புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 15 in the series 13 மார்ச் 2022

 

சி ஆர் ரவீந்திரன்

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ,,கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன் போன்றவர்களை கொண்ட                             ” எழுத்து ”அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறது .சென்ற ஆண்டின் சிறந்த நாவலுக்காக சுப்ரபாரதிமணியனின்                 ” அந்நியர்கள்   “என்ற நாவல் பரிசு பெற்றிருக்கிறது

மண்ணில் உயிர் வாழ்க்கை எங்கேயும் எப்போதும் ஓயாமல் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது .அதில் மனித இனம் தனது சிந்தனைத்திறன்,  தனது தேவைகளை கண்டறிந்து அவற்றிற்கு தகுந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டே தொடர்ந்து வாழ்ந்து வருகிறது .இந்த வாழ்க்கை தான் அதனுடைய வாழ்க்கை வரலாறாக  படைப்புகளில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வரலாறு  நெடுகிலும் மனிதன் இயற்கையை முகர கற்றுக்கொண்டே இருக்கிறான் .

அதில் முதன்மையான முயற்சியாக இருப்பது புலம்பெயர்தல் என்ற சிறப்பு மிகுந்த முயற்சி.. அந்த இடையறாத முயற்சியால் பன்முகத்தன்மை கொண்ட மனித வகைகள். ஒன்று கலந்து ஒருங்கிணைந்து வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன .இனம் நிறம் உருவம் மொழி மதம் என்று தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று கலந்து இயங்கிவருகிறது .தனது பாதுகாப்பிற்காக அதனுடைய தனித்தன்மையையும் ஒருங்கிணைந்த மனமும் முறைகளையும் காப்பாற்றிக் கொண்டே நிலப்பரப்பு முழுவதுமாக    வாழ்க்கையை  தொடர்கிறது.

 

வாழ்க்கையில் நிகழும்  சிக்கலான மனப் பிறழ்வை முதன்மைப்படுத்தி அவலமான வாழ்க்கையை சித்தரிக்கும் இலக்கியப் போக்கில் இருந்து மாறுபட்டு ஒரு யதார்த்தமான வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கும் சுப்ரபாரதிமணியன் பொதுவாக நிகழ்கால பிரச்சினைகளையே , இயற்கை சீரழிவுப் பிரச்சினைகளையே  மையமாகக் கொண்டு இயங்கி வருபவர் அப்படித்தான் இந்த “அந்நியர்கள்”  நாவலை வடிவமைத்திருக்கிறார் .

சென்ற சில நூற்றாண்டுகளில் அரும்பியத் தொழில்நுட்பங்கள் வேகமாக பரவத் தொடங்கின அதன் விளைவாக நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கை முறை மிகப்பெரிய அளவிற்கு மாறிக்கொண்டிருக்கின்றது .அதனால் உலகளாவிய அளவில் மனிதர்கள் தொடர்ந்து புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்

அதைத் திருப்பூர் போன்ற தொழில் துறை  நகரங்களில் பரவலான முறையில் வெளிப்படையாகக் காணலாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியில் குறிப்பாக பின்னலாடைத் தொழிலில் முதன்மையாக இருந்து வரும் இந்த தொழிலில் ஒரு சாராருக்கு  ஏராளமான வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது .10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன்  60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செல்வாணியையும் தந்து வருகிறது .இந்தியத் துணைக்கண்டம் சாதி மத இன நிற மொழியில் மட்டும் அல்ல. கலாச்சார பண்பாட்டு வாழ்க்கையிலும் மாறுபடும் மக்களை தன் அளவில் கொண்டுள்ளது .ஒன்று கலந்து வாழும் வாழ்க்கை முறை மக்களை பல வகைகளிலும் பாதிக்கக்கூடிய வழிவகைகளை சிக்கலுக்கு உள்ளாகின்றன. வளர்ச்சியடையாத மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் மக்களை உடல் ரீதியாகவும், பாலியல் வன்முறை ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் சுரண்டி வரும் தொழில் மற்றும்  வாழ்க்கைச் சூழலில் குறிப்பாகப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் வாழ்க்கை நிலைமைகளை  மட்டும் அல்லாமல் மற்ற பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அடையாளப்படுத்துகிறது   இந்த மையம் சார்ந்த தன்னுடைய இந்த புதிய முயற்சியை குறித்த தனது நோக்கத்தையும் பார்வையையும் இவர் வெளிப்படுத்துகிறார்

துளசி என்ற வடநாட்டுப் பெண்ணின் கதை இது. அவள் வாழ்க்கையும் அவருடன் சேர்ந்த பிற இடம்பெயர்ந்து வந்த மக்களின் வாழ்க்கையையும்   உள்ளூர் மக்களின் பார்வையில் இடம்பெயர்ந்தோர் சிரமங்களையும் இந்த நாவல் சொல்கிறது வளர்ச்சியின்  வேகத்தை சாதாரண மனிதர்களின் பயணம் என்ற வகையில் நாவலில் சொல்லியிருக்கிறார்.. நாவல் முழுவதும் பல வகையான காட்சிகள் அடையாளப் படுத்தப் படுகின்றன அதைப்போலவே உள்ளூர் வெளியூர் மனிதர்களின் சந்திப்பு மூலம்  வேறுபட்ட நடத்தை பழக்க-வழக்கங்கள் பலவகையான மனச்சிக்கல்கள்   காட்டப்படுகின்றன. இந்த வகை யதார்த்தப் போக்கு  வாசகனின்  வாசிப்புக்கு மிகவும் ஏற்றதாகிறது.

வாழ்க்கையின் அடித்தளத்தில் வாழ வகை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ,  உள்நாட்டு பின்னலாடை தேவைகளை நிறைவு செய்து பெருமளவுக்கு கொண்டு செல்லும்  மனிதர்களில்   ஒருவர் மையமாகக்காட்டப்படுகிறார் துளசியின் பார்வையில் .அங்கங்கே காணப்படும் சிறிய , பெரிய நடை பாதையோர கடைகளில் பொருட்களை வாங்கி போட்டியிடும் மக்கள் கூட்டத்தில் வாங்கும் திறனை சித்தரித்திருக்கிறார்.  அவ்வப்போது நகரில் பல  பகுதியில் காணப்படும்  சாவுகள்  பற்றிய சித்தரிப்புகளையும் நாவலில் இவர் பதிவு செய்திருக்கிறார் .பக்கம் .

 வழியில் யாராவது இப்படி சுலபமாக பிணமாக கிடப்பது சமீபத்தில் அதிகரிப்பதை அவர்

அறிந்திருக்கிறார் ..பலவகைகளில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட பெண்கள் சாலைகளில் கிடப்பார்கள் .கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எங்காவது கிராம ஓரங்களில்  கிடப்பார்கள் சிதைந்த நிலையில் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்காக சிரமப்பட வேண்டியிருக்கிறது உ.டம்பும் முகமும் சிதைந்திருக்கும்போது அப்படி அடையாளம் காண்பதற்காக துளசியும் தேடிப் பார்த்திருக்கிறாள் .பாலியல் வன்முறைக்கு உள்ளான பல பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள் அவர்களின் உதவிக்கு சில சங்கங்களும் இருக்கின்றன .ஒரு புதிய சூழலில்  சிரமம் ஏற்படுகிறது பெண்களுக்கு

. இதைத்தவிர வேறு வழிமுறைகள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை சட்டென காட்சி மாறிவிட்டது இப்போது புதிய காட்சியில் அவள் மட்டும் தனியாக இருந்தாள் அவளைச் சுற்றி வளைத்த நான்கு  பேரையும் காணவில்லை தன்னோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தமோகினியையும் காணவில்லை .இது போல் பல மோகினிகள் நாவலில்

முதலாளி தங்களை கொத்தடிமை போல நடத்தும் முறை யில்சில பெண்கள் வருகிறார்கள் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக , அதிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மாட்டுத் தொழுவத்தில் தங்கி இருப்பதாகவும் அது சொன்னது முகம் மறைக்கப்பட்ட அவரின் தோற்றம் குறித்து அந்த செய்தித்தாளில் செய்தி வழியாக இருந்தது என்று ஒரு பகுதி சொல்கிறது

துளசியின் வாழ்க்கை தாறுமாறாகப் போவதை நாவல் காட்டுகிறது. அவள் ஒரு குறியீடு.அவளின் அலைதல் புலம்பெயர்தலின் ஒரு குறியீடாகிறது.

 இது போன்ற  தொழிலாளர்கள் அவலம் நிறைந்த இந்த நாவல் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை சரியாகக் குறிப்பிடும் ஒரு முக்கியமான நாவலாக   விளங்குகிறது. இந்த வாழ்வு ஒரு வேலைக்காக, சாப்பாட்டிற்காக ஆனால் இங்கே அவர்களின் திறமை, வாழ்க்கை உரிமைகள் தொலைந்த வாழ்க்கை பற்றியும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையையும் இந்நாவல் புலம்பெயர்ந்தோருடன் சேர்ந்து முன்வைக்கிறது

 

இந்த நாவலுக்குக் கிடைத்திருக்கும் பரிசு முயற்சியை தொடர்ந்து செய்துவரும் எழுத்து அறக்கட்டளையும்  இதைப் பதிப்பித்த கவிதா பதிப்பகமும் பாராட்டுக்குரியவர்கள்

(ரூபாய்250 கவிதா பதிப்பகம் சென்னை வெளியீடு  )

Series Navigationஅஞ்சுவாசல் கிட்டங்கி…பாடம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *