இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 12 in the series 15 மே 2022

 

 

ப. சிவகாமி

( நொயல் நடேசன் அவர்களின்   ‘ பண்ணையில் ஒரு மிருகம் ‘  என்ற   புதினத்திற்கு எழுதப்பட்ட   முன்னுரை )

கே.  டானியல்,  செ.  கணேசலிங்கன்,  இளங்கீரன், நீர்வை பொன்னையன் , காவலூர் இராசதுரை, டொமினிக் ஜீவா ,               செ.  யோகநாதன்,  எஸ். பொ , தெணியான், பெனடிக்ற்பாலன், என். கே. ரகுநாதன் போன்றோரின் சாதிப்பாகுபாட்டிற்கு எதிரான இலக்கிய வரிசையில் சிறந்த இடத்தைகொண்டிருப்பவர்,  இலங்கையைத் தாயகமாகக்கொண்டு தமிழ்நாட்டில்        சிலகாலம் வாழ்ந்து , பலவருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நொயல் நடேசன் .

அசோகனின்வைத்தியசாலை,  வண்ணாத்திக்குளம்,  உனையே மையல்கொண்டு    முதலான புகழ்பெற்ற புதினங்களையும் மற்றும்  மலேசியன் ஏர்லைன்ஸ் 370 என்ற சிறுகதைத் தொகுப்பையும் வரவாக்கி, வாழும்சுவடுகள் என்ற தனது பணிசார்ந்த கட்டுரைகளுடன்   நைல்நதிக் கரையோரம்  என்ற பயண  இலக்கியத்திலும் கால்பதித்தவர், நொயல் நடேசன்.

இவருடைய படைப்புகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய ஆக்கங்கள் .  இவருடைய  பண்ணையில் ஒரு மிருகம்   என்னும் 1980 களில் தமிழகத்தை களமாகக் கொண்டு எழுதப்பட்ட புதினத்திற்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன் .

ஒரு கால்நடைப் பண்ணையில் கால்நடை மருத்துவரான நொயல் நடேசன் சிலகாலம் தங்கியிருந்த சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது இந்தநாவல் என்றாலும், எழுத்தாளர் என்ற உண்மையும் கதாபாத்திரம் என்ற புனைவும் ஒன்றோடு ஒன்று இணைந்து எழுதிய சிறந்த படைப்பாகக் காண்கிறேன்.

புதினத்தின் தலைப்பில் உள்ள மிருகம் என்ற வார்த்தை ஆடு,  மாடு போன்ற கால்நடைகளைக் குறிப்பதில்லை என்பதைவாசிக்க ஆரம்பித்ததுமே புரிந்து கொள்ளமுடிகிறது.

முன்னுரை வாயிலாகக் கதைச்சு ருக்கத்தை எழுதிவிடும் எண்ணம் எனக்கில்லாததால்  இப்புதினம் கிளர்த்தியுள்ள சில முக்கியமானதாக்கங்களைப்பற்றிய விவாதித்தல்சி  றப்புக்குரியதாக  இருக்குமெனத்  தோன்றுகிறது.

தமிழக  சமுதாயத்தைப் போலவே இலங்கை தமிழ் சமூகமும் சாதிகளினால்  கட்டமைக்கப்பட்டதே.  பரந்துபட்ட வாழ்க்கை, உயர் கல்வி புலம்பெயர்ந்த வாழ்க்கை ஆகியவை எழுத்தாளரை  சாதிக்கப்பாற்பட்டு  நிறுத்துவதோடு , சாதிக்கெதிரான   விமர்சனக்கண்ணோட்டம்  கொண்ட  போராளியாக   மாற்றிவிடுகிறது.

சிலர் விதிவிலக்காக இருக்கின்றனர் என்பதையும் மறுக்கமுடியாது.  நொயல்  நடேசன் அவர்களின்  வாழ்க்கைப்  பின்னணி  அவர்  கொண்டிருந்த சித்தாந்தத்திற்கு  உந்துதலாக  இருந்துள்ளது  என்பதைக்   கணக்கில் கொள்ளவேண்டும்.

சுயஎள்ளலும்,பரிகாசத்துடன் கூடிய  அவலச்சுவையும்  அவர் எழுத்துகளில்   விரவிக்கிடப்பதைப்   பார்க்கலாம்.  மலேசியன் ஏர்லைன்ஸ் 370  என்ற   சிறுகதைத்   தொகுப்பில்   உள்ள                 “   இதுஎங்கள்கதை  “ எனும்                                                                                      சிறுகதையில் மருத்துவ மாணவர்கள்  பரிசோதனைக்காக  இறந்தவர்கள்   சடலங்கள்   தேவை   எனும்போது,  தாமதமாக   சிலமாணவர்கள்   வந்ததால்   சடலம்   கிடைக்கவில்லை.  அப்பொழுது  “எங்கள்  தேசியத்தலைவர்   இருக்கும்மட்டும்  அதற்குப்பிரச்சினை   இல்லை “ என்று  பரிசோதனைக்  கூடத்தில்   வேலைசெய்யும்    இராசரத்தினம்    கூறுகிறார் .

தேசியத்  தலைவர்   என்று  யாரைக்  கூறுகிறார்   என்பது   எல்லோருக்கும்   தெரிந்தே   உள்ளது. வீரம்                                                     விளையும்  களம்  என்று   இங்குள்ள   தமிழர்கள்   பெருமை   கொண்டிருக்கும்போது,  இறந்த சடலங்களுக்குத் தலைவர்   இருக்கும் வரை  பஞ்சமில்லை  என்பது எவ்வளவு  கூரிய விமர்சனமாக    உள்ளது!

சிறுகதைகளில் உள்ள உரையாடல் என்ற பெயரில் நொயல் விட்டெறிந்திருக்கும் கூரிய அம்புகளும் சீரிய சிந்தனைக்குள்தள்ளிவிடும்   பகடிகளும்    ஏராளம்..

“ இந்தஊரில் உப்புத்தான்  கட்டுபடியாகிறவிலையில் கிடைக்கிறது.”

சின்னவனை  ஆமி பொலிஸில பிடிபடாம  காப்பாத்தி,  இருந்த  காணி  நகைகளை   வித்து   வெளிநாட்டுக்கு   அனுப்பினன் . அவன்   இத்தாலியில்   ஜெயிலுக்குள்ள    இருக்கிறானாம்.. “

போரினால்  சின்னா  பின்னமாகவிருக்கும்  இலங்கையின்   பொருளாதாரம்  மற்றும்   புலம்பெயர்ந்தவர்களின்   வாழ்க்கையைச்  சிறுசிறுவாக்கியங்களில் தீவிரமான  வாசிப்புக்கிடமாக்கிவிடுகிறார்.

“இலங்கையில்   உள்ள   தமிழர்கள் 70 வயதில் இயற்கை  மரணம்   மகிழ்ச்சிக்குரியது  என்பது  எனது   சிந்தனை  “

எண்ணற்றவர்கள் உள்நாட்டுப்போரில்  மடிந்தது கண்டு  இயற்கை  மரணம்  கொண்டாடப்படக்கூடியது  என்ற  மனநிலை   துயரத்தின்  வெளிப்பாடு   மட்டுமல்ல,  போருக்கெதிரான   கூப்பாடு   என்பதைச்                                              “  சாந்தி தேடும் ஆவி  “ என்னும் கதையில்  வரும்  ஒரு  நீண்ட  உரையாடல்   மூலம்   அறியலாம்

“  சிறிது  நேரத்தில்  அவரே   மவுனத்தைக்  கலைத்தார்

“ விடுதலைப் புலிகள் காலத்தில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்தார்கள்தான்.  அதை  ஏற்றுக்கொள்கிறேன் .அப்போது  விடிவுவரும்  என்ற  எதிர்பார்ப்பு  இருந்தது. கஷ்டம் தெரியவில்லை . ஆனால்,  இப்பொழுது  எதிர்காலத்தை நினைக்காமல்  கஷ்டத்தை  அனுபவிக்கிறோம் “

இதற்குப் பதில் சொல்வதா   இல்லையா  என  யோசித்துவிட்டு  “ இதெல்லாம்  மனம்சம்பந்தப்பட்ட   விடயம். விடுதலைப்புலிகள்  ஆட்சியில் தமிழ்ப் பிரேதேசங்களில்  பதினைந்து   வருடங்கள்   மக்கள்  வாழ்ந்திருக்கிறார்கள்.  கட்டாய   வரிகள் ,   கட்டாய   ஆள்சேர்ப்பு  , தண்டனைகள்  எனக்கொடூரமாக   இருந்தது   எனச்சிலர்   சொன்னார்கள் . உடலுறவுக்கு  மட்டும் வரிவிதிக்காமல்  மற்ற  எல்லாவற்றிற்கும் வரிவிதித்தார்கள் என வெளிநாட்டிலிருந்து வன்னிக்குப்   போய்வந்தவர்கள்    சொன்னார்கள் “

“ இதைச்செய்யக் காரணம் தமிழ் ஈழத்திற்கு அதிகமானவர்கள்  தேவை   என்பதாகும் “அதைச்சொல்லிவிட்டுச்   சிரித்தார் . அந்தச்சிரிப்பில்  கனமான  சூழ்நிலையின்   இறுக்கம்  தளர்ந்தது.  உடலுறவு பற்றிய விடயம் பேசும்போது  மத்திய  வயதானவர்களிடம்  நட்பு உருவாகிறது.

“நீங்கள்  புலிகளை  எதிர்ப்பவரா?  “

“நான்விடுதலைப்புலிகளின் “போராட்ட வழிமுறைகளைமட்டுமல்ல இலங்கையில் பிரிவினையையும் எதிர்ப்பவன். “

“நீங்கள்  சிங்களவர்களை  நம்புகிறீர்களா? “

“நம்புவது   நம்பாதது  இங்கே  விடயமில்லை.  இந்தநாடு  பிரிந்து   வாழ  சர்வதேசம்  அனுமதிக்காது. இந்தப்பிரிவினைப்  போராட்டம் ஒடுக்கப்படும்போது  மக்கள்  அநியாயமாக  அழிவார்கள்  என்பது   எனக்குப்  புரிந்திருந்தது “

“இது ஏன் மற்றவர்களுக்குப் புரியவில்லை? “

“இதற்கு  நான்   எப்படி  பதில்  சொல்லமுடியும்?  இது  நான்  சம்பந்தப்பட்ட விடயம்.  எனது   அனுமானம்   ஒன்று  உண்டு . இலங்கையில் தமிழ்ச்சமூகம் தகப்பனுக்கு உண்மை சொல்லப்பயந்து  வளர்ந்து. 

பாடசாலையில்  ஆசிரியருக்கு  அதன்பின்  இராணுவம் இயக்கம்  என்று  பயத்தினால்  உண்மை  பேசமறுத்து  வளர்ந்ததால்   கடைசி   வரையிலும்  அப்படியே வாழ்ந்துவிட்டது.

வாக்குகளுக்கு  அரசியல்வாதிகளும்  பொய் பேசினார்கள். அகதி  அந்தஸ்த்துக்கு வெளிநாடு  சென்ற தமிழரும்  பொய் பேசினார்கள் . இந்தநிலையில் மூளை பிசகானவர்கள் மட்டுமே   உண்மை  பேசுவார்கள் .காந்தியைப் போல் ஒருவர் வந்து  சத்தியமேவஜெய — என்றால்   தலையில் போட்டுவிட்டுத்தான் மறுவேலை  பார்ப்பார்கள்.  “

“யார் அந்தக்காந்தி?  இயக்கத்துக் காந்தியை, ராஜீவ் காந்தியையும்தானே போட்டாகிவிட்டது. . “

மேற்கண்ட உரையாடல்களைக் கதாபாத்திரங்கள்  மூலம்  நிகழ்த்துவதென்பது,   இலங்கையின் பெரும்பான்மைக் கருத்து என்று சொல்லப்பட்டதிலிருந்து வேறுபட்ட மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருந்தவர்களும் தங்கள் விமர்சனத்தை  வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து  கூறிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்பதை   உணரமுடிகிறது . மேற்கண்ட  உரையாடல்களைக் கதாபாத்திரங்கள்   மூலம்   நிகழ்த்துவதென்பது,   இலங்கையின்  பெரும்பான்மைக்கருத்து   என்று  சொல்லப்பட்டதிலிருந்து    வேறுபட்ட  மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருந்தவர்களும்  தங்கள்  விமர்சனத்தை   வெளிப்படையாக   இல்லாவிட்டாலும்   தொடர்ந்து கூறிக்கொண்டுதான்  வந்திருக்கிறார்கள்  என்பதை  உணரமுடிகிறது .

நொயல் நடேசன்  அவர்களின்  பரந்துபட்ட  சிந்தனை  குறித்து  ஓரளவு  அறிமுகத்துடன்  பண்ணையில் ஒரு மிருகம் என்ற நாவலுக்குள் நுழையும்போது தமிழகத்தின் சாதிய சமூகம் குறித்து அவர் என்ன கருத்து கொண்டிருந்தப்பார் என்பதைப்பற்றி  ஓரளவு  ஊகிக்க முடிகிறது .

இலங்கைத் தமிழரையும், தமிழகத்தையும் இணைத்திருப்பது  வெறும் மொழி மட்டுமல்ல .அந்த மொழியினால் ஊட்டம் பெற்ற பண்பாட்டின் வழியாக  ஊடுருவியிருக்கும் சாதியமும்தான்  என்பதை  கே . டானியல் உள்ளிட்ட  பல எழுத்தாளர்களின்  படைப்புகள்  உணர்த்தியிருக்கின்றன. . இந்த நாவலில்  தமிழகத்தின்  கிராமப்புறத்தில்  அமைந்துள்ள  ஒரு கால்   நடைப்பண்ணைக்கு,   கால்நடை  மருத்துவராக  வருகிறார்  கதைசொல்லி .

கிராமப்புறம்  என்றால்  சாதி  மிகத்துல்லியமாக வரையறுக்கப்பட்ட  பகுதி   என்பது  மறுக்கவியலாத  உண்மை.   வெளியில் இருந்து  வரும்  யாரையும்  வியக்கவைக்கும்  அளவில்   மிகக்கொடூரமாக   பரவியிருக்கும் ஒரு  வியாதி.

பண்ணைக்கு   வருமுன்      அங்குநடந்த ஒரு  பெண்ணின்  கொலை ,  தலித் சிறுவர்கள்  இருவர்   அங்கு  வேலைசெய்யும்   இடை  நிலைசாதியைச்  சேர்ந்த  ஒருவரால்                                         மூர்க்கமாகப்   பாலியல்   பலாத்காரம் செய்யப்படுவது, சாதி மறுப்பு   காதலுக்கும் கொலை  வெறிகொள்ளும்நிலவுடைமை சமூகம்,  இன்னும்  பலவகைகளில்  தலித்சமூகம் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது , சாதாரண பழக்க  வழக்கங்களிலும் ஒழிந்திருக்கிறது.

மனித  மாண்பைக் கொல்லும் சாதியம்  என்று பல காட்சிகளை  விவரிக்கிறார்   கதைசொல்லி.  கதை சொல்லியின்   நிலையிலிருந்து சிலமாற்றங்களை முன்மொழிகிறார். காலப்போக்கில் இருபதாண்டு காலத்திற்குபிறகு அதே பண்ணைக்குத் திரும்பிச்செல்லும்போது ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களைச் சுற்றிக்காட்டுகிறார்.

கூடவே சில அமானுஷ்ய நிகழ்வுகள் எப்படிச் சாதிக் கொடுமைக்கெதிரான நியாயங்களை வழங்குகிறது என்று  கதை நெடுக  அதற்கானகள மமைத்து கதையினூடாகவே வலிமையுடன்   கூறிவருகிறார் .

உடைமை சமூகத்தின் ஆதரவில்   கூலியாட்களாகப் பிழைப்பு நடத்திக்கொண்டு,   வாய்  பேசத்  துணிவற்று   கொடுமைகளைச்   சகித்துக்கொண்டு   வாழும்   பரிதாபத்துக்குரிய   தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை   ஒருபக்கமும் ,  காலம்   காலமாக மனச்சாட்சி,   மனித   மாண்பு இல்லாமல் சாதியின் பெயரால்  சுரண்டிவரும் உடைமை   சமூகத்தினர் மறுபக்கமுமாகப் பிளவுண்டு  கிடக்கும் கிராம  சமூகத்தில்,   வேற்று   மனிதராக  உள்நுழையும் மருத்துவர்,  ஏற்கனவே இலங்கையில்  தன்  இளமைக் காலத்தைக் கழித்திருந்தும்,  இதைமுற்றிலும்  அந்நியமாகக்  கருதுகிறார் . காரணம்,  வேலை செய்யும் சூழலில்  தனக்கு மேலும்  கீழும் வேலை  செய்பவர்களிடையே உறவாடும்போதுதான் சாதி உக்கிரமாக  வெளிப்படுகிறது.

உணவு அருந்துதல்  தொடங்கியார்  உள்ளே  வரலாம்,  யார்  வீட்டுக்குப்  போகலாம் , யார் வீட்டுக்குப்  போகக்கூடாது , உரையாடும் மொழி வரை                                                                                           துல்லியமாகக் கவனித்துச்  சாதி  என்ற பலமுனைக் கத்தியைப் பட்டை   தீட்டி  பார்வைக்கு   வைக்கிறார் .

தாழ்த்தப்பட்டவர்கள் என்ற தலித்  மக்களைக் கரையேற்றுவதில்  பல  பார்வைகள்   உண்டு . காந்தீயம் தலித்மக்களை    இந்துக்கள்   என்று  கருதுவதோடு ,சாதி அமைப்பு வேலைப் பாகுபாட்டிற்கான பொருத்தமான  ஏற்பாடு எனக்கருதுகிறது . அதனால் காந்தி அவர்கள்  சாதி  இந்துக்கள் என்ற ஆதிக்கசாதியினரைப் பொறுப்புள்ள  தர்மகர்த்தாக்கள்   என்றும்  இரக்கமுள்ள  தகப்பனார்கள்  என்றும்   கருதி , தாழ்த்தப்பட்டவர்கள் இவர்களிடம்   பாதுகாப்பாக  இருப்பார்கள்   என்று   நம்பினார்.

காந்தியின் ராமராஜ்யம்   என்பது  இதுதான். தர்மகர்த்தா – தகப்பனார்  என்று  கூறவதில்   சில  வசதிகள்  உண்டு . அடித்து உதைத்துவதைத்தாலும் பிள்ளைகளின்  நன்மைக்கே   என்று  நம்புகிறவர்கள்  இன்றும் நம்மிடையே  இருக்கத்தானே செய்கிறார்கள்.

இத்தகையவர்களின் ஆதரவு எப்படிப்பட்டது  என்பதை  பண்ணையில்ஒருமிருகம் சுரண்டல், வன்முறை மற்றும் வல்லுறவு  என்றே  மொழிபெயர்க்கிறது.

கதைசொல்லி   ஒரு மார்க்ஸிய   ஆர்வலர் .   அவ்வப்போது  இறுக்கத்திலிருந்து  தன்னைத்தளர்த்த  அவருக்குத்                                திறந்துவைத்த சன்னலிலிருந்து வந்து வெற்றுடம்பில் மோதும் காற்றும்,   மார்க்ஸிய  இலக்கியமும்   உதவியாக   இருக்கிறது.

இந்திய மார்க்ஸியம்  இன்னும் சாதியை பொருளாதாரத்தோடு இணைந்த   அடிக்கட்டுமானமாகப்   பார்ப்பதில்லை. இந்தியா   வல்லரசாக  வேண்டும்.  அதன்மூலம் ஏழ்மையும்  அகற்றப்படும்   என்கிற   அடிப்படைவாத  சிந்தனைக்கும்,  பொருளாதார  மாற்றம் வந்தால்சாதியம் அழிந்து விடும்  என்ற இந்திய   மார்க்ஸிய   சிந்தனைக்கும்    பெரிய வேறுபாடில்லை. 

சாதி என்பது   பொருளாதார அடிக்கட்டுமானத்தில் எழுந்த   மேற்பூச்சு என்கிற இந்திய கம்யூனிஸ்கட்சி அறிக்கைகூறுகிறது.    நிலவுடைமை  என்பதே  இந்தியாவில் – தமிழகத்தில் சாதியமைப்பாகவும் இருக்கிறது   என்பதைக் கிராம  நிலவுடைமையை ஆய்வு செய்யும்போது  எவரும் எளிதில்  புரிந்துகொள்ளலாம்.

அயோத்தி தாச பண்டிதர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சாதியின் மூலத்துக்குச் சென்று, அதை அடியோடு வேரறுக்கும் வகையைச் சாத்வீகவழியில்  மொழிந்திருக்கிறார்கள்.   

1980 களின் நாவல் என்பதால் அம்பேத்கர் சிந்தனைத் தாக்கம் குறைவாக உள்ளதை  அறியமுடிகிறது.  வருண பாகுபாடு என்பது அகமணத்தை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதன் விளைவாக சாதியாக உருவெடுத்தும் சாதியை இறைமையோடு  தொடர்புப்படுத்தி  முற்பிறவி  , சொர்க்கம் , நரகம் போன்ற   பல புனைவுகள்  கொண்ட புராணங்களை உள்ளடக்கிய  இந்துமதம்  ஆதரித்து  வளர்த்து வருவதாலும்,  சாதியமைப்பு தொடர்ந்து  நீடித்து வருவதாக கண்டார்கள்.

சாதி ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கான போராட்டங்கள் ,ஒடுக்கப்பட்டவர்களின்  விழிப்புணர்வு- கல்வியிலிருந்து துவங்குகிறது  என்றாலும், சுயச்சார்பு கொள்ளும் பொருளாதார   விடுதலை,   நிலமானிய  முறை ஒழிப்பு , மூடநம்பிக்கைகள் கொண்ட  இந்து மதத்திலிருந்து வெளியேற்றம்  என்ற   பலவற்றை   அடக்கியுள்ளது.

பல்விளக்கி சுத்தமாக இருங்கள் என்ற சனாதனக் கூட்டத்தின் அறிவுரைகள்,  மாட்டு மாமிசம் உண்டது தீண்டாமைக்கு வழிவகுத்தது  பொய்மையான  பரப்புரைகள் , தீட்டு – புனிதம்  என்கிற  கோட்பாடுகள்  இன்னமும் புழக்கத்திலிருக்கின்ற சமூகத்தில் , இழிநிலைக்குத்தள்ளப்பட்ட தலித்மக்கள் மீண்டெழுவது என்பது  நீண்டகால செய்முறையை கொண்டிருக்கிறது   ‘காலம் ‘ என்ற இந்தப்புதினத்தில் கதைசொல்லி கூறும்போது காலத்தில் விளையும்பயிர் என்று சூழ்நிலைக்கேற்ப தங்களைத் தகவமைத்து போராட்ட  உத்திகளைக் கையாளும்  தலித்மக்களும் அதில் அடங்குவார்கள் .

அயோத்திதாசர் அம்பேத்கர் ஆகியோரின் வாழ்வும் போராட்டகளும் இத்தகைய மாற்றங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.  ஆனால்,  இந்த நாவலின்                   காலகட்டம் ,இவர்களின்   சிந்தனைகள் பரவத் தொடங்காதகால கட்டம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். .

கதைசொல்லி  இளைஞன் , பிறர்கண்களுக்கு புலப்படாத நீதிகேட்டு  அலறும்   ஒரு பெண்ணின்குரலைக் கேட்கிறான் . கறுப்பின் பேரழகில் நல்ல உடற்கட்டும் கொண்ட ,இறந்ததாக அதாவது கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் ஒரு பெண்ணின்குரல் !

இது  ஒரு நல்லகற்பனை.  அல்லதுகனவு ! அல்லது, கனவு கற்பனை எல்லாவற்றையும் மீறிய குழப்பநிலையிலுள்ள ஒரு அமானுஷ்யம்! அல்லது உண்மை  என்று  நம்ப முடியாமலும் , மாயை என்று  ஒதுக்கமுடியாமலும் உள்ள  தனிமனிதஅனுபவம்.

ஒரு அமானுஷ்யத்தை உருவாக்கி  உலவவிடுவது கூட அங்கே நீதிமறுக்கப்படும் சமுதாயத்தை அல்லது தனிமனிதர்களை காப்பாற்றும் பொருட்டுதான்.

அமானுஷ்யம் என்பது  இன்னமும் விளங்கிக்கொள்ளாத புதிராகவே உள்ளது .                                                                                                     புத்தர் பிறப்பதற்கு முன்பாக அவர் வருகையை அறிவிக்கும் கனவு ஒரு  யோகிக்கு வந்தது.

அவர் பிறந்த பிறகு உலக லௌகீகங்களிலிருந்து விடுபட்டு உலகுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார் என்று ஆருடம் கூறியது. இவையெல்லாம் இன்றுவரை விஞ்ஞானத்தால் விளக்கப்படாதவையாகவே  உள்ளன. இயேசுவின் வருகையை அவருக்கு   முன்பாக  தீர்க்கதரிசிகள்  உரைத்தனர்.

  மரியாள் யோசப்பைக் கூடாமல் ஒரு குழந்தையைப் பரிசுத்த ஆவி தன்மேல் இறங்கக் கருத்தரித்தார். அவர் பிறந்ததன் அறிகுறியை நட்சத்திரங்கள் வெளிப்படுத்த மூன்று ராஜாக்கள் அதுகண்டு  ,மாட்டுத் தொழுவத்தில் பிறந்தகுழந்தை யேசுவை தரிசிக்கின்றனர்.

முகம்மது நபிகள் எழுதியகுரான் அவருக்கு  குகையில் இறைதூதர் கேபிரியல் கூறியதுதான் என்று உரைத்திருக்கிறார் . அமானுஷ்யம் என்பது அதுவிளைவிக்கும் நற்செயலால் அற்புதம்- அதிசயம் போன்ற பதங்களை ஏற்றுக் கொண்டுவிடுகிறது.

வியக்கத்தக்கவகையில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  இத்தகைய  அல்லது  சாதாரணவகையில் அசாதாரண நிகழ்வுகள்  நடக்கத்தான்செய்கின்றன. ஒருதட்டில் பலாச்சுளைகளைவைத்துக்கொண்டே புத்தகம் படித்த சிநேகிதி ஒருவர் அந்தப்புத்தகத்தில் வந்த கதை ஒன்றில் ஒரு பெண் தட்டில் பலாப்பழம்சாப்பிட்டுக்கொண்டே கதைபடிக்கிறார்  என்பதைப் பார்த்து,  இது என்ன வகையான ஒற்றுமை  என வியந்தார்.

  இன்னொரு நண்பர் தொலைக்காட்சியில் நெட்பிலிக்ஸ்ஸில் ஒரு படத்தைப்  பார்க்கிறார்.  அதில் கதாநாயகி தன்மகன் இறந்த ஐந்தாமாண்டு நினைவுநாளில்,  அவன்  சாவுக்குக்  காரணமானவர்களைக் கண்டுபிடிக்கப் போவதாகச்  சபதம் ஏற்கிறார். அன்று அந்த நண்பரின் மகன் இறந்த ஐந்தாம் நினைவு நாள்!  இத்தகைய ஒற்றுமைகள் வியப்புக்குரியதாக உள்ளன.

—0—

 

Series Navigationபூக்கொத்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தீப்பொறி !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *