வணக்கம்.
எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’ என்ற கல்கி இதழில் வெளிவந்த சிறுகதையைக் கலைஞர் தொலைக்காட்சிக்காகக் குறுந்திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.
இந்தக்கதை இதுவரை ஆறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுளள்ளது. உங்கள் ஆக்கபூர்வமான கருத்தை எதிர்பார்க்கின்றோம்.
https://www.youtube.com/watch?v=AUKlR7IB7As&feature=youtu.be&fbclid=IwAR2U4oWi_uSDEcPr8vd7wHGHgXg_eInymdMobXRHPxYMmHm6UfxSXl5ahB8
- ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது
- கதவு
- அரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்
- அற்புதம்
- குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’
- செம்மொழித்தமிழில் அமைதி இலக்கியம்
- கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா
- குழந்தைகளும் கவிஞர்களும்
“தேமதுரத் தமிழோசை பாரெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”. “ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிம்;” என்ற சிறந்த சிறுகதை யினை எழுதி அது திரைப் படமாகத் தயாரிப்பதற்கான தராதரத்தினை பெற்றுள்ளதோடு, தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளமை ஈழத் தமி ழர்களாகிய எமக்கு மாத்திர மல்ல பாரெங்கும் பரந்து வாழ்ந்து வரும் தமிழ்மக்கள் அனை வருக்குமே கிடைத்துள்ள பெருமையாகும்.“தேமதுரத் தமிழோ சை பாரெலாம் வரவும் வகை செய்தல் வேண்டும்”என்ற எமது பாரதியாரின் கனவினை நனவாக்கி வரும் பிரபல எழுத்தாள ரும் “கனடா தமிழ் எழுத்தாளர் இணைய” தலைவருமான திரு.குரு அரவிந்தன் அவர்களுக்கு எழுத்தாளனும், பத்திரி கையாளனுமாகிய “வீரகேசரி மூர்த்தி” எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”என எமது ஆன்றோர் கூறி வைத்த அமுத வாக்கினை தனது எழுத்தாற்றலின் மூலம் அகில உலக ரீதியில் நிரூபித்து காண்பித்துள்ளார் எனது எழுத்தாள நண்பரான திரு.குரு அரவிந்தன் அவர்கள்;. தமிழ் மொழியின் அருமையினையும்,பெருமையினையும் அகில உலகெலாம் பரப்ப அவரது எழுத்தாற்றல் பயன்பட வேண்டும் என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.