ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்!

This entry is part 18 of 20 in the series 25 பெப்ருவரி 2018

 

 

  • லதா ராமகிருஷ்ணன்

தன்னளவில் சிறந்த வாசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கும் நம் நட்புவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியன் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் அவ்வப்போது தன் மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்றிவருகிறார். அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று கீழே இடம் பெற்றுள்ளது.

 

பாரதியாரின் கவிதை ஆங்கிலத்தில்:
(மொழியாக்கம்: ராஜேஷ் சுப்ரமணியன் )

 

A tiny ball of ember

A tiny ball of ember
that I found,
I placed in a tree hole
In the vast woods.
The forest was burnt
Into ashes
In valiant bravery
No difference between
An infant and a ripened
.
Thatharikida thathrikida thithom

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்

(பாரதியார்)

 

பிறமொழி எழுத்தாக்கங்கள் தமிழுக்கு வருவது எத்தனை முக்கியமோ அந்த அளவு அவசியமானது நம் மொழி எழுத்தாக்கங்கள் பிறமொழிகளில் அறிமுகமாவதும் என்ற உண்மையை உணர்ந்தவராய் பிறமொழியிலிருந்து சிறந்த படைப்பாக்கங்களை அறிமுகப்படுத்தும் இணையதளம் ஒன்றையும், தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழியாக்கங்களை இடம்பெறச் செய்யும் இணையதளம் ஒன்றையும் துவங்கியிருக்கிறார். அவருடைய முயற்சிக்கு நம்முடைய ஆதரவும் பாராட்டும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கவேண்டும்.

 

A platform for showcasing Tamil Literature in English translation
The website aspires to be an active platform for the global, non-Tamil speaking audience to access the various facets of Tamil Literature, both Classical and Modern.English translations of Tamil works- Fiction, Literary Non-fiction, Interviews, Poetry, Book reviews etc are welcome. English translations have to be accompanied by the text of the Tamil original along with evidence/email of permission from the author/copyright author to publish the translation.

 

Articles could be emailed to: editor@tamilliterature.in

Published and Edited by: Rajesh Subramanian
Rajesh is based in Chennai, India and could be reached at:
editor@tamilliterature.in

 

Series Navigationபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்கடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *