அழகியசிங்கர்
ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ஒரு நீளமான பெயர் “ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்’
குந்தவை என்ற பெண் எழுத்தாளரின் கதைத் தொகுப்பின் பெயர் “யோகம் இருக்கிறது.’
இந்த இரண்டு தொகுப்புகளில் உள்ள கதைகளில் மூன்று கதைகள் வீதம் இரண்டு தொகுதிகளையும் எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் 19ஆம் தேதி பேச எடுத்துக்கொண்டோம்.
பொதுவாக இரண்டு தொகுப்புகளில் 6 கதைகளை எடுத்துப் படித்துப் பார்த்தேன். என்னுடைய கண்ணோட்டம் கதைகளைக் குறித்து என்ன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலில் குந்தவை எழுதிய இறுக்கம் என்ற கதையை எடுத்துக் கொள்கிறேன்.
இந்தக் கதையைப் படிக்கும்போது தமிழ் வாழும் பகுதியில் ஆர்மிக் காரர்களின் கெடுபிடியை வெளிப்படுத்துகிறது. உண்மையில் ஆர்மிக் காரர்களின் நடமாட்டம் இருந்தபோதும் ஒரு சகஜமான சூழ்நிலைதான் நிலவி வருகிறது.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும் ஒரு டிராவல்தான் கதை. ஆர்மிக் காரன் இருக்குமிடத்தில் அவன் பார்வையில் அதிகக் கவனமில்லாமல் இருக்கும் நிலையைக் கதை விவரிக்கிறது.
கதைசொல்லி ஒரு பெண். அவள் பார்வையில் கதை நகர்கிறது. ஆமிக்காரர்கள் முன் னால் வந்து நிற்கின்ற மோட்டார் சைக்கிளைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் ஆமிக்காரர்கள். ஒருவன் பின் சீற்றை அமுக்கிப் பார்த்தான். மற்றவன் முன்பகுதியிலிருந்த பிளாஸ்ரிக் கூடையைக் கிண்டினான். கதைசொல்லிக்குச் சிரிப்பு வருகிறது. குண்டு கொண்டு வருபவன் இப்படியா பகிரங்கமாகக் கொண்டு வருவான் என்று நினைத்துச் சிரிக்கிறாள்.
ஆர்மி கெடுபிடி இருந்தாலும் அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றிய கதையாக இது இருக்கிறது. ஆமிக்காரன் செயலால் ஏற்படும் இறுக்கத்தை இக் கதை துல்லியமாக விவரிக்கிறது.
அதே சமயத்தில் ஆர்மிகாரர்களின் கெடு பிடிகளோடு சாதாரண சனங்களின் வாழ்வையும் விவரிக்கிறது. கதாசிரியர் அப்படியே விவரித்துக்கொண்டு போகும் உத்தியை வெளிப்படுத்துகிறார். யுத்தக் காலத்தில் அங்குள்ள மனிதர்கள் படுகிற அவஸ்தையை வெளிப்படுத்துகிறார். இதைக் கூறும்போது குரலை உயர்த்தாமல் கூறுகிறார்
60களில் எழுத ஆரம்பித்த எழுத்தாளர் குந்தவை. தீவிர சிற்றேடுகளில் இவர் கதைகள் வெளி வந்துள்ளன.
2002ல் தான் இவர் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவருகிறது.
அடுத்தது ஜீவ கரிகாலன் சிறுகதையை ஆராய்வோம். எஞ்சியிருக்கும் துயில் என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.
ஒரு கதையை ஒரு முறை அல்ல பல முறை படிக்க வேண்டும். அப்போதுதான் முதல் முறை படிக்கும்போது நாம் விட்டுவிட்ட பகுதிகளைத் தி ரும்பவும் கொண்டு வர முடியும்.
குந்தவை கதைகளிலும் சரி, ஜீவ கரிகாலன் கதைகளிலும் சரி, இந்த உண்மை எனக்குப் புலப்படாமல் இல்லை.
சக்தி அழும்போதெல்லாம் விடும் சாபம் இதுதான். üüநாக்கு இருக்கு பேசத் தெரியும் என்பதால் எத்தனை ஆழமா காயப்படுத்தற, என்னிக்கா வது நீ சொன்ன வார்த்தைகளே உன்ன திங்க ஆ ரம்பிக்கும்டா..üü
என்று சக்தி சொல்கிறாள். கதைசொல்லியின் மீது கோபமாக இருக்கிறாள். இதைக் கதையின் முதல் பக்கத்திலேயே சக்தி கூற்றாக வெளிவருகிறது.
‘எல்லாவற்றையும் கடந்துவிடு. எஞ்சியிருப்பது எது என்று கவனி .அவற்றைச் சரி செய். உனக்கு மந்திரமெல்லாம் வேலை செய்யாது.ü எல்லோரிடமும் கோபமாக இருக்கிறான் கதைசொல்லி. ஏன்? மீனு. மீனுவை நினைத்தால் அவன் கேவி கேவி அழுகிறான்.
இப்போதும் ஒரு பள்ளிப் பேருந்தைப் பார்த்தாலே மனம் பதைபதைக்கிறது.
இது நேரிடையாக சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகிற கதை இல்லை. குந்தவை கதைகளில் நேரிடையாக சம்பவங்கள் விளக்கப் படுகின்றன.
அகோரியைப் பார்ப்பதற்கு முன் அகோரி கூறிய வார்த்தைகள் முன் விழுங்குகின்றன.
ஒரு பள்ளிப் பேருந்து மூலம் ஏற்பட்ட விபத்து மூலம் அவனுடைய மீனு இறந்து விடுகிறாள். அவனுக்கு எல்லார் மீது கோபம் ஏற்படுகிறது.
இன்னொரு இடத்தில் ஒரு தகவல் தரப்படுகிறது. üஎட்டு வருடங்களிருக்கும் அந்த சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே முடிச்சூரிலிருந் து ஊரப்பாக்கத்திற்கு இடம் பெயர்ந்தோம். சக்தி வேலையை மாற்றிக்கொண்டாள். ü
எதையும் நேரிடையாக சொல்லப்படவில்லை. சக்தி யார்? மீனு யார்? ஏன் அகோரியைப் பார்க்கப் போகவேண்டும். இதெல்லாம் ஒரு முறைக்கு இரண்டு முறை இந்தக் கதையைப் படிக்கும் போது தெரிய வரும்.
வக்கீல் வைத்துப் போராடிக்கொண் டிருக்கிறான் கதை சொல்லி. வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. ஏழரை வருடங்கள் ஆகிவிட்டது. இதற்கிடையில் எத்தனை சமாதானத் தூதுக்கள்? மிரட்டல் தூதுக்கள்? தீர்ப்பாயம் கொடுத்த அபராதம் எனும் கண் துடைப்பு.
இது விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் அவனுக்கும் அவளுக்கும் சண்டை ஏற்பட்டு, அவளுடன் பேசுவதையே நிறுத்தி விடுகிறான்.
கன்ராஜ் என்ற நண்பருடன் திருவண்ணாமலைக்கு அடிக்கடிப் போய் அகோரியைப் பார்க்கப் போகிறான் கதைசொல்லி. அப்போதுதான் அகோரி அவனைப் பார்த்து, ‘எல்லாவற்றையும் கடந்துவிடு. எஞ்சியிருப்பது எது என்று கவனிý என்று கூறுகிறான்.
எஞ்சியிருப்பது சக்திதான். ஆனால் சக்திக்காக இதுவரைக்கும் என்ன செய்திருக்கிறான் என்று யோசனை செய்கிறான். அவனுக்கு எல்லாம் புரிந்து விடுகிறது.
குறுக்கு வெட்டாக இந்தக் கதையை ஜீவ கரிகாலன் எழுதியிருப்பது சிறப்பாக உள்ளது.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ்
- ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பு
- முருகபூபதியின் புதிய நூல் “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு
- உக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்
- ஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு !
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28 வசந்த காலத்தில் தோன்றும் ஒளி
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- மேற்கு மலைத் தொடர்
- நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.
- அகவைகள் நூறு கண்டதோர் சஞ்சிகை