அந்த வார்த்தை உச்சரி ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 13 of 14 in the series 18 பெப்ருவரி 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

அந்த வார்த்தை உச்சரி !

கண்ணே !

அந்த வார்த்தை உச்சரி !

வந்திடும் உனக்கு விடுதலை !

அந்த வார்த்தை சொல்லிச் சொல்லி

என்னைப் போல இருந்திடு !

சிந்திக்கும் எனது வார்த்தையை

முந்தி நீயும் சொல்லிடு !

காதலென்று

அந்த வார்த்தை உன்

காதில் பட்ட துண்மையா ?

வார்த்தை கேட்டுத் தினம்

துள்ளு தென்மனம்

அள்ளும் அந்திப் பொழுதிலே.

காதலெனும் அந்த வார்த்தை

எனக்கு

ஆதியிலே புரிய வில்லை !

புரிந்த தின்று

அந்த இனிய வார்த்தையே !

சென்று போன இட மெல்லாம்

செவில் பட்டது

அந்த இனிய வார்த்தையே !

நல்ல நூலில் இருந்தது !

தொல்லை நூலில் இருந்தது !

அந்த வார்த்தை

காதலென்று

எந்த நேரம் சொல்லிடு !

உள்ளும் உணர்ச்சி உண்மை யென்று

துள்ளும் எந்தன் நெஞ்சமே !

ஒவ்வொரு மனிதனுக்கும்

ஒளிகாட்டச்

செல்வ தென்பணி யப்பா !

எடுத்துச் சொல்

அந்த வார்த்தை,

வழிகாட்டும் உனக்கும் எனக்கும்

அந்த வார்த்தை !

எப்போதும்

எந்தன் நினைவில் இருக்குமே !

அந்த வார்த்தை

காதல் ! காதல் !! காதலே !!!

Series Navigationராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் வழங்கும் விழாபூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *