பட்டனை அமுக்கு
பற்றி எரியும் இலக்கு
எண்ணெய் வேண்டாம் எரிக்க
தண்ணீரே போதும்
இதயமோ ஈரலோ
இல்லாமலே வாழ்வோம்
வயசுக்கணக்கு இனி
விதியிடம் இல்லை
முதுமை பறிப்போம்
இளமை நடுவோம்
ரத்தம் செய்ய
எந்திரம் செய்வோம்
மழை வேண்டுமா?
தருவோம்
கருக்கள் வளர்க்க
இனி கருப்பை வேண்டாம்
உணவுகள் இன்றியே
உயிர் வாழ்வோம்
ஆக்குவோம்
அழிப்போம்
பூமியைப் பிழிவோம்
‘இவனுக்கென்ன
பைத்தியமா?’
அமைதியாய்க் கேட்டது
‘கொரோனா’ வைரஸ்
அமீதாம்மாள்