புதல்விக்கு மடல்

This entry is part 1 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

 
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
களைத்து
அந்திப் பொழுதில் கதிரோன்
அடிவானில் மூழ்குது.
மங்கிடும் மாலை மயங்கிக்
கருகிடும். 
இருளுது கண்கள் நீர் சொட்டி
கால்கள் முடங்குது.
காபி தம்ளர் கனக்குது
கைகள் வலுவின்றி.
காலன் வந்து விட்டானா ?
மருத்துவ மனையில்
காப்பாற்ற 
முனையுது டாக்டரும்
துணைக் குழுவும்.
மூக்குக் குழல் வேண்டாம்
நாக்கு முடங்கி
வாய்க் குழல் எதற்கு ?
ஆயுள் நீடிப்பு எதற்கு 
உயிர்வாயு எதற்கு ?
போக விடுவீர் என்னை,
பிழைத்திட முயலாதீர்,
உழைத்தது போதும்,
உயிர் இனி இயங்க
முடியாது,
முடங்கும் உடல்.
உடம்பில் வலி தெரியாது
எடுத்துக் கொள்வீர்:
இருதயம், கிட்னி, காற்றுப் பை
கண்கள், இவை
என் இறுதிக் கொடை. 
அறுத்துக் கொள்வீர்
செத்தும் கொடுப்பேன்,
ஆயினும்
விடுவிப்பீர் என்னை.
 
================
Series Navigation“  மேதகு  “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின்   அவலப்பட்ட   கதைகள்  ஏராளம்  உண்டு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

3 Comments

  1. Avatar
    S. Jayabarathan says:

    இணைக்க் வேண்டிய முடிவு
    இறைவா !
    மீள் பிறப்பு இருந்தால்
    மீண்டும் நான்
    ஏழ் பிறப்பிலும்
    பாரதி வாழ்ந்த தமிழ்த்
    தாரணியில்
    தவழ வரம் தா.

    ================

  2. Avatar
    S. Jayabarathan says:

    சிக்கல்கள் பின்னிச் சிதைந்துபோம் இவ்வுடம்பில்
    முக்க முடியாது உயிர்.

    இன்றிருப்போன் நாளை இருப்பனோ என்றுறுதி
    இல்லாதது இந்த உலகு.

    சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *