சாவிகளெல்லாம்
வைத்துப் பூட்டிய சாவி
தொலைந்துவிட்டது
நான் சொல்வதை
மின்தூக்கி மட்டுமே
கேட்கிறது
‘தாய்க்குப் பின் தாரம்’
ஆண்களுக்கு சரி
பெண்களுக்கு?
மரம் மண்ணுக்கு
சம்பளம் தரவே
இலையுதிர் பருவத்தில்
பச்சத்தண்ணியானால்
பத்திரமாய் இருக்கலாம
கொதித்தால் தொலைவாய்
தொட்டிச் செடிக்கு
தொட்டிதான் பூமி
அழகாய் அமையாது வாழ்க்கை
அமைவதை அழகாக்குவதே
வாழ்க்கை
மாத்திரை மருந்துகள்
துளித்துளியாய்க் கொல்லும்
ரத்தம் இப்போது
சந்தையில் கிடைக்கிறது
முளைக்கும்வரைதான்
உமிக்கு வேலை.
தாய்ப்பால் வற்றியது
குழந்தை கேட்கிறது
மூக்கணாங்கயிறை
விரும்தி அணிந்தபின்
சுதந்திரம் எப்படி?
ஒற்றை முடியை
எளிதாய்ப் பிடுங்கலாம்
பெருச்சாளிப் பொந்தில்
புதையல் இருக்கலாம்
புழுவின் முட்டையில்
புலிக்குட்டி பிறக்கலாம்
பாழடைந்த கூரைமரம்
சந்தனமாய் இருக்கலாம்.
நியதிகள் பொய்
அமீதாம்மாள்
- துயரம்
- வானத்தில் ஓர் போர்
- கொரனாவின்பின்னான பயணம்
- ஹைக்கூ
- பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்
- வலுவற்ற சூப்பர் வல்லரசு
- சிதறல்கள்
- உள்ளங்கைப்புண்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 11
- பாலினப் போர்
- சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- பயணம் – 5