தடை தாண்டும்
ஓட்டமாய்
வாழ்க்கைப் பந்தயம்
கடந்த தடைகள்
கணக்கில்லை
துல்லியம்
தொலைத்த விழிகளுக்கு
துணைக்கு
வந்தது கண்ணாடி
ஒலிகளைத்
தொலைத்த  செவிகளுக்கு
துணைக்கு
வந்தன பொறிகள்
‘லப்டப்’பில் பிழையாம்
‘வால்வு’ வந்ததில்
வாழ்க்கை வந்தது
சில எலும்புகளின்
வேலைக்கு
எஃகுத் துண்டுகள்
இனிப்போடும்
கொதிப்போடும்
இருந்தே போராட
மருந்துகள்
நீள்கின்றன தடைகள்
தள்ளாடும் கால்களைக்
கவ்வுகிறது பூமி
புதைகிறேன்
எரியப்பட்ட கல்
மூழ்கிவிட்டது
வட்ட வட்ட அலைகள்
மறைந்துவிட்டது
அசையாமல்
கிடக்கிறது குளம் 
அமீதாம்மாள்
- நான் யார்
 - தொடுவானம் 198. வளமான வளாகம்
 - வாழ்க்கைப் பந்தயம்
 - நீயே சிந்தித்துப்பார் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
 - மெனோபாஸ்
 - உறவு என்றொரு சொல்……
 - நந்தினி
 - துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.
 - அதிகாரப்பரவல்
 - பாகிஸ்தானின் க்வாதர் துறைமுகமும் ஈரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகமும்
 - தேச விரோதத்திற்குப் பயன்படும் கருத்துச் சுதந்திரம்