தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தி இன்று அனைத்து ஊடகங்களின் பிரச்சாரம் செய்யப்படுவது ஒன்றே ஒன்றுதான். அது திமுக ஆதரவு – அதிமுக அரசு எதிர்ப்பு – பாஜக எதிர்ப்பு – இந்து மத எதிர்ப்பு.
இந்த திமுக ஊடக கூக்குரல்களின் அரசியலுக்கு எது உதவும் என்று திமுகவினர் கருதுகிறார்களோ அது இங்கே ஊதி பெரிதாக்கப்படுகிறது. எது உதவாது என்று திமுகவினர் கருதுகிறார்களோ அது இங்கே அமுக்கி மூடப்படுகிறது.
இது அனிதா மரணம், நீட், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, சுஜித் மரணம் என்று நீண்டு இன்று பாத்திமாவிடம் தொடர்கிறது.
இங்கே இருப்பது துயரங்களின் மீதான விவாதமோ அல்லது அதன் மூல காரணங்களோ அல்ல. இங்கே குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக, மக்களை நிரந்தர பதட்டத்திலேயே வைத்திருக்கவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் ஒரு அலையை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படும் ஊடக பயங்கரவாதம்.
இதற்கு யார் எதிர்வினை செய்தாலும், அது சீமானின் கொச்சையான வாந்தியாக இருந்தாலும் சரி, ராஜன் குறை போன்றவர்களின் மயிர்பிளக்கும் இண்டெலக்சுவல் வாதமாக இருந்தாலும் சரி, அவை அனைத்துமே இந்த ஊடக பயங்கரவாதத்தின், அங்கங்களாக மாறிவிடுகின்றன. இவர் அது சொன்னார், அவர் இது சொன்னார் என்று பேசப்படும் எதுவுமே இந்த ஊடக பயங்கரவாத்த்துக்கு தீனியாகிவிடுகின்றன.
ஏன் உதாரணத்துக்கு இந்த பாத்திமா தற்கொலையையே எடுத்துகொள்ளலாம்.
2015ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை 8934 . தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் எண்ணிக்கை 955 பேர்கள். இத்தனை பேர் தற்கொலை செய்துகொண்டதற்கும் பார்ப்பான்கள் தான் காரணம் என்று பெரியார் மீது சத்தியம் செய்ய ராஜன் குறையிலிருந்து சுப வீரபாண்டியன் வரைக்கும் வரிசையில் வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. #பிணந்தின்னிதிமுக என்று ஹேஷ்டாக் அடித்து திமுகவை விமர்சிக்கிறார்கள் இணையத்தில்.
இது பற்றிய இந்திய அரசின் ஆய்வு பல விஷயங்களை தெரிவிக்கிறது.
http://ncrb.gov.in/StatPublications/ADSI/ADSI2015/chapter-2%20suicides-v1.pdf
இது பற்றிய ஆய்வோ, இந்த தற்கொலைகளை எப்படி குறைப்பது, இவ்வாறு வருத்தப்படும் இளைஞர்கள், முதியவர்கள், ரிடயர்ட் ஆனவர்கள், மாணவர்கள், குடும்ப பெண்டிர்களுக்கு எப்படிப்பட்ட செய்திகளை நாம் கொண்டு செல்லவேண்டும், எப்படிப்பட்ட திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற எந்த விதமான சிந்தனையுமில்லாது, எல்லா பிரச்னைகளையும் சாதியம், பார்ப்பனியம், பாசிசம் என்று பார்க்க பழகிவிட்ட அறிவுஜீவி கொழுந்துகள் இன்று ஒரு சிந்தனை தளத்தையே நாசமாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
சாவு வீட்டிலும் பிணமாத்தான் இருக்கணும் என்ற செண்டர் ஆஃப் அட்ராக்ஷன் வியாதி கொண்ட பிராம்மணர்களுக்கு, எதிலும் வில்லனும் நான் தான், ஹீரோவும் நான் தான் என்று இருப்பதில் ரொம்ப ஆசை போலிருக்கிறது. ஆகவே பிராம்மணர்களை வில்லனாக காட்ட ராஜன் குறை போன்றவர்கள் முனையும்போது பிராம்மணர்களை ஹீரோவாக காட்ட இன்னும் கொஞ்சம் பேர் முயல்கிறார்கள். பிராம்மணர்களை வில்லனாக காட்ட திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்கள் முக்கி முக்கி முனையும்போது அதனை தமிழ் ஊடக பயங்கரவாத பரப்பில் பரப்புரை செய்ய ஸ்டாலினுக்கு துண்டு சீட்டு எழுதிகொடுக்க, சன் டிவி, கலைஞர் டிவி, நியூஸ் 8, நியூஸ் 18, புதிய தலைமுறை, சத்தியம் தொலைகாட்சி, முஸ்லீம் பரப்புரைகள் என்று மாய்ந்து மாய்ந்து ஆளாய் பறக்கிறார்கள்.
இதில் ஒரு பிண்ணாக்கு கருத்தை சொல்லி நானும் இந்த தமிழ் ஊடக பயங்கரவாத பரப்பில் பங்கு கொண்டுவிட்டேன் என்பதை நினைத்து வருந்துகிறேன்.
—
தமிழ் ஊடக பயங்கரவாத பரப்புக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இந்திய ஊடக பயங்கரவாதம்.
உதாரணத்துக்கு பாபர் கட்டிடம்/ ராம ஜன்ம பூமி தீர்ப்பையே எடுத்துகொள்ளுங்கள்.
ராம ஜன்ம பூமி தீர்ப்பை
சன்னி வக்ப் போர்டு
ஷியா வக்ப் போர்டு
ஆல் இந்தியா உலமே கவுன்ஸில்
இந்தியன் முஸ்லீம் லீக் ஆகிய அமைப்புகளும், அந்த வழக்கில் பெட்டிஷனரான இக்பால் அன்சாரி என்பவருமே இந்த தீர்ப்பை ஏற்றுகொண்ட நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக அஸாதுதீன் ஒவாய்ஸி என்ற ஹைதராபாதை சேர்ந்த அரசியல்வாதியின் பேச்சையே திரும்ப திரும்ப ஊடகங்கள் காட்டி முஸ்லீம்களை இந்த தீர்ப்புக்கு எதிராக கிளர வைக்க வேண்டும் என்றே செயல்படுகின்றன.
இதில் முக்கியமான விஷயம் என்றவென்றால், இந்த அஸாதுதீன் ஒவாய்ஸி என்பவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். ஆனால், அந்த பாபர் கட்டிடத்தின் மேற்பார்வையாளராக இருந்தது சன்னி வக்ஃப் போர்டு. சன்னி வக்ஃப் போர்டின் கீழ் இருக்கும் ஒரு கட்டிடத்துக்குள் ஒரு ஷியா நுழைய முடியாது. ஆனால் இவர் ”என்னுடைய மசூதி எனக்கு வேண்டும்” என்று ஒரு கட்டுரை எழுத அதனை கேள்வி இல்லாமல் பத்திரிக்கைகள் பிரசுரிக்கின்றன. அது மசூதியாக இருந்தாலும் அதில் இவர் நுழைய முடியாது. அப்புறம் என்ன இவருக்கு “அவர் மசூதி”?
ஆனால், இந்திய பத்திரிக்கைகளின் கண்மூடித்தனமான பாஜக எதிர்ப்பில், எந்த அளவுக்கு முஸ்லீம்களையும் காஷ்மிரிகளையும் கிளப்பிவிட்டு கலவரம் உண்டுபண்ண முடியுமோ அந்த அளவுக்கு இவை முயற்சிக்கின்றன. 500 வருடமாக ஒரே ஒரு கோவில் இருந்த இடத்தை மீட்க சட்டப்பூர்வமாக நவாப் காலத்திலும், பிறகு பிரிட்டிஷ் காலத்திலும், பிறகு நேருவிய இந்தியா காலத்திலும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே இறுதியில் சட்டப்பூர்வமாக அந்த நிலத்தை இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் இந்தியாவில் பெற்றிருப்பதற்கு, இந்துக்களின் பொறுமையை பற்றி ஒரு பாராட்டு வார்த்தையை இந்த இந்தியாவில் பார்க்கமுடியவில்லை. இவர்கள் பார்ப்பதெல்லாம் அரசியல் காரணமாக, பாயாச மோடிதான்.
இவர்கள்தான் இந்தியாவின் அறிவிஜீவிகள் என்றால், எனக்கும் ஏனைய சாதாரண இந்துக்களும் இந்தியாவின் அறிவுஜீவிகளை பார்த்து நகைப்பதில் என்ன தவறிருக்கமுடியும்?
- ஊஞ்சல்
- ஒரு பிடி புல்
- கொஞ்சம் கொஞ்சமாக
- 50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.
- 8.பாணன் பத்து
- ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3
- பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்