2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது.
இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே.
கவனிக்கவும், 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை.
ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள் (இவர்களே பெரும்பான்மை)க்கு குடியுரிமை வழங்குவதையே இந்த சட்டம் உறுதி செய்கிறது. இவ்வாறு வந்து தங்கியிருக்கும் பலர் இதனை வரவேற்றிருக்கிறார்கள்.
இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லீம் அல்லாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களோ, அல்லது அவற்றின் வரலாறோ தெரியாதவர்கள் இந்த விவாதம் செய்வதற்கே லாயக்கற்றவர்கள் என்பதால், அவற்றை இங்கே நான் பேசப்போவதில்லை.
ஆனால், காங்கிரஸ், திமுக கம்யூனிஸ்டு முஸ்லீம் கட்சிகள் எப்படி முஸ்லீம்களை இந்த சட்டத்தில் சேர்க்காமல் விடலாம் என்று கடும் கோபத்துடன் இன்று வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் பேயாட்டம் ஆடிகொண்டிருக்கிறார்கள். மறு பக்கம், எப்படி இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று அஸ்ஸாமில் கோபத்துடன் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இரண்டும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றுகொன்று தொடர்புடையவை.
ஆப்கானிஸ்தானிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேசிலிருந்து ஏன் இந்தியாவுக்குள் முஸ்லீம்கள் வரவேண்டும்? தனக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டு சென்ற முஸ்லீம்கள் ஏன் இந்தியாவுக்குள் வர விரும்புகிறார்கள்?
முக்கிய காரணம் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது. இன்று அதன் குடிமக்கள் வறுமையினால் இந்தியா வர நேர்ந்துள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடிய காரணம் என்றாலும் அதற்காக குடியுரிமை வழங்க தேவையில்லை. இதற்கு தனி சட்டம் வேண்டும். உதாரணமாக இவர்களுக்கு குடியுரிமை இல்லாத ஆனால் வேலை செய்யும் அனுமதி கொடுக்கக்கூடிய பத்திரங்கள் கொடுக்கப்படலாம். ஆனால் குடியுரிமை தேவையில்லாதது. ஏனெனில் எதிர்காலத்தில் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவை விட அதிக வேலைவாய்ப்புள்ள நாடாக ஆனால், இவர்கள் திரும்ப பாகிஸ்தான் பங்களாதேஷ் சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட பொருளாதார அகதிகளுக்கு குடியுரிமை தேவை இல்லாதது. அவர்களே கூட முக்கியமாக கருதாத ஒரு விஷயம். ஆனால், மத ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதால் இந்தியாவுக்குள் வரும் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள், இந்தியாவை விட பாகிஸ்தான் வளம் மிகுந்த நாடாக ஆனாலும் திரும்பி போவப்போவதில்லை. ஆகவே அவர்களுக்கு குடியுரிமை தேவையான ஒரு விசயம்.
இது சாதாரணமான காமன் சென்ஸ் விஷயம். ஆனால், ராஜன் குறை, அமார்க்ஸ், என் ராம், ஜென்ராம், ரோமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா இன்ன இதர மாங்கா மடையர்களுக்கு காமன் சென்ஸ் என்பதை விட இந்துக்களை எதிர்க்க கிடைத்த வாய்ப்பாகவே அதனை உரு திரித்து ஊதி பெருக்கி பேயாட்டம் போடுவது முக்கியம்.
உதாரணமாக ஸ்ரீ லங்கா தமிழர்கள் உள்நாட்டுப் போராட்ட்ங்களின் போது அகதிகளாய்த் தமிழர்கள் வந்தனர். அவர்களுக்கு தக்க இடம் கொடுத்து ஆதரித்து வருகிறது இந்தியா. ஆனால் சிங்களர்கள் அவர்களுடன் வந்திருந்தால் அவர்களைத் திரும்ப அனுப்புவது தான் நியாயம். அவர்களையும் தமிழர்களைப் போலவே கருதவேண்டும் குடியுரிமை தர வேண்டும் என்று எந்த முட்டாளும் சொல்ல மாட்டான்.
ஆனால் சிங்கள அரசுக்கு எதிராக எழுதி அதனால் சிங்கள பத்திரிகையாளர் இந்தியாவிடம் புகலிடம் கேட்டால் அதை இந்தியா புரிந்துணர்வுடன் விண்ணப்பத்தை ஏற்று பரிசீலிக்க வேண்டும். அது தான் நியாயம். ஆனால் தமிழர்களுக்குத் தரும் புகலிடத்தின் அடிப்படையே வேறு. இதை புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் நடிப்புப் புரட்சியாளர்கள் தான் இந்த சட்டத்தின் எதிர்ப்பாளர்கள். இது அப்பட்டமான இனவாதம்.
–
இதே நேரத்தில் அமெரிக்காவில் கருப்பினத்தவர் வெள்ளையின போலீஸாலும் வெள்ளையினத்து அதிகார வர்க்கத்தாலும் கொல்லப்பட்டபோது எழுந்த குரலை நாம் நினைவில் கொள்ளவேண்டும். #blacklivesmatter என்ற கோஷம் பலரால் எழுப்பப்பட்டது. இதில் வெள்ளையரும் இந்த குரலை எடுத்து கலந்துகொண்டார்கள்.
இதற்கு எதிராக வெள்ளையினத்தவரால் இன்னொரு முழக்கம் வைக்கப்பட்டது. அது #alllivesmatter என்பது.
ஆனால் இதிலுள்ள வன்மமும் வக்கிரமும் எளிதில் விளங்கிகொள்ளக்கூடியது. கருப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கான அமைப்பு ரீதியான காரணங்களுக்கு எதிராக எழுப்பப்படும் கோஷமான ”கருப்பினத்தவரின் உயிர்கள் மதிக்கத்தக்கவை” என்ற வாசகத்தில் உள்ள முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் வெள்ளையின அரசியல்வாதிகள் எல்லா உயிர்களுமே மதிக்கத்தக்கவைதான் என்று எதிர்குரல் கொடுக்கிறார்கள்.
இது கருப்பினத்தவர்களின் துன்பத்தை அவர்களது அவல நிலையை உதாசீனம் செய்கிறது. அவர்களது துன்பத்தை நிராகரிக்கிறது. எல்லாருமே ஒரே மாதிரியான அவலநிலையில்தான் இருக்கிறார்கள் என்று பம்மாத்து செய்கிறது. எல்லா உயிர்களுமே முக்கியமானவைதான் என்று அதனை எதிர்ப்பது இனவாதத்தின் காரணமாக கொல்லப்பட்ட கருப்பினத்தவர்களின் உயிர்களை அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்துகிறது. இவ்வாறு எல்லா உயிர்களும் முக்கியமானவைதான் என்று சொல்லி பலத்த விமர்சனத்துக்கு ஆளானவர்கள் ஹில்லரி கிளிண்டன், டோனல்ட் ட்ரம்ப் போன்றவர்கள்.
”எல்லா உயிர்களும் முக்கியமானவை” என்று சொல்வதே ஒரு இனவாத கோஷமே என்று கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் கார்லா ஷெட் கடுமையான விமர்சனம் வைக்கிறார். இன்னும் பலரின் கடும் விமர்சனத்துக்கு ஆளான ஜென்னிபர் லோபஸ், ஹில்லாரி கிளிண்டன் போன்றவர்கள் தாங்கள் கூறியதற்கு மன்னிப்பு கோரினார்கள்.
எல்லாருமே பாதிக்கப்பட்டவர்கள்தான், ஆகையால் முஸ்லிம்களையும் இந்தச் சட்டத்தில் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அர்த்தமற்ற கோரிக்கையும் இந்த அப்பட்டமான இனவாதத்துடன் ஒப்பிடக் கூடிய ஒன்று.
—
இந்தியாவில் அப்படிப்பட்ட நேர்மையான விவாதத்துக்கு எதிரான எதிரான சூழ்நிலை நிலவுகிறது. காரணம் பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது.
பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் ஆப்கானிஸ்தானிலும் இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சீக்கியர்களுக்கும் எதிரான கொடுமைகள் அமைப்பு ரீதியானவை. இவைகள் தங்களை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துகொண்டவை. இவர்களின் நாட்டில் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ராணுவ தளபதியாகவோ முஸ்லீமை தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால் இந்த பாகிஸ்தான்தான், இந்தியா இவ்வாறு 31313 பேர்களுக்கு குடியுரிமை வழங்குவதை “இந்து பாசிச பயங்கரவாதம்” என்று அழைக்கின்றது. இவை தங்கள் நாட்டில் அமைப்பு ரீதியான வெறுப்பை கொடுமைகளை இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மீது செலுத்தாமல் இருந்தால் ஏன் அவர்கள் இந்தியாவுக்கு ஓடி வரப்போகிறார்கள்? என்று ஒரு அறிவுஜீவி கூட கேட்கவில்லை.
ஆனால், அறிவுஜீவிகளை விட முக்கியம் இங்கே இருக்கும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு கட்சிகளின் அப்பட்டமான இந்து வெறுப்பு.
ராமர் ஒரு கற்பனை என்று நீதிமன்றத்தில் தாக்கீது செய்த காங்கிரஸ் அரசாங்கமும், ராமர் என்ன பொறியியல் படித்தவரா என்று கிண்டல் செய்த திமுகவும், இந்து மத எதிர்ப்பையே முழு நேர வேலையாக செய்யும் கம்யூனிஸ்டுகளும் வழக்கமாக இந்து மதத்தின் மீது காட்டும் வெறுப்பை தாண்டி, இன்று இந்துக்கள் மீதே தங்கள் வெறுப்பை இங்கே அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள். அதுவும் பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் தப்பி இங்கே ஓடிவந்த இந்துக்கள் மீது!
இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலோனோர் ஒரு சில பிராந்தியங்களில் பெரும்பான்மையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமையை வழங்குவது என்பது அவர்கள் மீதான வன்முறையை சிங்களர்கள் அதிகரிக்கவும், அந்த நிலப்பரப்புக்களை சிங்களர்கள் ஆக்கிரமிக்கவுமே வழிவகுக்கும். ஆனால் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற இடங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களோ அல்லது அவர்கள் தேர்தலில் வென்று தங்களை தாங்களே நிர்வகிக்கும் வாய்ப்புக்களோ கிடையாது. 1947இலிருந்து இந்திய அரசு தன் கண்களை இறுக மூடிகொண்டதால், பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகள் இந்துக்கள் மீது கடுமையான இன ஒழிப்பு நடத்தியதால், இன்று விளிம்பு நிலையில் இன்னமும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிகொண்டு இருப்பவர்களே அதிசயம் என்று ஆகியிருக்கும் நிலையில் அப்படி அங்கிருந்து வந்தவர்களுக்கும்குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று பஸ்களை கொளுத்தி போராட்டம் செய்யும் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் தங்கள் மனதில் எந்த அளவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பை வைத்திருக்கிறார்கள் என்று அறியலாம்.
இங்கே தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத ஆதரவு குழுக்கள் பகிரங்கமாக மேடைகளில் இந்த சட்டத்த்தை எதிர்த்து பேசுகிறார்கள். இந்த சட்டத்துக்கும் இவர்களுக்கும் ஸ்னான பிராப்தி கூட கிடையாது. பங்களாதேஷிலிருந்து வந்த இந்துக்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
இங்கே போராட்டமாக வெடிப்பது அப்பட்டமான இந்து வெறுப்பு மட்டுமே. அந்த வெறுப்பு அறிஞர்களாலும் சான்றோர்களாலும் கண்டிக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட இந்து வெறுப்பை பரப்பும் கட்சிகள் மக்களால் முக்கியமாக இந்து மக்களால் புறம் தள்ளப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் முக்கியமாக இந்துக்கள் திமுகவை கடுமையாக நிராகரிக்கவேண்டும். இந்து வெறுப்பையே தனது ஆரம்பமாகவும், இடையாகவும் கடையாகவும் வைத்துள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தை தமிழ்நாட்டில் ஒரு சதவீத வாக்கு கூட பெற முடியாத கட்சியாக ஆக்க உங்கள் அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது
- 2019
- கரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.
- இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்
- குறுங்கவிதைகள்
- சாது மிரண்டால்
- அமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்
- குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.