


2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி நாசா நிலவுக்கு ஏவும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1
50 ஆண்டுகட்குப் பிறகு நாசா புது வலுமிக்க ராக்கெட் ஆர்டிமிஸ்-1 தயார் செய்து, மீண்டும் நிலவுக்குப் பயணம் செய்யப் போகிறது. 1969-1972 ஆண்டு பொறிநுணுக்கமான அப்பொல்லோ -11 ராக்கெட் [Saturn V in 1973. பயன் Orion Capsule] படுத்தப்பட்டு முதன் முதலில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் கருநிலவில் 1969 ஜூலையில் தனது பூதத் தடம் வைத்து வரலாற்று முதன்மை பெற்றார். இரண்டாம் தடவை நிலவுக்குச் செல்லும் நாசா இம்முறை நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கப் போகிறது. அந்த வரலாற்று முக்கிய பயணம் பிலாரிடா கென்னடி ஏவுகணை மையத்தில், 2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி, காலை 10:30 மணிக்கு, காலநிலைச் சூழ்வெளித் தடைகள் ஏதுமின்றி அனுமதி தந்தால், பச்சைக் கொடி பயணத்துக்கு காட்டப்படும்.
மனிதர் இயக்காத இந்தப் புதிய திட்டம் ஆர்டிமிஸ் -1 விண்வெளியில் 42 நாட்கள் நீடிக்கும். 322 அடி உயரத்தில் நிற்கும் அசுர ராக்கெட் [ 8.8 million pounds (3.9 million kg) of thrust, SLS is the most powerful rocket ever produced.] முனையில் உள்ள ஓரியன் விண்சிமிழ் [Orion Capsule] நிலவைச் சுற்றி வரும். அந்த ராக்கெட்டை டிசைன் செய்து அமைக்க 20 பில்லியன் டாலர், அதை நிலவுக்கு விண்சிமிழைத் தூக்கிச் செல்ல மேலும் 4.1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கு தேவைப்பட்டது. இனி அடுத்து மூவர்/நால்வர் இயக்கும் ஆர்டிமிஸ் -3 விண்சிமிழ் 2024 ஆண்டு தாமதத் தயாரிப்புக்கு 2 பில்லியன் மேலும் செலவு.
******************************
- https://www.forbes.com/sites/
jamiecartereurope/2022/08/24/ artemis-1-exactly-when-where- and-how-to-watch-nasa-launch- the-most-powerful-rocket-ever- made/?sh=7504a25590c3 - https://tidymails.com/
national-geographic/nasas- most-powerful-rocket-ever/ 341142/ - https://www.bbc.com/news/
science-environment-62563720 - https://youtu.be/RxzC2S8Z2Ng
[S. Jayabarathan] (jayabarathans@gmail.com), [August 28, 2022] [R-1]
- செயப்பாட்டுவினை
- வியட்நாமின், சம்பா இந்து அரசு
- ஊமைச்சாமி
- திருப்பம்…
- காதலும்கவிதையும்
- எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு
- நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையம் அமைக்க ஏவப் போகும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1
- கனடா மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022