1
மனிதன் தேடும் ‘சுகம்’
ஒரு நாணயமாகத்தான்
தரப்படுகிறது
அதன் மறுபக்கம்
‘வலி’
2
வெறுப்பை
விரோதத்தை
கோபத்தை
பகையை நோக்கி
எடுத்துவைக்கும்
காலடிகளே
‘விவாதங்கள்’
3
நான்
எப்படிப்பட்டவன் என்று
நான் சொல்வதும் பொய்
அவன் சொல்வதும் பொய்
அவனவன் சொல்வதும் பொய்
4
சிவப்பு பச்சை விதி
வாகனங்களுக்கு மட்டுமல்ல
வார்த்தைகளுக்கும்தான்
5
பேச்சால் யாரையும்
துன்புறுத்தாமல் பேசுவது
ஓர் இன்பமான துன்பம்
6
நீ தந்த முதல்
தேநீரைச்
சுவைக்கையில்
ஒரு சொட்டு என்
சட்டையில் விழுந்தது
அந்தச் சட்டை
துவைக்கப்படாமல்
இன்றும் என்
அலமாரியில்
7
கசக்கிக் காயப்போட்ட
என் உடுப்பு காற்றில் துடிப்பது
நேற்று அதை உடுத்தியபடி
வேலையில் துடித்ததைச்
சொல்கிறதோ
(ஒரு வெளிநாட்டு ஊழியன்)
8
அன்பு மனைவியே
யார்யார் மரணத்துக்கோ
இருவரும் சேர்ந்தழுதோம்
ஒருநாள் வரலாம்
அப்போது
நீ மட்டும் அழுவாய்
அல்லது நான்மட்டும் அழுவேன்
9
நிலாத்துண்டென
ஒரு நினைவுப்பரிசு எனக்கு
எல்லாருக்கும் அது அழகு
எனக்கு அது ஆசான்
பார்க்கும்போதெல்லாம்
சொல்கிறது
‘போற்றவந்தேன்
உன் பெருமையை
புரண்டுவிடாதே’
அமீதாம்மாள்
- குழந்தையாகி நல்கி
- அகழ்நானூறு 19
- இது இவன் அனுபவம்
- படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் என். செல்வராஜா ஆவணப்படுத்தியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம்
- எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
- க…… விதைகள்
- குவிகம் ஒலிச்சித்திரம்
- உறவு
- கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11
- கா. சு வேலாயுதன் எழுதிய சாட்சரதா நாவல் குறித்து
- சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023
- நாவல் தினை – அத்தியாயம் ஆறு- CE பொ.யு 5000