திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல் மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம். 18,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகத்தால் பெறுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் moமொத்தமாய் அது 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகிறார்கள். பல்லடம் தாலுக்காவின் சிறு கிராமமாக ஒரு காலத்தில் இருந்தது இப்போது வந்தாரை வாழ வைக்கும் ஊர். நன்னீர் ஓடிய நொய்யல் இன்று மறைந்து போன நதியாகி விடும் அபாயம் உள்ளது. கரிசல் பூமியின் பருத்தி முன்பு நெசவாளர்களுக்கு வாழ்வு தந்தது இபோது பின்னலாடை மூலம் வேலை தேடி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பைத் தந்து வருகிறது.திருப்பூரின் 10 லட்சம் மக்கள் தொகையில் 4 லட்சம் பேர் இடம் பெயர்ந்த தொழிலாள்ர்கள் .இவர்களின் வாழ்க்கையை பdaidaiடைப்பிலக்கியத்தில் சித்தரித்து இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வதுள்ள என் ஆங்கில நூல் மைக்ரேசன் 2.0 ( migration 2.0 – — 2 .0. ரஜினி க்குச் சொந்தமானதா என்ன )
திருப்பூர் பகுதி சார்ந்த மக்களின் வழ்க்கையை பதிவு செய்தவர்களில் முன்னோடி ஆர. சண்முகசுந்தரம். நாகம்மாள் . சட்டி சுட்டது, போன்ற பல நாவல்களில் இப்பகுதி நிலவுடமைச் சமூகம், அந்த மனித உறவுகள். , சாதீய அமைப்புகள் பற்றி எழுதியவர் அவர். இன்றைய திருப்பூர் மக்களின் வாழ்க்கையை சுப்ரபாரதிமணியன் சாயத்திரை நாவல் முதற்கொண்டு நீர்த்துளி, நைரா, சமையறைக்கலங்கள், தேனீர் இடைவேளை, முறிவு, நைரா போன்ற நாவல்களில் எழுதியிருப்பது போல், வாமு கோமு, கோபாலகிருஷ்ணன், ரத்தினமூர்த்தி, குழந்தைவேல். சம்சதீன் ஹீரா போன்றோர் நாவல்வடிவங்களிலும் மகுடேசுவரன், கோவை சதாசிவம், தாண்டவக்க்கோன் உள்ளிட்டோர் பிற வடிவங்களிலும் எழுதியுள்ளனர்.muRpookku திருப்பூர் மக்களின் வாழ்க்கையை குறும்படங்கள் மூலம் வெளிப்படுத்தி பெரிய திரையிலும் வெற்றி பெற்ற் இன்று நேற்று நாளை இயக்குனர் இரவிக்குமர், முண்டாசுப்பட்டி ராம் போன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். மொழிபெயர்ப்புப் பணியில் செ.நடேசன், மிலிட்டரி பொன்னுசாமி, போன்றோரின் பணிகளையும், தொல்பொருள் ஆய்வுப்பணியில் வீர்ராசேந்திரன் குழுவினர் குறிப்பாக பேராசான் சுந்தர்ம், ரவிக்குமார் போன்றோரின் பணிகளையும் குறிப்பிட வேண்டும் .
திருப்பூர் பகுதியின் மண் சார்ந்த கூத்துக்கலை “ அண்ணன்மார்சுவாமி கதை “ இப்பகுதியைச் சுற்றிய:ள்ள பல குடும்பங்களால் இன்னும் இரவு நேரங்களில் நிகழ் கலையாக அரங்கேற்றப்படுகிறது. இதனை எளிமையாக கலைஞர் கருணாநிதி நாவலாக்கினார். ஆனால் மூலத்திற்கு அது நேர்மையாக இல்லை. இன்னும் திரைப்படத்தில் அது சொச்சையாக்கப்பட்டது.பழனிச்சாமி புலவர் போன்றோர் இப்பகுதி பற்றி பல மரபு வழிக் காவியங்களை இஅய்ற்றியுள்ளனர். பழனிச்சாமி புலவரின் காவியங்களில் அழகுமலைக்குறவஞ்சி போன்றவை முக்கியமானவை. இவரின் தந்தை புலவர் கருந்தும்பின் பங்களிப்பும் முக்கியமானது.
திருப்பூர் குமரனின் வாழ்க்கை பற்றிய சித்திரத்தில் முன்னணியில் நிற்பவர் அவருடன் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட பி எஸ். சுந்தரம் அவர்கள். திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை பி எஸ். சுந்தரம் முதல் ஜீவபாரதி, மு.பழனிச்சாமி, அனிதா கிருஷ்ணமூர்த்தி, போன்று நூறுபேராவது எழுதியிருக்கிறார்கள் .
திருப்பூரில் டாஸ்மாக் கடைகள் மிக அதிகம்.. வருமானமும் அதிகம் . புள்ளி விபரங்கள் எந்த உயிருக்கும் ஆறுதல் தராது. திருப்பூர் மாவட்டம் ஆண்டுக்கு 1100 கோடி ரூபாய் டாஸ்மாக்கால் வருமானம் தருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 300 கடைகளும் திருப்பூர் நகரில் 150 கடைகளும் உள்ளன. தினமும் 3 கோடி ரூபாய்க்கு குடிக்கும் திருப்பூர் வாசிகள் பண்டிகை தினங்களில் 6 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள்.thinamum. தினமும் 10 -12 மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்கள் வாசிப்பை தொடர்ந்து மேற்கொளள் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப்பெருமன்றம், கனவு இலக்கியவட்டம் , திருப்பூர் தமிழ்ச்சங்கம் ( இது 25 ம ஆண்டு )பதியம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து இலக்கியச் செயல்பாட்டால் திருப்பூரின் நிலையை மக்களுக்கு படைப்பிலக்கியத்தின் வழியே உணர்த்தி வருகின்றன. பின்னல் புத்தக நிலையம் நடத்தும் தொடர்ந்த வாசிப்பு முகாம்கள், புத்தக்கக் கண்காட்சிகள் ( புத்தக தினம், குழந்தைகள் தினம் இவற்றை முன்னிட்டு இவர்களின் நகரின் 100 இடங்களிலான புத்தகக் கண்காட்சிகள் கடந்த இரு ஆண்டுகளில் பெரும் சாதனையாகக் கொள்ளலாம் )
என் . * நைரா – நாவல் : ( நைரா- நைஜீரிய ரூபாய் )
உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு கலாச்சார அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும் சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்தவரிகளில் ஒடியா, பீகார் , வங்காள மக்களைப்போன்று நைஜீரியர்களுன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
நுகர்வு மயமாகிப் போன சூழலில் திரையரங்குகளும் திரைப்படங்களுமே மக்களின் வாழ்வியலாகப் போய் விட்ட தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு நூலகம் வாசகர்களுக்கு அடைக்கலமாக , ஒரு வேடந்தாங்கலாக 16 ஆண்டுகளாக விளங்குவதை ஆச்சர்யத்தோடே பார்த்து வருகிறேன் திருப்பூர் மக்கள் மாமன்றம் நூலகத்தை. ஒரு திரையரங்கின் வாசலில் 16 ஆண்டுகளாய் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறது –ஒரு கோவில், ஒரு தீயணைப்பு நிலையம், நெரிசலானத் தெருவில் ஒரு திரையரங்க முகப்பில் சற்றே ஓரமாய் மக்கள் மாமன்றம் பாசமுள்ள அம்மாவுடன் நின்றிருக்கும் குழந்தையைப் போல ..
இதுவரை சுமார் 5,00,000 வாசகர்கள் அங்கு வந்து நூல்களை, இதழ்களைப் படித்துப் பயன்பெற்றிருக்கிறார்கள்.
திருப்பூரின் பல அரசு நூலகங்களுக்கு இல்லாத பெருமை இந்தத் தனியார் நூலகத்திற்கு உண்டு.சாதாரண வாசகர்களின் அடைக்கலம் என்பதே அது . இலவச நூலகம். இதன் ஸ்தாபகர் சி.சுப்ரமணீயன் எழுதிய திருப்பூரைச்செதுக்கிய சிற்பிகள் நூல் குறிப்பிடத்தக்கது. திருப்பூரின் வரலாறை அஜிதன் குப்புசாமி, சிவதாசன் போன்றோர் எழுதியுள்ளனர். விரிவான வரலாறுகள் வர வேண்டும்.
aஆர்பி அமுதனின் திருப்பூர் : “ டாலர் சிட்டி “ சமீபத்திய ஆவணப்படம் பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத்தொழிலாளி, விசைத்தறி தொழிலாளிகள் , பனியன் உற்பத்தியாளர்கள் , தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் – அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஒரு ஆவணப்பட இயக்குனரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய படமாக இதைக்கொள்ளலாம்..
” நான் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். நான் பீகாருக்குப் போனால் இந்த தமிழ் நோ யூஸ். இங்கு பீகாரி மொழி கற்றுக் கொடுங்கள் . கற்றுக் கொள்கிறேன். என்க்கு இந்தி இரண்டாம் பட்சம் . அதுகூடப் பரவாயில்லை. கற்றுக் கொள்ளலாம் . நான் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். நானா கேட்டேன். இல்லையென்றால் என்னை விட்டு விடுங்கள் . பனியன் கம்பனிக்குப் போய் சம்பாதிப்பேன்.. என்னைக் குழந்தைத் தொழிலாளி என்றெல்லாம் சொல்லாதீர்கள் ”
இது போன்ற குரல்கள் இங்கு இப்போது சாதாரணம்
ஒன்பது வயது ரோஷனின் ரோஷமான குரல் இது . கல்வி கற்கும் வயது . திருப்பூருக்குஅவன் பெற்றோர் வேலைகாரணமாய் இடம் பெயர்ந்து வந்ததால் தத்தளிக்கிறான்.ஏதாவது இணைப்புப் பள்ளியில் சேர தன்னார்வக்குழுவினர் முயலும் போது இந்தக் கேள்விகளைத்தான் கேட்கிறான்.
திருப்பூரின் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது 100 குழந்தைகள் இப்படி பள்ளிக்கு வெளியே இருக்கிறார்கள். திருப்பூரில் மொத்தம் 60 வார்டுகள்.
திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று 5 மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று… அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆதார் வைத்திருப்பார்கள். ரேசன் அட்டை என்று ஊரில் இருப்பதில்லை. நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன. இவர்களைப் பற்றியது தான் சமீப என் நூல் மைக்ரேசன் 2.0 ( migration 2.0 )
சுதந்திரப்போராட்டம், தியாகி குமரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான தியாகிகள் இந்திய சுதந்திரத்தில் பங்காற்றிய ஊர். திருப்பூரில் சுதந்திரப்போராட்டத்தில் 144 தியாகிகள் ஈடுபட்டிருப்பதை சமீபத்தில் சுதந்திரப்போரில் திரூப்பூர் தியாகிகள் நூலை வெளியிட்டிருகும் பிஆர் நடராசன் பதிவு செய்திருக்கிறார் . 2008ல் திருப்பூர் மாவட்டமாக உருவாகியிருந்தாலும் நகரின் கட்டமைப்பு, சுகாதாரம், கழிவு நீர் மேலாண்மை , சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தத்தளிக்கிறது. தொழிலாளி வர்க்கம் தன்னை தொழிலாளியாக உணர வாசிப்பும் புத்தகங்களூம் அவசியம் என்பதை நகரில் நடக்கும் விபரீத செயல்கள், தற்கொலைகள் உள்ளிட்டவை காட்டுகின்றன.
இந்நூலாசிரியர் சுப்ரபாரதிமணியன் :
15 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 55 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர் .. ” சாயத்திரை “ என்ற சுற்ற்சுச்சூழல் மாசுபாடு பற்றிய நாவலுக்கான தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “ கதா விருது “ உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்
- காதற்காலம்- (பிரணயகாலம்)
- நாடோடிகளின் கவிதைகள்
- ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்
- நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
- மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்
- வெளிநாட்டு ஊழியர்கள்
- வாழ்க நீ
- வெங்காயம் — தக்காளி !
- பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி
- பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்
- தொடுவானம் 207. போதை
- இன்று ஒரு முகம் கண்டேன் !
- பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன