சொல்லத்தோன்றும் சில

This entry is part 12 of 16 in the series 17 ஏப்ரல் 2022

 

 

 

லதா ராமகிருஷ்ணன்

 

ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு.

 

இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி யாகத் துன்புறுத்தியிருக்கும் செய்திகளை அடிக்கடி படிக்க நேர்கிறது.

 

பெண் களுக்கெதிரான வன்கொடுமைகளுக்காகக் களத்தில் போராடுபவர்கள், இது குறித்த ஆய்வலசல்கள் மேற்கொள்வோர் குடும்பங்களுக்குள், உறவுக்காரர்களால் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

 

ஆணவத்தால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுகளைப் போல் இப்போது அதைப் படம்பிடித்து விற்றுக் காசுபார்க்கும் காரணத்திற்காகவும் நிறைய வன்புணர்வுகள் அந்நிய ஆண்களாலும், அந்நியோன்யக் காதலர்களாலும், அக்கம்பக்கத்துக் காமுகர்களாலும், வீட்டுப்பெரியவர்களாலும்(?) நிகழ்த்தப் படுகின்றன என்று செய்திகள் வருகின்றன.

 

அதேசமயம். இதைப் பொதுமைப்படுத்திப் பேசிவிட முடியாது; பேசிவிட லாகாது. வீட்டு ஆண்களே இப்படித்தான் என்று காமாலைக் கண்களோடு எல்லா ஆண்களையும் பார்ப்பதோ, அப்படிப் பார்த்து அஞ்சும்படி வீட்டிலுள்ள சிறுமிகளைச் செய்துவிடுவதோ சரியல்ல.

 

எனக்குத் தெரிந்த தபால்காரர் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் – அவர்களில் இருவர் பெண்கள், தனது 95 வயதுத் தாயையும் அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறார்.

 

சில வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப் பட்டிருந்தபோது செலவை சமாளிக்க வெற்றுக் காசோலைகளில் கையெழுத் திட்டு வாங்கிய கடன் இன்று அவரை அப்படி வாட்டிக்கொண்டிருக் கிறது.

 

எல்லா சம்பளத்தையும் வட்டி, முதலை வசூலிக்கிறோம் என்ற பெயரில் எப்போதோ அடைந்துவிட்ட கடனுக்காக இப்போதும் வெற்றுக் காசோலைகள் மூலம் அவருடைய சம்பளத்தை நினைத்தபோதெல்லாம் வழித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி சமயங்களில் இரவில் எங்காவது பெயிண்ட் அடிக்கும் வேலை என்று ஏதாவது செய்வது வழக்கமாம்.

 

கேசு, கோர்ட்டு என்று அலைந்துகொண்டிருக்கிறார். தெலுங்கு அவருடைய மொழி. குழந்தைகளை ஆந்திராவில் உள்ள பள்ளி விடுதியில் சேர்த்திருக் கிறார்.

 

தாய்க்கு 95 வயது. இப்போதும் ஊரில் இட்லி சுட்டு விற்கிறாராம்!.

 

தபால்காரத் தோழருக்கு சென்னையிலிருந்து மாற்றல் கிடைக்கவில்லை. தெலுங்குப் பள்ளி அதிகம் சென்னையில் இல்லையென்பதால் அவருடைய பிள்ளைகளை இங்கே படிக்கவைக்கமுடியாத நிலை.

 

கடந்த வருடம் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்த பெரிய மகள் வயதுக்கு வந்துவிட, ஊரிலிருக்கும் தாயாரி டம் தொலைபேசி இல்லை யென்பதால் இரவு எனக்கு போன் செய்து என்ன செய்வது என்று கேட்டார். சில ஆலோசனைகள் கூறினேன். சென்னையில் அவர் வீடு எங்கேயோ தொலைவில். அங்கிருந்த பெண்கள் வந்து உதவினார்களாம்.

 

பிள்ளைகளைப் பார்க்க ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அவர் ஊருக்குப் போகும்போதெல்லாம் தெருவிலுள்ள சில வீடுகளில் புதிய, பழைய துணிமணிகள், முடிந்த பணம் என்று கொடுத்தனுப்புவோம்.

 

பலவீனமான உடல் அவருக்கு. ஆனால், ஒரு மகனாக, தகப்பனாக அவரு டைய பாசமும் நேசமும் அத்தனை உறுதியானது!

 

அவருடைய கடன் தொல்லை தீர்ந்து அவருக்கு எப்படி யாவது ஆந்திராவுக்கு மாற்றல் கிடைக்கவேண்டும் என்பது என் என்றுமான பிரார்த்தனைகளில் ஒன்றாய்……

 

***  ***

மொழியாற்றல், ஒரு மொழியை சரிவர எழுதவும் படிக்கவும் தெரியவேண்டி யது அவசியமே. இதற்கு மாற்றுக்கருத்தில்லை.

 

அதே சமயம் மொழி என்பது காலந்தோறும் பல வகையான மாற்றங்களை ஏற்றுவருவது.

 

ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இந்த விழிப்புணர் வோடு, புரிதலோடு மொழியைக் கையாளவேண்டிய தேவையிருக்கிறது.

 

பழந்தமிழ்க் கவிதைகளின் மொழிவழக்கிலிருந்து சமகாலக் கவிதையின் மொழிவழக்கு பெருமளவு மாறுபட் டிருக்கிறது.

 

வட்டார வழக்குகளையும் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலக்கு வாசகர்கள் யார் என்பதும் ஒரு மொழியைக் கையாள்வதில் முக்கிய கவனம் பெறும், பெறவேண்டிய ஒன்று.

 

சில வருடங்களுக்கு முன்பு AID INDIA, PRATHAM ஆகிய சில தன்னார்வல அமைப்புகள் சேர்ந்து நாடு முழுக்க நடத்திய சுற்றாய்வொன்று நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு இரண்டாம் வகுப்பு தாய்மொழிப் பாடப் புத்தகங்க ளையே படிக்கத் தெரியாத நிலையை எடுத்துக்காட்டியது.

 

ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான நூலகம் என்று பெயருக்கு இருந்தாலும் குழந்தைகள் கிழித்துவிடுவார்கள் என்று அலமாரிக்குள்ளேயே பூட்டிவைத்து விடுவது தான் பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.

 

தனியார் பள்ளி மாணவர்களின் மொழித்திறனும் இப்படியே.

 

சிறு பருவத்திலேயே மொழிமீது ஆர்வமும் மொழியாற்றலைப் பெற வழிவகைகளையும் உருவாக்கித் தரவேண்டியது இன்றியமையாதது.

 

 

 

  •  
Series Navigationவாய்ச்சொல் வீரர்கள்வடகிழக்கு இந்திய பயணம் – 4
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *