அருணா சுப்ரமணியன்
தடயங்கள்…
நீலம் தெளித்த
வான்வெளியில்
சிறகசைத்து பறக்கும்
நினைவுகளோடு
மரங்கள் சூழ் மலைகளில்
நெளிந்து திரியும்
நீர்ச்சுனையில் நீந்தி
பாறைகளில் தெறித்து
வீழும் அருவியில்
எழும் அருவமாய்
அத்துவானத்தில்
அலைகிறேன்
தடயங்களை
அழித்துச் சென்ற
விரல்களின்
தடங்களைத் தேடி…
**************************
அழையா விருந்தாளி..
அழைப்புமணி அழுத்தவில்லை
அனுமதி கோரவில்லை
தாழிட்ட கதவை மீறி
எப்படியோ உள்நுழைந்து
ஆக்ரமித்து கொள்கின்றன
யாருமற்ற தனிமையில்
தினமும் என்
தூக்கத்தை துரத்திடும்
கவிதைகள்!!
****************************** **
யாருமற்ற…
இவ்விரவு மிகவும்
அச்சுறுத்துகிறது..
அறையின் மறுபாதியில்
வராத குறட்டை ஒலி
தூக்கத்தின் நடுவே
மேலே விழாத
பிஞ்சுக் கால்கள்
ஓயாமல் சுழலும்
காற்றாடியின் ஓசை
எதுவுமற்ற
நிசப்தத்தின்
பேரிரைச்சலில்
நித்திரையும்
பயந்து விலகிவிடுகிறது…
- இயற்கையின் ஊடே சமூகப் பயணம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20
- தொடுவானம் 177. தோழியான காதலி.
- ஒரு சொட்டுக் கண்ணீர்
- சொல்லாத சொற்கள்
- அதிகாரம்
- ”மஞ்சள்” நாடகம்
- English translation in poetical genre of Avvaiyaar’s poems
- கவிதைகள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- ‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
- மொழிவது சுகம் 8ஜூலை 2017
- நூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்
- கவிதை
- ‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..
- கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.