ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி
என்னங்க எப்படி இருக்காங்க? குளுகோஸ் ஏறுது, அதிலேயே மருந்து
ஏத்தியிருக்காங்க.
சரி குளிச்சிட்டு வாங்க,,இட்டிலி எடுத்து
வைக்கிறேன்
ஆவி பறக்கும் இட்டிலியை எடுத்து தட்டில்
வைத்து தேங்காய் சட்டினி , மிளகாய்ப் பொடி,,நல்லெண்ணெய் ஊற்றி எடுத்துச் சென்று மேசையில் வைக்கவும், சிவா தயாராகி வெள்ளைச் சீருடையில் பளீரென வந்து அமரவும் சரியாக இருந்தது.
ஏங்க என்னதான் சொல்றாங்க?
ஏதாவது கோளாறு இருந்தாதானே சொல்ல,
அப்படீன்னா,
சர்க்கர வியாதி,இரத்த அழுத்தம், உப்பு ,இதயக் குறை ஒன்றும் இல்லை,
இல்லைனு சொல்லவும் நிறைய டெஸ்ட்
எடுக்கறாங்க,
இதுவரை எவ்ளோ கட்டியிருக்கீங்க
பத்தாயிரம்
ரெண்டு நாளிலா.
சரி வந்திட்டீங்களே யாரு பார்த்துக்கறாங்க.
அங்கேயே மருத்துவ மனையில் சொல்லி
ஒரு பெண்ணை ஏற்பாடு
செய்து ஐநூறு ரூபாய் தந்திட்டு வந்திருக்கேன். அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு மேகலா தந்த மதிய உணவுப் பையை எடுத்துக் கொண்டான்
சாயந்திரம் வர தாமதமாகும்.அப்படியே
மருத்துவமனை போயிட்டு வருவேன் .
அவன் ஸ்கூட்டியை எடுத்ததும் எதிரில்
வந்து நின்று பத்திரமா போய் வாங்க என்று விடை தந்தாள்.
தெருமுனை திரும்பும் வரை பார்த்துவிட்டு
கேட்டை மூடிக்கொண்டு உள்ளே வந்தாள்.
‘அடடா மாத்திரை போடாமலே கிளம்பிட்டாரே, நானும் ஞாபகப்படுத்தலை என்று அங்கலாய்த்துக் கொண்டாள். சமையலறையில் பாத்திரங்களை ஒழித்து விளக்கை கையமர்த்தி விட்டு தானும் காலை உணவை தட்டில் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சியில் பழைய பாடல் நிகழ்ச்சி வைத்தாள். மனம் என்னவோ பாட்டில் இலயிக்கவில்லை.
சிந்தனைக் களம் விரித்தது.
பெரும் பொங்கலன்று இவர் மதிய உணவு கேரியரில் எடுத்துச் சென்றார்.சர்க்கரைப்
பொங்கலையும், வடையையும் விரும்பிச்
சாப்பிட்டார்கள், வேலைக்காரம்மா மீதி
சாப்பாட்டை அப்படியே எடுத்துச் சென்றார்கள் என்றார். மாட்டுப் பொங்கலன்று எங்கள் இருவருக்கும் காய்ச்சல் இருமல். மருத்துவரிடம் சென்று ஊசி போட்டுக் கொண்டு
மருந்து மாத்திரை வாங்கிப் போட்டும் படாதபாடு படுத்திவிட்டது.
அம்மா என்ற குரல் செல்வாம்பாதான்
பேட்டரி வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தாள்,உடன் வள்ளியும் வந்திருந்தாள்.
குப்பை வைத்திருந்த பையை எடுத்துச் சென்று தந்துவிட்டு் கைகளை அலம்பிக் கொண்டு வந்து மறுபடியும்
இட்டிலியை உண்டு முடித்து தட்டைக் கழுவி வைத்துவிட்டு கூடத்திற்கு வந்தாள்.
தொலைக்காட்சியில்
,’நாளை நமதே படம் ஓடியது ஆனால் மனம்
அதில் இல்லை. இரண்டு ஆண்டுக்கு முன்
இவரின் பெரிய அக்காவும் இப்படிதான்.
விரதம்,விரதம் என்று இருந்து உடல்நிலை
பாதிக்கப்பட்டார்.அல்சர் வந்து அறுவை சிகிச்சை வரை போனது ஒரு நாலரை லட்சம் செலவானது
இத்தனைக்கும் குடும்ப மருத்துவர் எனும் அளவிற்குப் பழக்கமானவர். புதிதாக மருத்துவமனை விரிவாக்கம் செய்திருந்தார். அதனால்தானோ என்னவோ,’ இரத்தம் குறைவாக உள்ளது என்கிறீர்கள் ,மருந்து ,மாத்திரை தந்து ஒரு வாரம் பார்க்கலாமே என்று கேட்டதற்கு
அதெல்லாம் தள்ளிப் போடக் கூடாது இரத்தம் ஏற்றி உடனே அறுவை சிகிச்சை செய்தாகணும்.இல்லாவிடில் பிழைக்க உத்தரவாதமில்லை என்றார் .
இரண்டே நாளில் குடல் அறுவை சிகிச்சை செய்து ,’வெற்றிகரமாக முடித்து
உங்களிடம் ஒப்படைச்சிட்டேன். இனி நீங்கதான் கவனித்து உடம்பைத் தேற்றணும்’ என்று சொல்லி விட்டார்.
ஆனால் எத்தனை கவனித்தும் தேறவே
இல்லை. சமையலுக்கு,அவர்களை கவனித்து கொள்ள, ஏற்கெனவே வீட்டு வேலைக்கு என மூன்று பெண்களுக்கு
சம்பளம் தந்ததுதான் மிச்சம்.
வேறொரு மருத்துவரிடம் காட்டினதற்கு
இவ்வளவு பலவீனமான நிலையில்
அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டியதில்லை என்றார். எப்படியோ
அலைச்சல்,மனவருத்தம் அதிகமானது,
ஒரு வழியாய்ப் போய்ச் சேர்ந்தார்கள்.
அலைபேசி அழைப்பு யாராக இருக்கும்.
தம்பிதான் பேசினான்,’அக்கா எப்படி இருக்காங்க ? மாமா மட்டும்தான் அலைச்சல் படறாரா? ‘ என்றான். அதோடு
பணம் தேவைப்பட்டா நீ உடனே சொல்லு
என்றான்.சரி பா என்று சொல்லி விட்டு
சோபாவில் முதல்நாள் மாலை போட்டு வைத்திருந்த துவைத்த துணிகளை மடித்து பிரித்து அலமாரியில் அடுக்கி வைத்தாள்.
வேறு சேலை மாற்றிக் கொண்டு, அலைபேசியில் ஐயம்மாவை வரச் சொல்லிவிட்டு, மறக்காமல் அந்த வீட்டுச் சாவியை எடுத்து
கைப்பையில் போட்டுக் கொண்டாள். பின.கதவைத் தாளிட்டு, கேஸ் அணைக்கப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு தகிக்கும் வெயில் மறைக்க குடையோடு வீட்டைப் பூட்டின சத்தத்தில்.
காரின் மீது சுகமாக உறங்கிக் கொண்டிரு்த வெள்ளைப் பூனை தலையைத திருப.பி் இவளைப். பார்த்தது,
விரட்டலாமா என நினைத்தவள் சரி இருக்கட்டுமென்று தெருவில் இறங்கி நடந்தாள்.
திருவந்திபுரம் மெயின் ரோடு வந்த போது வந்து நின்ற ஆட்டோ . ஓட்டுனரிடம் போடிச் செட்டித் தெரு போகணும் எவ்வளவு?. எழுபது ரூபா கொடுங்க . சரி.. இறங்கிப் பணம் தந்துவிட்டு கதவைத் திறந்த போது நாலாவது வீட்டிலிருந்த ஐயம்மா வாங்க அண்ணி என்று வந்தாள்.
பத்து நாளாக மூடிக்கிடக்கிறது. ஏதோ ஒரு
வாசம்..
பின் கதவைத் திறந்து விட்டாள் காற்றும்,.வெளிச்சமும் ஓடி வந்தது. ஐயம்மா வேகமாக கைக்கெட்டிய தூசி தட்டி பெருக்கி வாரினாள்.
அகலம் குறைவான நீண்ட வீடு தம்பி குகை என்பான்.
கூடத்தில் பெரிய அளவில் இவளது மாமி தன் ,தங்கையோடு் இருந்த படம்
கண்ணில் பட்டது.சென்னையில் சாவித்திரி மாமி் நலமில்லாமல்
நான்கைந்து மாதங்களாகப் படுக்கையில் இருந்தபோது கைக்குழந்தை கண்ணன், இவர்கள்
பெங்களூரிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் போன மறுநாளே மாமி சொர்கம் போய்விட்டது நினைவில் ஆடியது.
பெரியப்பா படுத்த படுக்கையாய் கிடந்த போது பார்க்க முடியாமல் ஏழு ஆண்டுகள் ஓடினது. ஒரு கோடை விடுமுறைக்கு வந்த போது பார்த்துச் சென்றாள் . ஒரு வாரத்தில் படுக்கை காலி ஆனது.
தங்கையின் மாமியார் பக்கவாதம் பாதித்து ஆறுமாதம் இருந்தாள். இவள் சென்று பார்த்து வந்த சில தினங்களில்
விடைபெற்றாள்.
அதற்குப் பின் அம்மா வீட்டில் இப்படிப் பேச்சு எழுந்தது யாராவது இழுத்துக் கொண்டு கிடந்தால் மேகலா சென்று பார்த்தால் போதும்.என.
மருத்துவ மனையில் இருக்கும் நாத்தனாருக்கு மாற்று உடைகள் எடுக்க
வந்த வேலை முடிநதது. ஐயம்மாவிடம்
அவளது சம்பளம் ஆயிரத்தைந்நூறு தந்துவிட்டு ,
ஒரு சாவி வச்சிருக்கதானே ஐயம்மா
ஆமாம் அண்ணி,
தெனம் வாசல் தெளிச்சு கோலம்
போட்டுடறேன்.
ஒரு வாரத்தில வந்திடுவாங்க.
வீட்ட பார்த்துக்க
சொல்லி விட்டு வீடு திரும்பினாள்.
இரண்டு மாதம் ஓடி விட்டது.
வீட்டிற்கு அழைத்து வந்து. படுத்த படுக்கைதான்.இவள் ஒருநாளும் வரவில்லை மனதில் ஒரு அச்சம்.சிவாவும்
நீ வரவேண்டாம் என்று்சொல்லி விட்டான்.
அன்று மாலை
அக்கா படும்பாடு பார்க்க
வேதனையா இருக்கு மேகலா.
சரியாகிடும் கவலைப் படாதீங்க.
இல்லமா அதுக்கு வழியே இல்ல.
முதுகில், காலில் எல்லாம் காயம் வந்து விட்டது.
மருத்துவர்களும் கைவிட்டு விட்டார்கள்
கடவுள் கைவிடமாட்டார் நம்புங்க
இல்லம்மா
நாளைக்கு காலையில அக்காவைப் பார்க்க
நீயும் வா என்றான்.
- கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்
- இன்று…
- தலைப்பில்லாத கவிதைகள்
- பார்த்தாலே போதும்
- அறிஞர் அப்துற்-றஹீம் கூறும் எண்ணமும் வாழ்க்கையும்
- ’பாவண்ணனின் வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’
- கவிச்சூரியன் ஐக்கூ 2022
- இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’
- நான் கூச்சக்காரன்
- வர்ண மகள் – நபகேசரா
- வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளும்
- இன்னும் எவ்வளவோ
- ஒட்டடைக்குருவி
- பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானுடனாய் வளர்ச்சி பெறச் சூழ்வெளி அமைக்கிறது.
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 31
- சொல்லவேண்டிய சில…..
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இசையோடு, காட்சியோடு பாடல் : ஆடும் அழகே அழகு