அஸ்திவாரம்

author
1 minute, 17 seconds Read
This entry is part 2 of 9 in the series 20 டிசம்பர் 2020

மு தனஞ்செழியன்

“ஓடுரா…ஓடுரா.. இன்னைக்கு நம்மள பதம் பார்க்காமல் அது விடாது போலயெ” என்று பின்னங்கால் பிடறியில் பட தலைதெறிக்கும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான் ராமு. அவனை ஒரு காவி நிற நாயொன்று துறத்தி  கொண்டிருந்த்து. மாலை நேரம் என்பதால் வீதிகள் அனைத்திலும் பிள்ளைகாடுகள் விளையாடிக்கொண்டிருந்தன ஆனாலும் அந்த நாய் விடாமல் அவனை மட்டும் துரத்திக் கொண்டிருந்தது.  காபர் வீட்டை தாண்டும் பொழுது காபர் மட்டும் அந்த நாயை தடுத்து நிறுத்த “ அரே.. சைத்தான்.. சைத்தான்…” என்று நாய் வரும் பாதையில் தனது தலையில் வைத்திருந்த குல்லாவை நாயின் மீது தூக்கி வீசி இரண்டு கைகளையும் நீட்டி நின்றுவிட்டார்.

   அவரின் உயரம் 7 அடி அளவு இருக்கும். அந்த ஊரில் யாராவது அவருடன் பேச வேண்டும் என்றால் அவர்களது தலையை 45 டிகிரி மேல் நோக்கி பார்த்தவாறு தான் பேச முடியும் மனிதன் அந்த அளவுக்கு உயரம். அவரும் அந்த ஊரிலேயே ஒரு இலவச பாடசாலை நடத்திவரும் அன்பர். அந்த எழடி உயர மனிதரின் உயரத்தையெ.. இந்த காவி நாய் தாண்டி குதித்து ராமுவை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. மற்ற அனைவரும் வழக்கம்போல வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 அய்யோஅத்தி !… என வடக்தெருவெல்லம் சுற்றி வந்தன் ராமு.

ராமு மிகவும் அழகான தோற்றம் உடையவன் பார்ப்பதற்கு வசீகரமான கண்களையும், தோலின் நிறம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அனைத்து பெண்களுக்கும் அவனை பார்த்தவுடன் பிடித்துப் போகும் அளவிற்கு அழகானவன்.

பகலில் எத்தனை சூரியன் இருந்தாலும் ஒரு கருமை  மட்டுமே சூழ்ந்த மிகவும் அடர்த்தியான காடு தான் அது அதனாலேயே அந்த காட்டை பலரும் கருப்பர் காடு என்று அழைப்பார்கள் யாராவது ஒருவர் வழி தெரியாமல் அந்த காட்டினுள் சிக்கிக் கொண்டால். எந்த திசையில் இருந்து வெளிவர நினைத்தாலும் குறைந்தது 14 ஆண்டுகளாக ஆகிவிடும். 

அந்த காட்டின் எல்லா திசைகளிலும் சுற்றி வருபவன் ராமு எப்பொழுதும்  காடுகளைச் சுற்றி வந்து அங்கே இருக்கும் மரங்களை உயிருள்ள பிராணிகளை போல் நேசிப்பவன் ஆகையால் ஒவ்வொரு மரங்களை வெட்டும் பொழுதும் அவைகளிலிருந்து பெறுவது கறித்துண்டுகள் என்று எண்ணிக் கொள்வான். சந்தையில் கூட மரக்கறிகள் என்றுதான் கட்டைகளை விற்பான். விலங்குகளை வெட்டி எப்பிடி கறி என்று  சொல்வதைப் போல.  இவன் மரங்களையும் வெட்டி மரக்கறிகள் என்று மரத்திற்கு அவன் உணர்வை வெளிப்படுத்துவான். அப்படி வெட்டும் கறிகளை சந்தையில் விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.  காடுகளில் சுற்றித் திரியும்போதும் கொடூரமான விலங்குகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக வில்லும் அம்பும் தனது தோள் பட்டையில் எப்பொழுதும் ஏந்தி நிற்பான்.  ஆனால் இதுவரையிலும் அவன் எந்த ஒரு விலங்கையும்  கொன்றதே இல்லை கொடிய மிருகங்கள் கூட இவனை பார்த்து ஒதுங்கி போன அபூர்வமான நிகழ்வுகள் நடந்ததுண்டு.

காட்டில்  இருக்கும் விலங்குகளை எல்லாம் சமாளிக்க தெரிந்த ராமுக்கு. இந்த நாட்டில் இருக்கக்கூடிய நாய்களை சமாளிக்க தெரியவில்லை. அவைகளைப் பார்த்த உடனே ராமு ஓட்டம் எடுக்க ஆரம்பித்து விடுவான்.

 அதைப் போன்ற ஒரு சம்பவம் தான் அன்றும் நடந்து கொண்டிருந்தது இவன் சந்தையில் மரக்கறிகளை  தூக்கிக் கொண்டு விற்க  செல்கையில் எதிரில் ஒரு காவி நாய் இவனை பார்த்து “உர்ர்ர்ர்….” என்ற குரலுடன் கால்களை பின்னோக்கியும் இவன் மீது பாய்ந்து கடித்து விடும் அளவிற்கு வேகமாக முன்னேறியது. அதை பார்த்தவுடன் மரக்கறிகளை  கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான் ராமு.

ராமுவை விரட்டும் நாயானது யோக்கியன் உடையது. அந்த ஊரில் அனைவரும் அவனை யோக்கியன் என்று தான் அழைப்பார்கள் அந்தளவுக்கு ஊர் மக்கள் மத்தியில் மரியாதையுடனும் மதிப்புடனும் நடந்து கொள்வான். ஒரே நிற ஆடையை எப்பொழுதும் அணிந்து கொண்டிருப்பான்.  பசு கோமியத்தை குடித்துவிட்டு அந்த நாளை தொடங்குவான். தாய் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் அவனுக்குத் தெரியாது அவ்வப்போது எங்காவது யாராவது பேசும் ஆங்கில வார்த்தைகளை காதில் கேட்டுக் கொண்டு அதை மனப்பாடம் செய்து கொண்டு எப்போதாவது அதை பயன்படுத்துவான். ஆனால் அவனுக்குள் பல்வேறு விதமான தீய எண்ணங்கள் அக வழியாக நடந்து கொண்டிருந்தது. அவன் இந்த ஊர் மக்களிடையே நல்ல பெயர் வாங்கினாலும் அவனுக்கு குறிப்பிட்ட இஸ்லாமிய தோழர்கள் அந்த ஊரில் இருப்பது பிடிக்காது.

ராமு யோக்கியன் விட்டை தாண்டி ஓடும்போது அவனை துரத்தி வந்த நாய் சாப்பிட்டிற்காக நின்று விட்டது. அந்த நேரம் பார்த்து வெளியே வந்த யோக்கியன்.

“சோம்பேறி நாயெ… ஒரு நாளவாது அவன புடிக்கிரிங்கால..” என திட்டி கொண்டு எப்படியாவது அவனை நம்ம பக்கம் இழுத்து விட வேண்டும் என்று தனது மனதில் எண்ணிக்கொண்டு கையில் வைத்து இருந்த கறி துண்டுகளை துக்கி எறிந்தான்.

ராமுவின் மனைவி மாதவி தன் கணவர் வருகைக்காக வாசலில் காத்திருந்தாள்  இன்றைக்கி ஆவது தனது கணவர் எப்படியாவது வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது தேவையான பண்ட பாத்திரங்கள் உடன் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருந்தாள் உலை வைக்காமல்.

பெரும் மூச்சு இரைச்சலுடன் தனது வீட்டு வாசல் திண்ணையில் வந்து கைகால்களை நீட்டி படுத்து விட்டான் ராமு.

மாதவி “என்னங்க இன்னைக்கும் இடையார்  விட்டு சோறு தானா!..” என்று கூறிவிட்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு இடையார் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அந்த ஊரிலேயே ஆடு, மாடுகள் அதிக அளவில் வைத்து விவசாயமும், வியாபாரமும் செய்து வருபவர், வார கிழமைகளில் இறைச்சிக் கடை நடத்தி அந்த ஊரில் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

ராமுவிற்கு மிகவும் நெருங்கிய சினேகிதர் இடையார் தான். ராமுக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் இடையார்  தான் தீர்த்து வைப்பார் பல சமயங்களில் பண உதவியும் இதுபோன்ற கஷ்ட காலங்களில் உணவு வழங்கியும் ராமுவின் குடும்பத்தை இடையார் காத்து வந்தார்.

வாசல் திண்ணையில் காத்திருந்த இடையார் “என்ன மாதவி இன்னைக்கும் ராமு வெறும் முச்சை கொண்டு.. வந்தான இல்ல பெரும் மூச்ச கொண்டு வந்தன..” என்று கின்டாலாக கேட்டார்.

“அட! போங்க அண்ணே.. அந்த மனுசன் எப்போ சந்தைக்கு போனாலும். இந்த காவி நாய்ங்க விடுவதாய் இல்லை. பாவம் மனுஷன் அதுங்களுக்கு பயந்து ஓடி ஓடியே கால் வலிக்க சொக்கிப்போய் தின்னையில கிடக்கிறார் … தண்ணீ கூட குடுக்காம புள்ளைங்க பசியாக இருக்கும்னு தான்  நான் இங்கே  கொஞ்சம் சோறும் குழம்பும் வாங்கிட்டு போகலாமுன்னு வந்தேன்.” என மாதவி சொல்லி முடிப்பதற்குள்.

இடையார் “அட என்ன மாதவி.. இதெல்லாம் போய் கேட்டுக்கிட்டு.. உள்ள அடுப்பங்கரையில் இருக்கு போய் என்ன வேணுமோ எடுத்துக்கோ எல்லாமே இப்பதான் செஞ்சு வச்சுருக்கா..” என்ற தனது விசாலமான மனதுடன் மாதவியை தன் வீட்டிற்குள் அனுமதித்தார்.

இடையாறு வீட்டில் கிடைத்த  சோரையும்,  குழம்பையும்  வாங்கிக்கொண்டு வேகமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.

களைப்பில் படுத்து இருந்தா ராமுவிடம்  மாதவி “என்னங்க எந்திரிங்க சோறு கொண்டு வந்திருக்கேன் சாப்பிட்டு படுங்க ரொம்ப களைப்பா இருக்கீங்க.” என்றவுடன் தட்டுத்தடுமாறி நிதாநித்து எழுந்து வீட்டிற்குள் வந்தான் ராமு. அவள் கொண்டுவந்த சோற்றை முதலில் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு ராமுக்கும் ஒரு பங்கை ஒதுக்கி கொண்டிருந்தாள்.

மாதவி பெரிதும் உணவு உண்பதில் நாட்டம் கொள்ள மாட்டாள் கிடைக்கும் உணவை குழந்தைகளுக்கும் கணவனுக்கும் பகிர்ந்து அளித்து விட்டு எஞ்சியதை மட்டுமே உண்டு விட்டு உடலும் மெளிந்தவாறு இருந்து கொள்வாள்.

வயிறு நிறைந்ததும் குழந்தைகள் இரண்டும் வீட்டின் ஒடு் வழியாக தெரிந்து கொண்டிருந்த நிலா வெளிச்சத்தில் இதமாய் தூங்கிக் கொண்டிருந்தன.

அன்று இரவு ராமுவும் மாதவியும்.  பேச ஆரம்பித்தார்கள்.

“இந்த யோகி வெறுமனே நான் சந்தைக்கு வர்ற நாளெல்லாம் பார்த்து அவன் நாயை  அவுத்து விட்டான்.. அவனுக்கு நான் அவன் கூட சேர்ந்துக்கிடானும்   அவன் ஆசை ஆனா அவன் வந்து ரொம்ப கெட்ட.. ஆள இருக்கான் வெளி உலகத்துல நல்ல பேரை வாங்கிக்கிட்டு .  தப்பான பல தொழில்கள் செஞ்சுகிட்டு இந்த ஊரை ஏமாத்தி கேட்டு இருக்கான் அவன் செய்கிற பல சதி வேலை எனக்கு மட்டும்தான் தெரியும் அதனா வெளியில் சொல்ல கூடாதுன்னுதா அவன் என்ன அவன் கூட்டாளியா சேர்ந்துக்க நினைக்கிரான்டி ”

“ஆமாய்யா நான் கூட கேள்விப்பட்டேன் அந்த யோக்கியன் பேருக்குஎத்தா மாதிரி நடந்துக்கிறேவன் இல்லையாமே… இங்க பாரு ஜனங்க அவனா தானே நம்பிகிட்டு இருக்குது. இந்த காலத்துல யோக்கியம் மாதிரி பேசுற ஆளுங்கள நம்புரா மக்கள் ஜாஸ்தியா இருக்கிற வரைக்கும் யோக்கியன் மாதிரி ஏமாத்துற ஆளுன்னு ஊருக்கு ஒருத்தர் வந்து கிட்டு தான் இருப்பாங்க. என்ன செய்யுறது நம்ம விதியை நினைச்சு நம்ம வாழ்ந்துட்டு  போக வேண்டியதுதான்.” என மாதவியும் தன் பங்களிப்பை செய்து கொண்டு இருந்தால்.

“இல்லடி மாதவி அவன் நம்மள இப்படியே விடமாட்டான் என்னைக்கு இருந்தாலும் அவனால நமக்கு ஏதாவது ஆபத்து !.. இருக்கும்..நமக்கு இல்லை நாலும் நம்ம ரெண்டு குழந்தைகளுக்காவது அவனால் ஏதாவது தொல்லை கண்டிப்பா இருக்கும். அதனால விடியட்டும் நான் இதுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று ராமு சொல்ல.

மாதவி “அதெல்லாம் சரிங்க எதுக்கும்.. இதை பாத்தி ஒரு வார்த்தை இடையார் கிட்ட  பேசி விடலாம்.. “

அந்த ரம்மியமான இரவின் நிலவு ஒளியில் அவன் மனைவி சொன்னது எதுவும் அவன் காதுகளில் விழவில்லை.  கிரிச்..கிரிச்…!  என தவளைகளின் சத்தம்தான் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் அன்றிரவு ஒன்றாக தூங்க படுத்து விட்டனர்.

அன்று மறுநாள் காலை விடிவதற்கு முன் நாள் ராமு யோக்கியன் வீட்டு வாசலின் முன்னால் போய் காத்துக் கொண்டிருந்தான் யோக்கியன் எப்பொழுதும் அதிகாலை எழுந்து கோமியம் குடிப்பதற்கு  செல்வது வழக்கம் அதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த யோக்கியன் வெளியில் வந்தவுடன் அவன் சந்தித்த  முதல் நபர் ராமு.

 “என்ன  ராமு இந்த நேரத்தில் வந்து இருக்க ?”

 “அது.. அதுவந்து…” என்று அந்த விடியற்காலை பொழுதில் தலையைச் சொறிந்துகொண்டு யோக்கியன் முன்னால் சற்று பதட்டத்துடன் பேச தொடங்கினான்.

“இப்பல்லாம் முன்ன மாதிரி காட்ல வேலை கிடைக்க மாட்டேங்குது அதனால நம்ம கிட்டயே ஏதாவது வேலைக்கு சேர்ந்து விடலாம் என்று சொல்லி..தாங்க உங்க கிட்ட கேட்கலாம்னு வந்து இருக்கேங்க ! “ யோகியானுக்கு  ஆச்சரியமாகவும் மனதிற்குள் அளவில்லா சந்தோஷம் பெருகி ஊற்றாய் நிரம்பிக் கொண்டிருந்தது.

“நம்ம பண்ணையிலேயே சேர்ந்துரு ராமு…  உனக்கு இங்கேயே தங்கி வேலை செஞ்சா தானே நம்ம பண்ண வேலைகள் எல்லாம் முழுசா கவனிக்க முடியும் உன்னை வச்சுதா நம்ம எஸ் எஸ் ஆர் பண்ணைய  இன்னும் நல்லா டெவலப்… பண்ணனும்.. அதனால நீ என்ன செய்ற நம்ம பண்ணையிலையே..  தங்கிரு உனக்கு நான் ஒரு புது வீடு கிட்ட சொல்றேன்”. என்று யோக்கியன் ராமுவிடம் கூறி ராமுவை தன் பண்ணையில் சேர்த்துக் கொள்கிறான்.

ராமு தனது மனைவி மாதவியுடன் இரண்டு மகன்களுடன் யோக்கியன் பண்ணையை வந்து சேர்ந்து விடுகிறான் அன்றிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து சரியாக ஆகஸ்ட், 5 -2020 அன்று ராமுவிற்கு  புதிதாக வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடப்படுகிறது…..

                                                                             நன்றி                                          

அன்பும் தோழமையுடன்                                                                                            

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 23 கண்டாமணிதீ உறு மெழுகு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *