பறந்த வெளி
பச்சைத் தீ
மிதித்தால் நிமிரும்
ஒடித்தால் துளிரும்
உடம்பே விதை
தொடரும் கதை
ஆயுள் கணக்கில்லை
தேடல்கள் மிகையில்லை
மூங்கில் தானியம்
சகோதரம்
தர்மத்தின் தாய்
இயற்கையின் சேய்
நான்கு பருவமும்
நண்பர்கள்
ஒற்றுமை வாழ்க்கை
குடும்பம் கொள்கை
தாவரவிரும்பியின்
தாய்ப்பால்
கருஉயிர் நீவும்
காற்றைக் கழுவும்
புழுக்களின் பருக்கை
பனிமுத்தின் இருக்கை
மூலிகையும் தரும்
காகிதமும் தரும்
வண்ணம் அன்பு
வடிவம் அருள்
வளியின் ஒளியின்
மூத்த முதல் உயிர்
விழிகளைக் கழுவும்
வெட்டவெளிகள்
வாழ்வியல் தத்துவம்
பேசும் தாவரம்
பார்த்தால் போதும்
பறவையாகும் மனம்
புரிந்துகொள்வோம்
புற்கள் போதிமரங்கள்
புல்லாய் இரு போதும்
பூமி தொழும்
அமீதாம்மாள்