மீண்டும் வேண்டாம் !

This entry is part 6 of 9 in the series 23 செப்டம்பர் 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

நீ அன்றென்னை அழ வைத்தாய் !

நினைவி ருக்கும் உனக்கு !

ஏனென்று சிந்திப்பதில் பயனில்லை !

நான் அழுதது உனக்காக !

இப்போது நீ மனம் மாறினாய்.

என் மனம் மாறுவதில் பயனில்லை !

நான் அழுது முடித்தேன் .

பழைய பாடல் வரியே நீ சொல்கிறாய்.

ஏனென அறியேன் நான்.

முன்பென்னைக் காயப் படுத்தினாய்.

மீண்டும் காயப் படுத்து கிறாய் !

வேண்டாம் !  வேண்டாம் !

மீண்டும் இரண்டாம் தடவை

வேண்டாம் !

நீ அன்றென்னை அழ வைத்தாய் !

நினைவில் உள்ளதா ?

ஏன் அழுதேன் தெரியுமா ?

என்னை விட்டுச் சென்ற

உனக்காக அழுதேன் !

 

+++++++++++++

Series Navigationமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியேதொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *