முருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

author
0 minutes, 12 seconds Read
This entry is part 3 of 10 in the series 20 மார்ச் 2022

 

        முருகபூபதியின் புதிய நூல்  யாதுமாகி

        28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை

                    மெய்நிகரில் வெளியீடு

அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவுகளைக்கொண்ட புதிய நூல் யாதுமாகி.

இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியாகிறது.

கலை, இலக்கியம், கல்வி, ஊடகம், நடனம்,  தன்னார்வத் தொண்டு, சீர்மியப்பணி, திரைப்படம், விடுதலைப் போராட்டம், முதலான பல்துறைகளில் ஈடுபட்ட பெண் ஆளுமைகள் குறித்த தனது மனப்பதிவுகளை கடந்த காலங்களில் எழுதி வந்திருக்கும் முருகபூபதி, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், கடித இலக்கியம், புனைவுசாரா பத்தி எழுத்துக்கள், திறனாய்வு முதலான துறைகளில் இதுவரையில் 25 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர்.

சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகளை இருமுறை பெற்றிருக்கும் முருகபூபதி, அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலான அமைப்புகளினதும் ஸ்தாபக உறுப்பினருமாவார்.

இந்த அமைப்புகளில் நீண்டகாலமாக அங்கம் வகித்தவாறு ஊடகங்களில்  தொடர்ந்து எழுதிவரும் முருகபூபதி,  அனைத்துலக பெண்கள் மாதத்தை முன்னிட்டு எழுதி, முதலில் மின்னூலாக வெளியிடவிருக்கும்  யாதுமாகி நூலில் பின்வரும் பெண் ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.

ராஜம் கிருஷ்ணன்    (1925 – 2014 ) ,

அருண் விஜயராணி (1954 – 2015)

கமலினி  செல்வராசன்  (1954 – 2015),

மனோரமா ஆச்சி  ( 1937 – 2015)

 ‘குறமகள்’ வள்ளிநாயகி  இராமலிங்கம்  ( 1933 – 2016),

 கெக்கிராவ ஸஹானா ( 1968 – 2018)  ,  

தங்கேஸ்வரி  (1952 – 2019) ,

 தமிழ்ப்பிரியா  ( 1952    –  2020),   

பத்மா சோமகாந்தன்  ( 1934 – 2020 )

 கமலா தம்பிராஜா  ( 1944 –   2018 )  

  பாலம்லக்ஷ்மணன்,  ஞானம் இரத்தினம், சகுந்தலா கணநாதன்  அன்னலட்சுமி  இராஜதுரை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,  கோகிலா மகேந்திரன்,   தாமரைச்செல்வி, சித்திரலேகா மௌனகுரு கார்த்திகா கணேசர்,  ‘’ குந்தவை ‘ சடாட்சரதேவி,  ‘ஆழியாள் மதுபாஷினி,  தேவா ஹெரால்ட்   சந்திரிகா சுப்பிரமணியன்,   ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா,   ‘தமிழச்சி  சுமதி தங்கபாண்டியன்,    தமிழ்க்கவி ,  புஸ்பராணி, வெற்றிச்செல்வி.

இவர்களில் முதல் பத்துப்பேரும் மறைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கலை, இலக்கிய ஆர்வலர் கலாநிதி கலையரசி சின்னையா நியூசிலாந்திலிருந்து யாதுமாகி நூல் வெளியீட்டு மெய்நிகர் அரங்கிற்கு தலைமை தாங்குகிறார்.

(திருமதி விஜி இராமச்சந்திரன்)

நூல் பற்றிய தங்கள் வாசிப்பு அனுபவத்தை,  அவுஸ்திரேலியா  மெல்பனிலிருந்து திருமதி விஜி இராமச்சந்திரன், சிட்னியிலிருந்து  திருமதி கனகா கணேஷ்,  கோல்ட் கோஸ்டிலிருந்து மருத்துவர் திருமதி வாசுகி சித்திரசேனன், தமிழ்நாட்டிலிருந்து  முனைவர் வள்ளி ஶ்ரீ  ஆகியோர் சமர்ப்பிப்பர்.

(திருமதி கனகா கணேஷ்)

 

(முனைவர் வள்ளி ஶ்ரீ)

(திருமதி வாசுகி சித்திரசேனன்)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு திரு. தாமோ பிரம்மேந்திரன் – கன்பரா தமிழ் அரங்கம்.

மெய்நிகர் அரங்கில் இணைந்திருப்பவர்களின் கருத்துப்பகிர்வையடுத்து நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.    

அவுஸ்திரேலியா – மெல்பன் – சிட்னி :   இரவு  7.00  மணி

மேற்கு அவுஸ்திரேலியா –  பேர்த் – மாலை  4-00  மணி

பிறிஸ்பேர்ண் மாலை 6-00 மணி

கோல்ட் கோஸ்ட்  மாலை 6-00 மணி

நியூசிலாந்து  –  இரவு  9-00  மணி

 இலங்கை  –   இந்தியா:   மதியம் 1:30 மணி.

 இங்கிலாந்து:    காலை   8:00  மணி

பிரான்ஸ் – ஜெர்மனி:   காலை 9-00 மணி

கனடா –  அதிகாலை 4-00 மணி

 

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89679356153?pwd=Kyt6MUtyOU8ralBoWk9IK1JXQ3F0Zz09

Meeting ID: 896 7935 6153
Passcode: 557776

 

Series Navigationஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்புஉக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *