ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

This entry is part 6 of 7 in the series 17 நவம்பர் 2019

வாழ்நெறி நான் நீங்கள் அவர்கள் என்ற மூன்று வார்த்தைகளின் நானாவித இணைவுகளில் ஐந்துவிரல்களுக்கிடையே ஆறேழு மோதல்களை உருவாக்கி எட்டும் திசையெல்லாம் ’அமைதிப்புறா’ அடைமொழியும் கிட்டுமென்றால் ஒன்பது நாட்கள் ஒரு வாரத்திற்கு என்றாலும் பத்துதான் முதல் ஒன்று கடைசி யென்றாலும் இரண்டை மூன்றென்றாலும் ஏழை சுழியமென்றாலும் வேறு என்னென்னவோ இன்னும் சொன்னாலும் சரி யென்று சொல்வதே அறிவுடைமையாக…… *** 2. நாய்வால் வழக்கம்போல் ஒருநாள் சோறுவைத்தபின் நாயின் வாலைக் கடன் கேட்டான். வியப்போடு அவனைப் பார்த்தவாறே செஞ்சோற்றுக்கடன் தீர்க்க […]

8.பாணன் பத்து

This entry is part 5 of 7 in the series 17 நவம்பர் 2019

                                பாணனின் தொடர்பாக இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. பாணர்கள் பலவகையான தொழில்களைச் செய்து வாழ்ந்தவர் ஆவர். இதில் சொல்லப்படும் பாணன் யாழ் வாசிப்பவன். தலைவன், தலைவி ஆகியோர்க்குப் பணிகள் செய்வதோடு தூதும் சொல்ல வல்லவன். அவர்கள் இருவரும் சினந்தாலும் வருந்தாதவன். அவர்களின் வாழ்வுக்குத் தன்னால் முடிந்த மட்டும் உதவி செய்பவன். ===================================================================================== 1.எல்வளை நெகிழ மேனி வாடப் பல்இதழ் உண்கண் பனிஅலைக் கலங்க, துறந்தோன் மன்ற, மறம்கெழு குருசில்; அதுமற்று உணர்ந்தனை போலாய் […]

50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.

This entry is part 4 of 7 in the series 17 நவம்பர் 2019

கடல் புகு வெனிஸ் நகரில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.[Venis Lagoon City Flooded in Italy] Venice the Lagoon City of Italy[November 14, 2019]+++++++++++++++1. https://www.cbc.ca/news/world/venice-st-marks-square-flooding-1.53623482. https://www.nationalgeographic.org/encyclopedia/lagoon/3. https://youtu.be/9z-P8QoClLA4. https://youtu.be/bYAysXU0r7o++++++++++++++++சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Canada +++++++++++++++++++++  Low Level Lagoon City Venice in Italy ++++++++++++++++++++  1. https://youtu.be/2jYhbaHT1uc2. https://youtu.be/daJPoLVgbT03. https://youtu.be/3TVPEyup6bg4. https://youtu.be/jJ_TnZzk84E5. https://youtu.be/aHNWZ018ln86. https://youtu.be/9z-P8QoClLA7. https://youtu.be/bYAysXU0r7o  ++++++++++++++++++++++  கடல் நுழைந்த தாழ்தரை நகரம் வெனிஸ்[Lagoon City Venice]+++++++++++++++++ கடல் புகு தாழ்தரை வெனிஸ் நகரம் கடல் அலை உயர்ந்து முடங்கியது. 50 ஆண்டுகட்குப் பிறகு கடல் மட்டம் உயர்ந்து வெனிஸ் […]

கொஞ்சம் கொஞ்சமாக

This entry is part 3 of 7 in the series 17 நவம்பர் 2019

என்னைக் கொன்று கவிதை ஒன்று செய்தேன் ஐயம் திரிபறச் சொன்னால் ஐம்பது பேரைக்கூட அக்கவிதை எட்டவில்லை ஆங்கிலத்தோடு அழகுதமிழ் பின்னி அந்த ஹிப்ஹாப் தமிழன் ஆடிப்பாடிய கவிதை ஆறே நாளில் ஆறு லட்சத்தைத் தொட்டுவிட்டது அமீதாம்மாள்

ஒரு பிடி புல்

This entry is part 2 of 7 in the series 17 நவம்பர் 2019

கு. அழகர்சாமி திசைவெளியெல்லாம் யாருமற்று கேட்க தீனக்குரலெடுத்து கதறும் அது. ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? அடுத்த பலி அது- பலி அறியாதாயினும் பசி அறியாதிருக்குமா அது? ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? கூற்றாய்க் காத்திருக்கும் கொலைப்பசியில் அவன் வெட்டுக்கத்தி. உயிர் செகுத்த பின் வயிறு பசிக்குமா அரூப ஆட்டுக்கு? ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? கூற்றின் கொண்டாட்டம். ஒரே வெட்டு. அறுபட்டு விழும் ஆட்டின் தலை. பீறிட்டடிக்கும் அவன் குருதி. திசைவெளியெல்லாம் […]

ஊஞ்சல்

This entry is part 1 of 7 in the series 17 நவம்பர் 2019

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 களில். அங்கு 10 அடி நீள இரும்புச்சங்கிலியில் தொங்கும் தொட்டிப்பலகை பிரசித்தம். அதில் ஒருவர்தான் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ ஆட முடியும். முறை வைத்து அந்த ஊஞ்சலில் நாங்கள் ஆடியிருக்கிறோம். நான் மட்டும்தான் அதில் 180 டிகிரி தாண்டி ஆடுவேன். சவுக்குக் குச்சியோடு பூங்கா காவல்காரர் எங்களை அடிக்க ஓடிவருவார். ஆடும் ஊஞ்சலிலிருந்து தடாலென்று குதித்து […]

பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்

This entry is part 7 of 7 in the series 17 நவம்பர் 2019

தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தி இன்று அனைத்து ஊடகங்களின் பிரச்சாரம் செய்யப்படுவது ஒன்றே ஒன்றுதான். அது திமுக ஆதரவு – அதிமுக அரசு எதிர்ப்பு – பாஜக எதிர்ப்பு – இந்து மத எதிர்ப்பு. இந்த திமுக ஊடக கூக்குரல்களின் அரசியலுக்கு எது உதவும் என்று திமுகவினர் கருதுகிறார்களோ அது இங்கே ஊதி பெரிதாக்கப்படுகிறது. எது உதவாது என்று திமுகவினர் கருதுகிறார்களோ அது இங்கே அமுக்கி மூடப்படுகிறது. இது அனிதா மரணம், நீட், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, சுஜித் […]