எதிர்காலம்…

author
0 minutes, 3 seconds Read
This entry is part 19 of 19 in the series 15 ஏப்ரல் 2018

அரிசங்கர்

2022, ஒரு நவம்பர் மாலை . நிறைமாத கர்பிணி வர்ணா தன்
வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிக்கிறாள். தீடிரென முக்கிய செய்தி ஒன்று ஒளிப்பரப்பாகிறது. பிரதமர் அறிவிப்பு: ”இன்று இரவு 12 மணிமுதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இனி பெயர் கிடையாது. அரசே அவர்களுக்கு ஒரு எண்ணை வழங்கும். அந்த எண்ணே அவர்களுக்கான அடையாளம்.அந்த எண்ணே அவர்களுக்கான வாக்களர் எண், எரிவாயுஎண், பாஸ்போர்ட் எண், வங்கி எண், பான்கார்டு எண் என அனைத்தும். அந்த எண்ணை கணினியில் பதிவு செய்தால் போதும் உங்களின் அனைத்து விவரங்களும் வந்துவிடும், வங்கி கணக்கு அதில் எவ்வளவு பணம் உள்ளது, எவ்வளவு சொத்து உள்ளது, என்ன நோய் உள்ளது, என்ன வாங்கினாய் என அனைத்தும் தெரியவரும்.12 மணிக்கு முன் பிறந்தவர்கள் அனைவர்களுக்கும் அவர்களின் ஆதார் எண்ணே அவர்களின் எண்ணாக எடுத்துக்கொள்ளப்படும்” செய்தி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க, அதிர்ச்சியில் வர்ணாவுக்கு பிரசவ வலி ஏற்பட சரியாக இரவு 12:02க்கு வர்ணாவுக்கு TN01422022110600036 பிறந்தான்.
“TN01422022110600036”இதில் TN என்பது மாநிலத்தையும், 01 என்பது மாவட்டத்தையும், 42 என்பது பகுதியையும், 2022 என்பது ஆண்டையும், 11 மாதத்தையும், 06 என்பது நாளையும். 0036 என்பது குழந்தையின் எண்ணயும் குறிக்கும்.
“TN01422022110600036” இதை அவரவர் விருப்பம் போல் சுருக்கி அழைத்துக் கொண்டனர். “TN01422022110600036” தன் பள்ளி, கல்லூரி படிப்பை எல்லாம் முடித்து வழக்கம் போல் தன் படிப்புக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஐடி கம்பெனியில் தன் வாழ்க்கையை துவங்கினான்.
வழக்கம்போல் அவனுக்கு ஒரு பெண் பார்க்கும் படலம் ஆரம்பானது இதற்குள் நாட்டில் புது வித சோதிட பொருத்தங்கள் எல்லாம் உருவாகிவிட்டது. பெயர் பொருத்ததிற்கு பதிலாக எண் பொருத்தம், odd number பொருத்தம், even number பொருத்தம், பெறுக்கல் பொருத்தம், கூட்டல் பொருத்தம் என பல பொருத்தங்கள் பார்த்து அவனுக்கு ஒரு திருமணம் நடந்துவிட்டது.
இதற்க்குள் நாட்டில் பல மாருதல்கள் நடந்துவிட்டது. அரசு பள்ளி, அரசு கல்லூரி, அரசு வேலை, அரசு போக்குவரத்து என அரசுக்கு என்று ஒன்றுமேயில்லாமல் அனைத்தையும் அழித்துவிட்டது. அரசு தன் கட்டுபாட்டில் காவல்துறையும் அதற்க்கு சம்பளம் தர டாஸ்மாக் மட்டுமே வைத்திருந்தது.
பள்ளிகள் பெற்றோர் சொத்து மற்றும் வருமானத்தைக் கொண்டே குழந்தைகளுக்கு இடம் வழங்கியது. மாநிலத்தின் தலைநகரில் மிக பெரிய பள்ளி சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதில் இரண்டே கேள்விகள்.
தந்தையின் எண்:_________________________________
தாயின் எண்:______________________________________
இந்த இரண்டை வைத்தே அவர்கள் மொத்த ஜாதகத்தை எடுத்துவிடுவார்கள். இதில் பண மதிப்பில் முதல் 300 பேருக்கே இடம் கிடைக்கும். இந்த 300 ஒருவனாக “TN01422022110600036” தன் மகனுக்காக வரிசையில் காத்திருந்தார். தன் முறை வந்ததும் பள்ளி முதல்வரின் அறைக்குள் தன் மகனுடன் சென்றார். அவர்கள் தன் எதிரில் அமர சொன்ன பள்ளி முதல்வர்
“வாழ்த்துகள், உங்க குழந்தைக்கு இங்க இடம் கிடைச்சது நிங்க பண்ண புண்ணியம்”
“ரொம்ப நன்றி சார்”
“அப்பறம் எங்க கண்டிஷனயும் சொல்லிடறோம், முதல் உங்க குழந்தை இங்க சேர்ந்த அடுத்த நொடிலருந்து, உங்க சொத்து, உங்க வங்கி கணக்குல உள்ள பணம் எல்லாம் எங்களுக்கு வந்துடும். இனி நிங்க சம்பாதிக்க போறது, உங்க மனைவி சம்பாதிக்க போறது எல்லாம் எங்களோட கணக்குளதான் வரும். நிங்க, உங்க மனைவி, குழந்தை மூணுபேரும் வாழ என்ன தேவையோ அத நாங்க உங்களுக்கு தருவோம். உங்க குழந்தை படிப்பை முடிக்கற வரைக்கும் நிங்க உங்க சொந்த வீட்டுல தங்கலாம் அப்புறம் அதுவும் எங்களுக்கு வந்துடும்.
மத்தப்படி உங்க குழந்தை படிப்புக்கு ஆன அத்தனையும் நாங்களே பார்த்துப்போம். இதுக்கு சம்மதம்னா இந்த அக்ரிமென்ட்ல ஒரு கையெழுத்து போடுங்க”
“உங்க பள்ளிக்கூடத்துல எங்க பையன் படிக்கறதே எங்களுக்கு பெருமைதான், அதுக்கு மேல எங்களுக்கு வேற என்ன வேணும்” என்று TN01422022110600036ம் அவர் மனைவியும் கையெழுத்து போட்டுவிட்டு “நன்றி” கூறி புறப்பட்டனர். வாசல் அருகில் சென்றவர்களிடம், பள்ளி முதல்வர்
“ஒரு நிமிடம்”
அவர்கள் திரும்பி அவர் அருகில் வர,
“உங்க பையன் இங்க படிச்சி முடிச்சி வேலைக்கு போக ஆரம்பிச்சதும், அவன் வருமானத்துல் 40% எங்களுக்கு வந்துடும். இங்க படிச்சி தான சம்பாதிக்க போறான்” என்றார்.
TN01422022110600036ம் அவன் மனைவியும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டனர்.
பள்ளிமுதல்வர் “அதுவும் அக்ரிமெண்டில் இருக்கு” என்றார்.
அவர்கள் எதுவும் பேசாமல் புறப்பட்டனர்…

————————————————————-

Series Navigationதூக்கிய திருவடி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *