சென்னைத் தாரிணிப் பதிப்பக அதிபர் வையவன், எனது கவிதை நூல் “விழித்தெழுக என் தேசம்” என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாறுமாறான தலைப்புகளில் என் முதற் கவிதை நூல் படைப்பு தளிர்த்து வளர்ச்சி பெறுகிறது. ஆயினும் தாறுமாறான கலப்பு உணர்ச்சிகளின் ஊடே, கவிதைகளில் நேரிய மனித நேயம் தொனிக்கவே முயற்சி செய்திருக்கிறேன்.. என் “நெஞ்சின் அலை” அடிப்புகள் மானிடத்துக்கு ஆக்க முறையில் ஏதாவது செய்யத் தூண்டுமா, தூண்டாதா என்பதை நான் அறியேன். இந்த நூலைப் படிக்க முன்வரும் வாசகரும், எதிர்காலத் தமிழக வரலாறும் தான் அதற்குப் பதில் சொல்ல முடியும்.
திண்ணை.காம் [thinnai.com] இல் 2002 ஆண்டு முதல் வெளியான எனது பெருங்கவிதைப் படைப்புகளான தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, தாகூரின் கவிதைப் பாமாலை, காதல் நாற்பது, கலில் கிப்ரான் கவிதைகள், ரூமியின் கவிதைகள், நெருடா கவிதைகள், உமர் கயாம் ஈரடிப் பாக்கள், வால்ட் விட்மன் வசனக் கவிதைகள், மீராவின் கீதங்கள், சூழ்வெளிக் கவிதைகள், ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள், பீட்டில்ஸ் பாடகர் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த படைப்புகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் இந்நூலில் நான் போட்டுள்ளேன். இந்நூலில் வரும் பெரும்பன்மையான கவிதைகள் புதிய , பழைய திண்ணை.காம் [thinnai.com], வல்லமை.காம் [vallamai.com], நெஞ்சின் அலைகள் [எனது வலை] [Jayabarathan.wordpress.com] ஆகிய மூன்றிலும் 2002 முதல் 2018 à ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்தவை.
கவிதை வரிகள் முழுக்க முழுக்க என்னைக் காட்டும் என் தனித்துவக் கருத்துகளே. அவற்றுள் எனது குருதி அணுக்கூறு [டியென்ஏ] ஒவ்வொன்றும் ஒளிந்துகொண்டு உள்ளது.
பாரத தேசம் பாரிலே முன்னேறப் பாதை காட்டியவை தாகூரின் படைப்புகள். அவர் இலக்கிய நோபெல் பரிசு பெறுவதற்கு தனித்துவ ஒளிக்கோடிட்டுக் காட்டியது, கீதாஞ்சலியில் வரும் ஒரே ஒரு கீதம். அதுதான் “விழித்தெழுக என் தேசம்” என்று தாகூர் இறைவனிடம் மெய்வருந்தி வேண்டும் கீதாஞ்சலிக் கீதம். அந்த வேட்கைப் பெயரோடும் என் கவிதைத் தொகுப்பு நூலின் அட்டை குமரி முனை வள்ளுவர் சிற்பமோடும் கவர்ச்சியாக வந்துள்ளது .
இந்நூலுக்கு மதிப்புரை அளித்த கவிஞர்கள் வைகைச் செல்வி [ஆனி ஜோஸபின்], பூங்குழலி, ஷைலஜா, நண்பர் கி.வ. வண்ணன், எழுத்தாள மேதைகள் பவளசங்கரி, தேமொழி, கண்மணி, நந்திதா, கனடா கவிஞர் புகாரி, கவிஞர் வித்தியாசாகர், இராய செல்லப்பா, ஆகியோருக்கு என்னினிய நன்றிகள். வாசித்துப் பிழைகள் திருத்திய நண்பர்கள் வண்ணன், தேமொழி, கண்மணி மூவருக்கும் எனது கனிவான நன்றிகள். உயர்ந்த தரத்தில் அச்சிட்டு இருபதுக்கும் மேற்பட்ட எனது தமிழ் நூல்களை, அகில உலகுக்குப் பரப்பிய எழுத்தாள மேதை, தாரிணி பதிப்பக நண்பர் வையவன் அவர்களுக்குத் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழித்தெழுக என் தேசம்.
நூலின் விலை : ரூ 250
நூலின் பக்கங்கள் : 304
பதிப்பகம் : தாரிணி பதிப்பகம்
4A ரம்யா பிளாட்ஸ்
32/79 காந்தி நகர்,
4வது மெயின் ரோடு
அடையார், சென்னை :600,20
- துணைவியின் இறுதிப் பயணம் – 5
- கழிப்பறைக்காக ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்
- செலவுப் பத்து
- ‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம்
- சுண்டவத்தல்
- விழித்தெழுக என் தேசம் – கவிதை நூல் வெளியீடு