டாக்டர் ஜி. ஜான்சன்
ஆஸ்த்மா எனபது சுவாசிக்க குழாய்களின் தொடர் அழைச்சி எனலாம். இதனால் சுவாசக் குழாய்களின் சுருக்கம் காரணமாக மூச்சுத் திணறலும், இருமலும் விட்டு விட்டு உண்டாகும்.நெஞ்சுப் பகுதியில் இறுக்கமும் காற்று வெளியேறும்போது ” வீஸ் ” என்னும் ஓசையும் உண்டாகும். இந்த தொல்லை ஒரு நாளில் சில தடவையோ, அல்லது வாரத்தில் சில நாட்களோ ஏற்படலாம். இது இரவில் அதிகமாகலாம்.
ஆஸ்த்மா குழந்தைப் பருவத்தில்கூட தோன்றும் நோய். ஆனால் அவர்களுக்கு 12 வயதானபின் இந்த நோய் தொடர்வதில்லை. அதுவரை அவர்களை சரிவர கவனித்துக்கொள்ளவேண்டும்.
12 வயதுக்குமேல் முதன்முதலாக ஆஸ்த்மா தோன்றினால் அது வாழ்நாள் பிரச்சனையாகத் தொடரும்.
ஆஸ்த்மா முழுக்க முழுக்க நுரையீரல் அழற்சி தொடர்புடைய நோய். இது உண்டாவதின் காரணம் முழுதுமாக இன்னும் சரிவரத் தெரியவில்லை அனால் மரபும், சுற்றுச் சூழலும் முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.
ஆஸ்த்மா நோய் மூன்று விதமான தன்மை கொண்டது.
* சுவாசக் குறைவு – Airway Limitation – இது தானாகவோ அல்லது மருந்தினாலோ குணமாகும்.
* வெளி காரணிகளால் சுவாசக் குழாய்களின் அளவுக்கு அதிகமான எதிர்ப்பு செயல்பாடு – Airway Hyperresponsiveness – அவை வருமாறு:
^ சுற்றுச் சூழலில் உள்ள தூசுகள், புல்களின் மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமங்கள் போன்றவை.
* வீடுகளில் உள்ள தூசு உண்ணிகள் .( House Dust Mite )
^ வேலை செய்யுமிடத்தில் இரசாயனப் புகை.
^ சில மாத்திரை மருந்துகள்.
^ சில உணவுவகைகள் – கோதுமை, முட்டை, பால், அவரை, சாக்லேட், உருளைக் கிழங்கு, மாட்டு அல்லது பன்றி இறைச்சி போன்ற சில உணவு வகைகள் ஒவ்வாமையுடன் தொடர்புடையவை . ஆகவே ஆஸ்த்மா உள்ளவர்கள் இவற்றை உட்கொள்ளுள்ளும் போது நோய் தீவிரமாகலாம்.
^ வைரஸ் தொற்று
^ குளிர் காற்று
^ புகைத்தல்
^ வாசனைத் திரவியங்கள்
^ மன அழுத்தம்
* சுவாசக் குழாய் அழற்சி – Inflammation of the bronchi- இதில் இயோசினோபில், T லிய்ம்போசைட், மாஸ்ட் செல்கள் என்னும் வெள்ளை இரத்த அணுக்கள் சுவாசக் குழாய்களைத் தாக்கி, சளி அடைப்பு, குழாய் வீக்கம் , குழாய் தடிப்பு போன்றவற்றை உண்டுபண்ணுகின்றன.
இவை தவிர இது மரபணு வழியாகவும் அடுத்த சந்ததியினரிடையே அதிகம் காண வல்லது. சிலருக்கு உடற்பயிற்சி செய்து முடிந்தபின்பு கூட இது உண்டாகலாம்.
அறிகுறிகள்
* திடீர் மூச்சுத் திணறல்
* சுவாசிக்கும் போது ஸ்ஸ்ஸ் என்ற சத்தம். இதையே வீஸ் ( Wheeze ) என்பர்,
* சளியுடன் கூடிய இருமல்
* நெஞ்சில் வலி இல்லாத இறுக்கம்
* இரவில் தூக்கமின்மை
. பரிசோதனைகள்
மருத்துவர் சாதாரண பரிசோதனையின் வழியாகவே ஆஸ்த்மா உள்ளதை நிர்ணயம் செய்தாலும் நுரையீரல் செயல் திறன் பரிசோதனை ( Pulmonary Function Test ) செய்து பார்ப்பார். இதில் சுவாசத்தை வெளியேற்றும் பலம் அறியலாம்.
சாதாரணமாக ஆஸ்த்மா இல்லாதவர்கள் நுரையீரலிலிருந்து 75 முதல் 80 சதவிகித காற்றை ஒரு நிமிடத்தில் வெளியேற்றி, முழு காற்றையும் 3 வினாடிகளுக்குள் வெளியேற்றிவிடுவர். ஆனால் ஆஸ்த்மா உள்ளவர்கள் முழுக் காற்றையும் வெளியேற்ற 6 முதல் 7 வினாடிகள் எடுப்பர். இதை அளக்க ” பீக் ஃப்லோ மீட்டர் ” ( Peak Flow Meter ) எனும் கருவி பயன் படுத்தப்படுகிறது.
சிகிச்சை முறைகள்
* அறிகுறிகள் வராமல் தடுப்பது, சுலபமாக சுவாசிப்பது, நோய் கடுமையாகாமல் தவிர்ப்பது போன்றவை சிகிச்சையின் முக்கிய குறிக்கோள்கள்.
* ஒவ்வாமையை உண்டு பண்ணக்கூடிய வீட்டிலுள்ள தூசு உண்ணிகள், வளர்ப்பு பிராணிகள், சில உணவு வகைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது.
* புகைத்தலை நிறுத்தியாக வேண்டும்.
* ஆஸ்பிரின் போன்ற வலி குறைக்கும் மாத்திரைகளை தவிர்ப்பது.
* வேலையிடத்தில் இரசாயன புகை வெளியேறும் இடங்களிலிருந்து அவை இல்லாத இடம் மாறுவது.
* மருந்துகள் – இப்போதெல்லாம் நுரையீரலுக்குள் நேரடியாக உடன் சென்று பயன் தரும் சுவாசிக்கும் மருந்துகள் ” இன்ஹேலர் ” ( Inhaler ) எனும் சிறு கருவி மூலம் தரப்படுகிறது. இதில் குறுகிய காலம் வேலை செய்வதும், நீண்ட நேரம் வேலை செய்வதுமான இரண்டு வகைகள் உள்ளன. இவை சுவாசக் குழாய்களை உடன் விரிவடையச் செய்து உடனடியாக நிவாரணம் தருகின்றன. கிளினிக்குகளில் ” நெபுளைசர் ” ( Nebulaiser ) எனும் கருவி மூலம் தொடர்ந்து சில நிமிடங்கள் மருந்து சுவாசிக்கச் செய்து நிவாரணம் தருகிறோம்.
சுவாசக் குழாய் வீக்கம் குறைக்க ” ஷ்டீராய்ட் ” மருந்தும் தரப்படுகிறது.
இவை இரண்டிலும் குணமாகாமல் மூச்சுத் திணறல் அதிகமானால், கால தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
உயிருக்கு ஆபத்து இல்லாத நோய்தான் ஆஸ்த்மா. ஆனால் சில வேலைகளில் உடனடியாக சரியாக கவனிக்காவிட்டால் அதுவே உயிருக்கு ஆபத்தாக மாறலாம்!
( முடிந்தது )
- 2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.
- ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.
- என்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்
- அன்பின் ’காந்த’ ஈர்ப்பு
- வாடிக்கை
- கண்ணீர் அஞ்சலி !
- “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு
- மௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்
- ஈரமுடன் வாழ்வோம்
- வளையாபதியில் பெண்ணியம்.
- 2017 ஒரு பார்வை
- ஆஸ்துமா
- தொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை
- காத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை
- இலங்கைப் பயணம் சில குறிப்புகள்
- மாயச் சங்கிலி!
- தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா
- ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு