புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 13 in the series 24 செப்டம்பர் 2017

 

       முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 16.09.2017 மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைமாமணி கா. இராஜமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு அறிவுரைஞர் திருமதி சௌமியா அன்புமணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆவணப்படத்தின் ஒளிவட்டினை (டிவிடி) வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். ஆவணப்படத்தின் முதல்படியினைப் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருஷ்ணன் அவர்களும், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் அவர்களும் பெற்றுக்கொண்டனர். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, முனைவர் க. இளமதி சானகிராமன், முனைவர் ஒப்பிலா. மதிவாணன், நீதியரசர் இராமபத்திரன், முனைவர் இரா. வசந்தகுமாரி, முனைவர் ஔவை நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      எழுத்தாளரும் கவிஞருமான ஜெயபாஸ்கரன் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்கினார். விபுலாநந்த அடிகாளர் ஆவணப்படத்தில் பங்கேற்று தொழில்நுட்ப உதவிபுரிந்தவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் புதுச்சேரி க. குணத்தொகையன் சிறப்புச் செய்தார். நிகழ்ச்சியைக் கவிஞர் உமா மோகன் தொகுத்து வழங்கினார். தூ.சடகோபன் நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, புலவர் கி.த.பச்சையப்பன், புலவர் சீனு.இராமச்சந்திரன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் இலங்கையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
9442029053
விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை(டிவிடி), மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு ஆலோசகர் சௌமியா அன்புமணி வெளியிட, புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொள்கின்றார். அருகில் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து, ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன், முனைவர் ஒப்பிலா. மதிவாணன்
இடைக்கட்டு மு.இளங்கோவன்
 
Series Navigationதொடுவானம் 188. திருமண ஓலைபூதவலு ஹர்ரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா ?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *