மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

author
0 minutes, 43 seconds Read
This entry is part 14 of 14 in the series 25 செப்டம்பர் 2022

 

மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

(சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்கள்)

பா.மாரிமுத்து
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை,
நிகழ்த்துக் கலைப் புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625021.

முன்னுரை :

திருவிழா என்றாலே மக்களின் கூட்டமும் கொண்டாட்டமும் நம் நினைவுக்கு வருவது இயல்பே, சுருக்கமாக மக்களின் கூட்டமான கொண்டாட்டமே திருவிழா எனக்கொள்ளலாம். சித்திரை திருவிழாவில் சக்கிமங்கலம் எனும் இடத்தைச் சேர்ந்த பழங்குடியினர் (நாடோடிகள்) பகல் வேஷம் போடும் மக்கள் அதிகம் பங்குபெற்றனர். இவர்களில் ஒரு சிலரிடம் நான் அவர்களின் ஊர் பெயர் இந்த திருவிழாவில் என்ன செய்கிறீர்கள் என்ற பொதுவான கேள்வியைக் கேட்டேன். அவர்கள் திருவிழாவில் சாமி ஆடுவோர்கள் போலவும் சாமிகளாகவும் (இராமர் இலட்சுமணன் அனுமன்) வேடமிட்டு காணிக்கை பெற்று அதனை திருவிழாவின் கோயிலான அழகர்கோயிலில் செலுத்தி இறுதி நாளன்று அல்லது தாங்கள் குறித்த நாளன்று சாப்பாடு சமைத்து, அனைவருக்கும் அன்னதானம் செய்வர். இந்த கட்டுரை, இவர்களின் இந்த கொண்டாட்டத்தை பற்றியது. விளிம்பு நிலை மக்களும் உலகப்புகழ் பெற்ற சித்திரைத்திருவிழாவும் என்று சமூகத்தின் மையப்படுத்துதலையும் அதில் விளிம்பையும் பற்றிய ஒரு சேர்ந்த உற்று நோக்கலுடனான புரிதல் இந்தக் கட்டுரை.

குழந்தைகளும் சினிமாவும் :

 சினிமாக்கள் என்பதுவே பொதுவாக அனைவரும் ரசிக்கும் ஒன்று ஆகும். ஆனால் அடிப்படையில் இவை இப்படி உருவாவது இல்லை என்பது சினிமா பற்றிய ஆய்வாளர்களின் கருத்து ஏனெனில் தற்போது சினிமா ஒரு அரசியலை தீர்மானிக்கும் வெகுஜன மொழியாகி போனது என்பதுவே, இது உண்மைதான். ஒரு படம் உருவாகிறது எனும் போதே இதன் கதாநாயகன் யார் எதற்காக இவர் இந்த குறிப்பிட்ட படத்தில் நடிக்கிறார் என்ற கேள்விகள் இயல்பாக எழும் ஆனால் வெகுஜன இலக்கணம் கூறுவது எல்லோருக்குமானதும் மற்றும் எல்லோரும் ஒன்றென்று. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு சினிமாவில் வரும் பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். இது பொத்தா பொதுவாக அறத்தின் அடிப்படையில் வேண்டுமானால் உண்மையாக தோன்றலாம். ஆனால் பண்பாட்டு மேலாண்மை எனும் கருத்தின் அடிப்படையில் நோக்கினால் சினிமா என்பது கூட ஒரு அரசியல் அதுவும் பண்பாட்டு மேலாண்மை ஆகும். சினிமாவில் நாட்டமில்லாத வரையும் கூட ஆண்டுவிட்டனர் சினிமாத்துறையினர் என்றே கூட சொல்லலாம்.

சினிமாவில் மட்டுமல்ல ஒரு கலை வடிவத்தை அல்லது ஏதேனும் ஒன்றை அனைவருக்கும் புரியும்படி, ஏற்றுக்கொள்ளும்படி செய்வதே ஒரு அரசியல் இதனை வெகுஜன மயமாக்குதல் என்றும் கூடச் சொல்லலாம் இதற்கு நம் வீட்டுக் குழந்தைகள் சினிமா பாடல்களை பிரியமாக தேர்ந்தெடுத்து இரசிப்பதும் இதைப்போலவே அனைத்து சமூக மக்களும் இரசிப்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த சித்திரை திருவிழாவில் சக்கிமங்கலம் கிராம மக்களின்
செயல்பாடுகள். சக்கிமங்கலம் கிராம மக்களின் பண்புகள் இவர்கள் இயல்பாகவே பிச்சை (யாசகம்) எடுப்பதே தங்கள் வாழ்க்கை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காக இவர்கள் சாமிகளாகவும் சாமியாடுவோர் போலவும் வேடமிட்டு தாங்களே கொண்டாட்டங்களாக தோற்றமளித்தனர். எனவே இவர்களே திருவிழாவின் பாதி கொண்டாட்டமாக  தென்பட்டனர்.இவர்கள் பிச்சை (காணிக்கை) மட்டும் எடுக்கவில்லை பலூன் விற்றல் போன்ற எளிய வேலைகளையும் செய்து வருமானம் ஈட்டிக் கொண்டு இருந்தனர். அவர்களில் ‘நாங்கள் அழகருக்காக செறுப்புகள் கூட இல்லாமல் நடந்தே வியாபாரம் செய்து வருகிறேம்’. என்றும், ‘இது எங்களுக்காக இல்லை அழகருக்காக’ என்று என்னிடம் கூறினர்.

சித்திரைத் திருவிழா உலகப்புகழ்பெற்றது :

சித்திரைத் திருவிழா என்றால் உலகப்புகழ் பெற்றது என்றும் மிகப் பெரிய அளவில் நடைபெறுவதும் ஆகும்.

இந்தத் திருவிழாவில் பகல்வேடம் போடும் நாடோடிப் பழங்குடியின மக்கள் சாமியாடிகள் போல  வேடமிட்டும், சாமிகளாக(இராமர்,இலட்சுமணன்,அனுமார்) வேடமிட்டு காணிக்கை பெறுகின்றனர்.

பலூன் விற்றல் போன்ற சிறு தொழில் செய்தும் இவர்கள் இந்தத் திருவிழாவில் ஒரு அங்கமாக மாறுகின்றனர்.பெரிய திருவிழாவையே கோலி செய்வது போல அமைந்திருந்த து இவர்களின் இந்தச் செயல்பாடு திருவிழாவில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாத இந்த மக்கள் நாங்களும் அழகரை வணங்குகிறோம், அழகருக்கு நேர்ச்சை செய்பவர்கள் போல வேடமிட்டு காணிக்கை பெற்று இதில் அன்னதானம் செய்கிறோம் என்கின்றனர்.

“செறுப்பு கூட இல்லாமல் அழகருக்காக நடந்தே வந்து காணிக்கை பெறுகிறோம் எங்களுக்காக அல்ல அழகருக்காக” என்றனர். ஆனால் சித்திரைத்திருவிழாவில் சாமியாடிகள் போல வேடமிட்டு யாசகம் பெற்று சித்திரைத்திருவிழாவில் ஒரு அங்க மாக மாறுகின்றனர்.

உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா என்ற கருத்தினை உடைப்பதுபோல் உள்ளது. இந்த எளியவர்களும் (எளிமையானவர்கள்) கலந்து கொள்ளும் சித்திரைத்திருவிழா. இது சாதாரணமாக தோன்றினாலும் இவர்கள் இந்த சித்திரைத் திருவிழாவில் பிரிக்க முடியாத அங்கமாக மாறுதல் என்பது மிகவும் இரசிக்கும்படியாக அமைந்தது அடுத்த வருடம் யாரும் சித்திரைத் திருவிழாவிற்குப் சென்றால் சக்கிமங்கலம் பகல்வேடக்காரர்கள் இல்லையா?அவர்கள் அழகர் சாமியாடி போல வேடமிட்டு காணிக்கை வாங்கிவருவார்களே, என்றே தான் கேட்கத்தோன்றும்.

இந்த திரியெடுப்போர் போல வேடமனிதல் என்பது சித்திரைத்திருவிழாவையே கேலி செய்வதுபோலத் தோன்றினாலும், இது பண்பாட்டு அடையாளமாக மதுரை சித்திரைத் திருவிழா மதுரையின் பண்பாட்டு அடையாளமாக மிகவும் பிரம்மாண்டமாக, உலகப்புகழ் பெற்றதாக உருவாக்கப்படுகிறது என்னும் உண்மையை தோலுரித்துக்காட்டுவது போல உள்ளது சித்திரைத்திருவிழாவில் நாடோடிப் பழங்குடிகளின் வழிபாடுகளும், செயல்பாடுகளும். இவர்களை கொண்டாட்டத்தின் உருவங்களாகக் காட்டுகிறது.இவ்வாறு சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்களாக வலம் வருகின்றனர் இந்த பழங்குடிகள். இவர்களையும் நம்மையும் ஒன்றிணைப்பவர் அழகர் மட்டுமல்ல யார் பழங்குடிகள் இல்லை? என்ற கோள்வியும் தான்.பண்பாடு பற்றிய சில அடிப்படைகளை பின்வருமாறு காணலாம்.

பண்பாடு இயல்பாகவே  பண்பாட்டுக் கூறுகளால் ஆனது. பண்பாட்டு கூறுகள் என்பது பண்பாட்டின் சிறு அலகு. நம் அன்றாட உணவு உடை இருப்பிடம் என்று அனைத்துமே பண்பாடு சார்ந்தது. பண்பாடு குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் பல்வேறு  வரையறைகளை செய்துள்ளனர். அவற்றில் E.B.Tylor அவர்களின் வரையறை குறிப்பிடத்தக்கது “பண்பாடு என்பது அறிவு நம்பிக்கை கலை ஒழுக்கநெறிகள் சட்டம் வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கிய முழுமையான தொகுதி ஆகும்” என்று பண்பாடு குறித்து 1871 இல் வெளிவந்த தொன்மை பண்பாடு (Primitive culture) எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார் என்ற வரையறையின் படி சித்திரைத் திருவிழா என்ற பண்பாட்டினையும் நாடோடிப் பழங்குடிகள் இத்திருவிழாவில் தங்களை இணைத்துக்கொள்ளுதலையும் இதன் வழியாக தாங்களின் வழிபாடுகளையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்வதையும் இது ஒரு சித்திரைத் திருவிழா என்னும் பண்பாட்டு அடையாளத்தில் நாடோடிப் பழங்குடிகளின் பங்கு என்ன? என்பதும் இது சமூகத்தில் விளிம்பு  நிலையிலுள்ளவர்களையும் – மையப்படுத்துதலையும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் ஒரு பார்வையாக  இந்தக் கட்டுரை அமைந்தது.

இந்த கட்டுரையின் மூலம் மதுரைச் சித்திரைத் திருவிழா என்ற பண்பாட்டு அடையாளம் உருவாக்கப்படுகிறது என்றும். இதில் விளிம்பு  நிலை மக்கள் எந்த நேரடியான நேர்ச்சையும் இல்லாமல், தங்களின் அன்றாடத் தொழிலான யாசகம் பெறுவதையே ஒரு நேர்ச்சை செயல்பாடாக மாற்றுவதையும் காணமுடிந்தது இந்த செயல்பாடு மதுரையின் பண்பாட்டு அடையாளங்கள் என்பவை உருவாக்கப்படுகிறது என்பதை சித்திரைத் திருவிழாவில்  நாடோடிப் பழங்குடிகள் தங்களையும் ஒரு அங்கமாகக் கொண்டட்டத்தின் உருவங்களாக மாற்றுவதைக்  கொண்டும்,பகல் வேடத்தில் இல்லாத வேடமான திரியெடுத்தல் போல வேடமிட்டும் தங்கள் குலத்தொழிலான யாசகம் பெறுதலை செய்துவருவதைக் காணமுடிந்தது.சக்கிமங்கலம் காளிராசா திரியெடுப்பவர் போல வேடமிட்டுக் காணிக்கை பெற்று வந்தார்.

கள்ளந்திரி சின்னகருப்பு என்பவர் பரம்பரையாகவே அழகர் கோயிலில் அனுமார் வேடம் போடுபவர்.இவர் முத்தரையர் சமூகத்தவர்.இவருக்கு இவரின் முனோர்கள் இந்தக் கோயிலில் அனுமார் வேடம் போட்டுக் காணிக்கைப் பெற்று அதை தான் பயன்படுத்திக் கொள்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் பதிவுசெய்தார்.இவர் இதை நேர்ச்சையாகவே செய்வதாகவும் இதைக் கடந்து இது எங்கள் கோயில் உரிமை என்றும் கூறினார்.இவரின் மகன் குமாரும் இந்த வேடம்மிட்டுக் காணிக்கை பெற்றுக் கொண்டிருந்தார்.இவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவர்.இவர்கள் பரம்பரையாக கோயில் உரிமைகளை பெற்று அனுமார் வேடமிட்டு காணிக்கை பெறுகின்றனர்.ஹர ஹர சேவை எனும் நேர்ச்சை செய்பவர்கள் திரி எடுத்தல் தண்ணீர் பீச்சுதல் போன்றவற்றை செய்கின்றனர் மக்களிடம் காணிக்கை பெறுவதில்லை.

சக்கிமங்கலம் காளிராசா தங்கள் குலத்தொழிலான யாசகம் பெறுதலையே இந்த திரியெடுப்பவர் போல வேடமணிந்து செய்கிறார்.இவ்வாறு மற்ற பக்தர்ளுடன் ஒப்பிட்டுபார்க்கும் போது இவர் காணிக்கைப் பெறுவதும்.இந்த சித்திரைத் திருவிழாவில் பங்குபெறுவதும்.இவர்கள் சித்திரைத் திருவிழாவில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாதவர் போல் தோன்றினாலும் திருவிழா கொண்டாடத்தில் கலந்துகொள்கிறார்.பின்னாலில் இவர் இதை நேர்ச்சையாக மட்டுமே செய்யும் போது இவரும் சாதாரணபக்தர்களில் ஒருவராகவும் மாறலாம்.அல்லது சக்கிமங்கலம் மக்கள் யாசகம் பெறுவதும் திருவிழாவில் மாற்றமில்லாத ஒரு அங்கமாகலாம்.இது சுருக்கமாக திருவிழாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

இவர்கள் சமூகத்தில் அங்கமானவர்கள் திருவிழாவில் தனித்து யாசகம் பெறுவதும் சித்திரைத் திருவிழா மதுரையின் பெறும் பண்பாட்டு அடையாள உருவாக்கமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டு பண்பாட்டின் பெயரால் நடைபெறும் அரசியல் பண்பாட்டரசியல் எனப்படும்.இவ்வாறான பண்பாட்டு அரசியலை நாம் புரிந்து கொள்ள பண்பாட்டினை ஒட்டுமொத்தமாக, விளிம்பு- மையம் என்றும் கீழிருந்த பார்வையில் விளிம்பு நிலையில் அணுகும்போது நமக்கான பண்பாட்டின் அடையாள உருவாக்கம் தொடர்பான புரிதல் உண்டாகும்.

முடிவுரை :

            சித்திரைத் திருவிழாவில் பகல் வேடக்காரர்கள் திருவிழாவில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. நேர்ச்சைகளும் செய்வதில்லை என்றாலும் பலூன் விற்றல் யாசகம் பெற்று அதனை அன்னதானம் இட்டு தங்களுக்குள் பகிர்தல் போன்ற செயல்பாடுகளுடன் மட்டுமே தொடர்புடையவர்களாக இருக்கின்றனர் என்ற போதும், இவர்கள் இல்லாத திருவிழாவை நாம் நினைத்தால் அது மக்கள் கொண்டாட்டம் இல்லாத வெறுமையாக மட்டுமே இருக்கும். எனவே பழங்குடி மக்கள் (நாடோடிகள்) திருவிழாவில் தங்களை ஈடுபடுத்துவது என்பது இயல்பானதும் மிக எளிமையானதுமாகும் இது, நமக்கு  மதுரைக்கான பண்பாட்டு அடையாள உருவாக்கமாக சித்திரைத்திருவிழா பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறதா என்று ஒரு கருத்தினை சுட்டிக்காட்டுவதாக பொருள்படுகிறது என்பதே இந்தக் கட்டுரையின் முடிவாகும்.

          கோயில் உரிமையை பெற்று காணிக்கை பெறும் கள்ளந்திரி சின்னக் கருப்பும்,தன் குலத்தொழிலான யாசகம் பெறுதலை நேர்ச்சை செய்பவர் போல வேடமணிந்து செய்துவரும் சக்கிமங்கலம் காளிராசாவையும் ஒப்பிடும் போது நமக்கு திருவிழா உரிமைகள் கொண்டாட்டங்களில் சமூக போதங்கள் ஒருபுறம் இருக்க அதிகார வர்க்கங்கள் சித்திரைத் திருவிழாவையே மதுரையின் பண்பாட்டு அடையாளமாக உருவாக்குவதையும் தொடர் ஆய்வுகள் மூலம் நிரூவலாம்.இருவரும் செய்கின்ற நேர்ச்சையும் பெறுகிற காணிக்கைகளும் ஒன்றே ஆனால் கோயிலே அங்கீகரித்த உரிமை ஒருபுறமிருக்க,சமூக அடுக்குகளில் விளிம்பு நிலையிலுள்ள பழங்குடி நாடோடிகளும் நேர்ச்சை செய்பவர் போல வேடமணிந்தும்,காணிக்கை பெறுதல் என்னும் செயல்பாட்டுடன் திருவிழாவி தன்னை இணைத்துக் கொள்வதும் ஒரு இயல்பான நிகழ்வு ஆகும் இது உயர் வர்க்கம் பண்பாட்டு அடையாளத்தினை உருவாக்குகின்றனரா?என்ற கேள்வியை எழுப்புவது போல் உள்ளது.

கலைகளுடனான வாழ்க்கை:

நரிக்குறவர் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இயல்பாகவே தங்கள் வாழ்க்கையை கலைகளுடன் வாழ்கின்றனர். இவ்வாறான இவர்களது தோற்றமே சிறு கொண்டாட்டம் போல் அமைகிறது. இவ்வாறு இவர்கள் அதிகாரவர்க்கம் செய்யும் அடையாளப்படுத்தும் சித்திரை திருவிழாவை தங்களுக்குமானதாக,ஆக்கிக் கொள்வது என்று (ஒரு காலி குறிப்பானை-(அழகர் தங்களுக்கானவர்)- Empty signifiers) உருவாக்கி பண்பாட்டு அடையாளத்தினை கேள்விக்குள்ளாக்குகின்றனர். இது சற்று சிறுகுழந்தை தனம் போல தோன்றுகிறது. சினிமாக்களைப் பற்றி ஆய்வாளர்கள் பல உண்மைகளை தேடி கண்டுபிடித்து கொண்டிருக்கும் போது அனைத்தையும் ‘எமது’ ஆக்கும் குழந்தை போல திருவிழாக்களில் நாங்களும் என்ற குரலுடன் வலம் வரும் இவர்களின் செயல்பாடுகள் ஒரு பண்பாட்டு புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்களாக இந்த பழங்குடியினர் பங்கேற்பது ஒரு வகையில் பெரிய திருவிழாவை கேலி செய்வது போல தோன்றினாலும் இதில் பண்பாட்டு அடையாள உருவாக்கத்தினை கேள்விக்குள்ளாக்கி இதனை காலிகுறிப்பான்கள் எனும் விடைகளுடன் கொண்டாட்டங்கள் என்பது அனைவருக்குமானது என்ற தத்துவார்த்த புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்வதை உற்றுநோக்கி நாம் புரிந்து கொள்ளலாம்.)

துணை நூல்பட்டியல் :

பக்தவத்சல பாரதி., 2019, பண்பாட்டு மானிடவியல்,அடையாளம் பதிப்பகம்.

A floating signifier is a symbol or concept (for example, the Zapatista balaclava) that’s loose enough to mean many things to many people, yet specific enough to galvanize action in a particular direction.

Origins

Coined by Claude Lévi-Strauss; elaborated by Roland Barthes, Stuart Hall, Ernesto Laclau, and others.

What is Empty Signifier

Term that means nothing in itself, but that serves as a focal point for a range of ideological foci, discourses and meanings that may be in competition with each other. Learn more in: Heritage Education and Global Citizenship

 

Series Navigationகனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *