நூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்

author
0 minutes, 8 seconds Read
This entry is part 13 of 16 in the series 9 ஜூலை 2017

சாகித்ய அகாதெமியின்   ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’  எனும் சிறுவர் கதை நூல் அறிமுகம் : சுப்ரபாரதிமணியன் பேசியதில் :

  1. பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள்  வாசிக்கும் இலக்கியம் ).,                2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்   3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம்  என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள்  இலக்கியம்  பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள்  வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்   அதிகம் வரவேண்டும். அதுதான் ஆரோக்யமானதாகவும் சிறுவர்களின் படைப்புத்திறனைக்காட்டுவதாகவும் இருக்கும்.

சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் அல்ல.  அது வயது அடிப்படையில் படைக்கப்படுவதை வெளிநாட்டுப்படைப்புகள்  காட்டுகின்றன. தமிழில் அப்படி வருவபவை குறைவு.வயதிற்கேற்ப ரசனை, வாசிக்கும் திறன், இயல்பு காரணமாய் இந்த வித்யாசம் தேவை.

குழந்தை பருவத்தின் அடையாளங்கள் இன்றைய தொலைக்காட்சி மற்றும் நுகர்வுக்கலாச்சார முறையில் தொலைந்து நிற்பதை மீட்டெடுக்க வேண்டும்.. கைபேசி, அய் பேடு சந்ததியாக இன்றைய சிறுவர்கள் மாறாமல் இருக்க சிறுவர்கள்  இலக்கியம் அதிகம் முன்னெடுக்கப்படவேண்டும்.

சாகித்ய அகாதெமியின்   ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ எனும் சிறுவர் கதை நூல் அறிமுகம் மற்றும் திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு சபரிஷ் இயக்கிய Aadhar Magan  குறும்படம் அறிமுகம் திருப்பூர் அம்மன்நகர், பாண்டியன் நகர் தனியார் பள்ளியில்  கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்  திங்களன்று நடைபெற்றது  :

நாவலாசிரியர் கோவை செந்தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.( இவரின் சித்த முற்றம் காவியா பதிப்பகம், சென்னை  வெளியிட்ட சமீபத்திய நாவல் )

சாகித்ய அகாதெமியின்   ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ எனும் சிறுவர் கதை நூலில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் மற்றும் கொங்கு நாட்டைச் சார்ந்த பூவண்ணன், செல்வகணபதி, உட்பட ஒன்பது எழுத்தாளர்களின் சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன.

சாகித்ய அகாதெமி சார்பில் பேராசிரியர்கள் இரா.காமராசு – கிருங்கை சேதுபதி ஆகியோர் தொகுத்துள்ள ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ எனும் சிறுவர் கதை நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் முதல் சுப்ரபாரதிமணியன் , சிறுவன் மருது எழுதிய கதைகளென 50 கதைகளைத் தொகுத்து ‘சிறுவர் இலக்கிய உலகிற்கு’ சீரிய பங்காற்றியுள்ளனர்.

திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு சபரிஷ் இயக்கிய Aadhar Magan  குறும்படம் அறிமுகம்  நடந்த்து. ஆதார் எண் பெறும் சிக்கல்கள், அத்ன் மீதான் விமர்சனமாய் இக்குறும்படத்தை சப்ரிஷ் இயக்கியிருக்கிறார். (இவர் முன்பே   Wheels Beneath –Documentary  என்ற ரிக்‌ஷாக்காரர்கள் பற்றியப் படம், மூனார்  போன்ற டாக்குமெண்டரிப் படங்களை எடுத்தவர் ) ஹெச்ஜி ரசூல், வெள்ளியோடன், பாலமுருகன் திரைப்பட நூல் ஆகியவையும் அறிமுகமாயின.

கூட்டத்தில் சுப்ரபாரதிமணியன் பேசியதில் :

  1. பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள்  வாசிக்கும் இலக்கியம் ).,                2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்   3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம்  என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள்  இலக்கியம்  பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள்  வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்   அதிகம் வரவேண்டும். அதுதான் ஆரோக்யமானதாகவும் சிறுவர்களின் படைப்புத்திறனைக்காட்டுவதாகவும் இருக்கும்.

சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் அல்ல.  அது வயது அடிப்படையில் படைக்கப்படுவதை வெளிநாட்டுப்படைப்புகள்  காட்டுகின்றன. தமிழில் அப்படி வருவபவை குறைவு.வயதிற்கேற்ப ரசனை, வாசிக்கும் திறன், இயல்பு காரணமாய் இந்த வித்யாசம் தேவை.

குழந்தை பருவத்தின் அடையாளங்கள் இன்றைய தொலைக்காட்சி மற்றும் நுகர்வுக்கலாச்சார முறையில் தொலைந்து நிற்பதை மீட்டெடுக்க வேண்டும்.. கைபேசி, அய் பேடு சந்ததியாக இன்றைய சிறுவர்கள் மாறாமல் இருக்க சிறுவர்கள்  இலக்கியம் அதிகம் முன்னெடுக்கப்படவேண்டும்.

நாவலாசிரியர் கோவை செந்தமிழ்வாணன்:  கதைத்தேர்வு, அட்டைப்பட நேர்த்தி, வடிவமைப்பு என எல்லா விதங்களும் மிகச் சிறப்பாக செய்துள்ள தொகுப்பாளர்களுக்கும், ஒருங்கிணைத்த பேராசிரியர் கி. நாச்சிமுத்து மற்றும் நூல் வெளிவர உழைத்த சாகித்திய அகாதெமியின் பதிப்புத்துறை அலுவலர் சிந்தாலப்புடி சீனிவாஸ், இந்நாள் பொறுப்பு அலுவலர்கள் ராஜ்மோகன், அ.சு. இளங்கோவன், சந்திரசேகர ராஜு என அனைவரையும் படைப்பாளர்கள் சார்பில் நன்றி.இன்னும் பல சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்நூல் மேலும் பல தொகுப்புகளைத் தொடரவும் வேண்டுகிறேன்.

நூல்களைப் பெற: சாகித்ய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. நூல் பக்கங்கள்: 240 விலை: ரூ.160

. Kanavu,       8/2635, Pandian nagar, Tiruppir  641 602  ( ph. 9486101003 )

044 2435 4815

Series Navigationமொழிவது சுகம் 8ஜூலை 2017கவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *