இருப்பதோடு இரு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 12 in the series 17 ஜனவரி 2021

ஒரு வண்டு

சிலந்தியிடம் சொன்னது

‘உன்னைப்போல்

இருந்துண்ணவே

ஆசை எனக்கும் – ஆனால்

வலை செய்யும் கலை அறியேனே’

சிலந்தி

வண்டிடம் சொன்னது

‘சும்மா இருப்பது

சோம் பேறித்தனம்

பறந்துண்ணவே

ஆசை எனக்கு – ஆனால்

றெக்கைகள் இல்லையே’

இறைவனிடம் சென்றன இரண்டும்

கேட்ட வரங்களைத் தந்தான் இறைவன்

வலைபின்னியது வண்டு

பறந்தது சிலந்தி

ஒரு நாள்

கூடாத இடத்தில் கூடுகட்டி

பறவை செத்தது

பறக்கக் கூடாத இடத்தில் பறந்து

சிலந்தியும் செத்தது

அமீதாம்மாள்

Series Navigation“எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)கவிதையும் ரசனையும் – 9
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *