், நாடகவியலாளர்களையும் பார்த்தோம். இம் முறை எஞ்சியுள்ள பிறதுறைகளைக் காணலாம். பொதுவாக ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், அரசியல், சமூக அமைப்பு இவை அனைத்தையும் முழுமையாக விளங்கிக்கொள்ள அக்காலகட்டத்தின் கலை இலக்கியச் சான்றுகளைக் காட்டிலும் வேறு சாட்சியங்கள் இருக்க முடியா. அ. இலக்கிய விவாத அரங்குகள் இந்நூற்றாண்டில் கலைஇலக்கியங்கள் பெருமளவில் தழைத்தோங்கியமைக்கு , அரசைப் போன்றே நாட்டின் பெரும் செல்வந்தர்கள், உயர்குடிமக்கள் […]

தொடுவானம் 176. முதல் காதலி

This entry is part 7 of 18 in the series 2 ஜூலை 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 176. முதல் காதலி சீன உணவகத்தில் ” கொய்த்தியா ” உண்ணலாம் என்றான்.[பன்னீர் என்னைப்பார்த்து. நான் சரி என்றேன். அந்த சீன உணவு மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது அப்பாவின் சம்பள நாள் இரவில் அதை வாங்கி வருவார். அதை பாக்கு மட்டையில் கட்டித் தருவார்கள். அதைப் பிரிக்கும்போதே வாசனை கமகமக்கும். கோவிந்தசாமி சீன உணவு சாப்பிடமாட்டான்.அவன் அடுத்த உணவகம் சென்று அங்குள்ள இந்திய இஸ்லாமியர் தயார் […]

இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது

This entry is part 8 of 18 in the series 2 ஜூலை 2017

 June 29, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx https://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-g-n/india.aspx https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_India http://www.npcil.nic.in/pdf/news_30aug2016_01.pdf news_30aug2016_01 Kudungula unit 2 http://npcil.nic.in/main/MOEF_clearance_EIA_KKNPP.aspx +++++++++++++++ இரண்டாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் உச்சத் திறனில் இயங்குகிறது. 2017 மார்ச் 31 தேதி முதல் இரண்டாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முழுத்திறன் 1000 MWe ஆற்றலில் சிறப்பாக இயங்கி வருகிறது.  கட்டட அமைப்புகள், யந்திரச் சாதனங்கள் இணைக்கப்பட்டு, அணுக்கரு எரிக்கோல்கள் நிரப்பப்பட்டுப் பாதுகாப்பு […]

தந்தையர் தினம்

This entry is part 9 of 18 in the series 2 ஜூலை 2017

அச்சாணிக் கெதற்கு ஆராதனை அச்சாணி தந்தை ஆழ் கடலுக் கெதற்கு ஆரவாரம் ஆழ்கடல் தந்தை வேர்களுக் கெதற்கு வெளிஅழகு வேர்கள் தந்தை அஸ்திவாரங்கள் ரசிக்கப்படுமோ? அஸ்திவாரங்கள் தந்தை விதை காக்கும் உமிகள் விரும்பப்படுமோ? உமிகள் தந்தை ருசி தரும் உப்பு ருசிக்கப்படுமோ? உப்பு தந்தை சுமைதாங்கியைத் தாங்க சுமைதாங்கி ஏது? சுமைதாங்கி தந்தை இமைகளைக் காக்க இமைகள் ஏது? இமைகள் தந்தை சூரியனுக் கோர் தினம் சந்திரனுக் கோர் தினம் இருக்கு மென்றால் தந்தையர்க்கும் இருக்கட்டுமே தந்தையர் […]