இன்னொரு புகைப்படம்

This entry is part 2 of 13 in the series 10 ஜனவரி 2021

கு.அழகர்சாமி

அறிந்தவர் இல்லின் கூடத்தில்

மாட்டப்பட்டிருக்கும்

அநேக புகைப்படங்கள்.

அநேக புகைப்படங்களில் தெரியும்

அநேக உருவங்கள்.

அநேக உருவங்களின் நெரிசலில்

ஓருருவத்தைத் தேடி-

தேடி

இல்லாது-

இல்லாததால்

அறிதலில்லையென்றில்லை என்ற

அறிதலில் ஆசுவாசமாகி-

அநேக புகைப்படங்களின் மத்தியில்

இன்னொரு புகைப்படமானேன்

நிச்சிந்தையில்

நான்.

கு.அழகர்சாமி

Series Navigationநீ இரங்காயெனில் ….தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *