Hypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு 

author
0 minutes, 4 seconds Read
This entry is part 5 of 17 in the series 2 ஜனவரி 2022

பசுனூரு ஸ்ரீதர்பாபு 

(தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு அவினேனி பாஸ்கர்)

Businessman holding white mask in his hand

குளிர்கால மத்தியானம் கதகதக் காற்று வீசும்நேரம்

முகட்டில் மரமாய்போல் நிற்கிறேன்

இலைகளெல்லாம் உதிர்த்துவிட 

புதிதாய் துளிர்த்துவிட!

 

அலை அலையாய்க் காற்று 

என் மீது வீச வீச 

இலைகளெல்லாம் மெதுவாய் உதிர்ந்து 

துள்ளலாய் நிலத்தின் மீது 

சரசரவென சப்தமிட்டுக்கொண்டு 

தூரவிலகிச்செல்வதை பார்க்கப் பார்க்க

பாரம் குறைந்தது. 

புதிய விடியலை நிர்வாணமாய் 

வரவேற்றேன். 

 

நாட்கள் நகர்ந்தன 

வசந்தங்கள் வந்தன, சென்றன

சித்திரைக் காற்று 

ஏற இறங்கப் பார்த்துச் செல்கிறது 

என் மேனியில் மட்டும் 

புதிதாய் ஒரு துளிருமில்லை 

இருப்பதை எல்லாம் இழந்து 

பட்ட மரமாய் நின்றேன். 

 

என்னே இந்த வஞ்சனை என்று

கணுக்கள் காய்ந்த 

கிளைகளோடு கிளர்ந்தெழுந்து 

வைகாசிக் காற்றை வழிமறித்தேன்.

 

அது எனை வட்டமடித்து 

இப்படிச் சொன்னது:

‘இலைகளெல்லாம் உதிர்த்துக்கொண்டதாய் 

வீணாய் அலட்டாதே. 

உள்ளுக்குள்ளே ஒளித்துக் கொண்டாயே 

அவற்றின் கதை என்ன?

எல்லாம் புறந்தள்ளி

இலைகளற்ற நிர்வாணமாய் 

நிற்க தெரியாத உன்னைத் தீண்ட 

இனி வசந்தங்கள் இல்லை!

மீதமிருப்பதொன்றே…

மரணம்’

 

— நிதுரபோனி மெலுகுவ செப்பின கல (உறங்காத விழிப்பு சொன்ன கனவு) [2021] கவிதை தொகுப்பிலிருந்து 

Series Navigationபுத்தாண்டு பிறந்தது !எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *