வணக்கம். திட்டமிட்டபடி, ஜூன் 12 – ல் வாஷிங்டன் DC பகுதியிலும், அட்லாண்டாவிலும், தென் கலிபோர்னியா மாநிலத்திலும், வெண்முரசு ஆவணப்படம் நல்ல முறையில் திரையிடப்பட்டு, வாசக நண்பர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திரையிடலை திறம்பட எடுத்து நடத்திய நண்பர்கள் விஜய் சத்யா (வாஷிங்டன் DC / வர்ஜீனியா), சிஜோ (அட்லாண்டா), ராஜா (அட்லாண்டா), சிவகாந்த் (அட்லாண்டா), தாமோதரன் (அட்லாண்டா), ஸ்ரீராம் (இர்வின்) அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.விஜய் சத்யா, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடனும், சிஜோ, அட்லாண்டா தமிழ் சங்கத்துடனும், ஸ்ரீராம், socialtamil.org , araneri foundation, sangamam அமைப்புகளுடனும் இணைந்து ஏற்பாடு செய்ததன் மூலம், வெண்முரசுவின் வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு அமைப்பும் அறிந்து உதவுகிறது என்பதை மகிழ்வுடன் அறிகிறோம்.
இந்த மாதத்தில் இன்னும் இரு நகரங்களில் திரையிடல் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
வளைகுடாப் பகுதி, வட கலிபோர்னியா :
ஜுன் 19, 2021 – சனிக்கிழமை – 3:00 PM
Century Theaters at Pacific Commons XD,
43917 Pacific Commons Blvd,
Fremont, , CA 94538
தொடர்புக்கு – சுதர்ஷன், suchan87@gmail.com, Phone – 209-890-5072
முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
ஹார்ட்போர்டு, கனெக்டிகட்:
ஜுன் 27 2021 – ஞாயிற்றுக்கிழமை – 3:00 PM
Apple cinemas waterbury
920 Wolcott St, Waterbury, CT 06705
தொடர்புக்கு – பாஸ்டன் பாலா, bsubra@gmail.com, Phone – 978-710-9160
ஜூலை மாதத் திரையிடலுக்கும், ஹூஸ்டன், சிகாகோ, போர்ட்லாண்ட், நியூ மெக்ஸிகோ என வெவ்வேறு நகர்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும், ஒருங்கமைப்பாளர்கள் அழைத்துப் பேசி , தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். Phone keeps ringing.
வெண்முரசு ஆவணப்படத்தைப் பற்றிய பொதுவான விபரங்களுக்கு, vishnupuramusa@gmail.com-க்கு தொடர்பு கொள்ளவும்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
- வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்
- சொல்வனம் 248 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- துவாரகை
- வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கி விட்டது.
- அக்னிப்பிரவேசம் !
- தில்லிகை | சூன் 12 மாலை 4 மணிக்கு | மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம்
- கொரோனா கற்றுக் கொடுத்த வாழ்வியல்
- தலைவியும் புதல்வனும்
- குழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும் !
- இல்லத்தரசி – உருது மூலம் –இஸ்மத் சுக்தாய்
- 3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்
- கண்ணதாசன்
- இவளும் பெண் தான்