சி. ஜெயபாரதன், B.E (Hons), P. Eng, Nuclear, கனடா
Virgin Galactic’s Richard Branson has reached space aboard his own winged rocket ship, vaulting the nearly 71-year-old founder past fellow billionaire and rival Jeff Bezos, who will fly to space in a craft of his own nine days from now. (July 11, 2021)
முதன்முதல் ராக்கெட் விமானத்தில் வெற்றிப் பயணம்
2021 ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடத்திய முன்னோடிச் சோதனைப் பயிர்ச்சியில், ரிச்சர்டு பிரான்ஸன் [வயது 71, பிரிட்டனைச் சேர்ந்தவர்] முதன்முதல் தான் 15 ஆண்டுகள் டிசைன் செய்து விருத்தி அடைந்த ராக்கெட் விமானத்தில் [பெயர் : ஐக்கியம் (UNITY)] பயணம் செய்து விண்வெளி விளிம்பில் பறந்து காட்டினார். அவருடன் மற்றும் இரண்டு துணை நிபுணர்கள் பறந்து பாதுகாப்பாக ராக்கெட் விமானம் தரையில் மீண்டது. இது செல்வந்தக் கோமான்கள், மற்றும் பொதுநபர் விண்வெளியில் சுற்றுலா பயணம் செய்யப் பாதை இட்டது. இந்த ராக்கெட் வாகனத் தயாரிப்பைச் செய்து முடிக்க பிரான்ஸன் 17 ஆண்டுகள் எடுத்துள்ளார்.
ராக்கெட் விமானத்தை இருபுறமும் ஒரு சாதா விமானம் 8.5 மைல் [13 கி.மீ.] உயரத்துக்குத் தூக்கிப் பறந்தது. பிறகு அந்த உயரத்தில் ராக்கெட் விமானம் பிரிந்து, கீழாகத் தணிந்து, மாக் 3 [MACH 3] [மூன்று ஒலி வேகம் [Sound Velocity] தாண்டி, 53.5 மைல் [86 கி.மீடர்] உயரத்தில் பறந்து, பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டு, [Zero Gravity] மிதப்பு நிலையை உணர்த்தியது. ராக்கெட் விமானப் பிரிவு, பயணம், இறங்கல் அனைத்து இயக்கங்களும் 15 நிமிடங்களில் முடிந்தன. ராக்கெட் விமானத்தை இயக்கியவர் ; ரிச்சர்டு பிரான்ஸன். உதவிக்குச் சென்றவர் ; ஷிரிஷ பாண்டுலா & காலின் பென்னெட். இதை பிரான்ஸன் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில் நடத்திக் காட்டினார்.
இந்த அரிய காட்சி உலகில் விண்வெளி சுர்றுலாப் பயணத்தை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதற்குக் கட்டணம் நபருக்கு ; 250,000 டாலர். பிரான்ஸனுக்குப் போட்டி, ஏலான் மஸ்க் & பெஸாஸ் [Elon Musk & Bezos]








தகவல்:
- தூமலர் தூவித்தொழு
- ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின் குருவிக்கூடு
- அருள்மிகு தெப்பக்குளம்…
- ஒளிப்படங்களும் நாமும்
- கவிதைகள்
- இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?
- பொக்கிஷம் !
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 250 ஆம் இதழ்
- தி பேர்ட் கேஜ்
- அதுதான் வழி!
- (அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை
- ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்
- வேட்டை
- மொழிப்பெருங்கருணை
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பார்வதியம்மா
- கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- என்னை பற்றி
- 7.ஔவையாரும் சிலம்பியும்
- இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி
- தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்