இந்த கணம்
ஆர் வத்ஸலா
இந்த கணம்
உனக்குத் தேவை
எனதன்பு
என் ஆதரவை பறைசாற்றும் சொற்கள்
வழங்குகிறேன் அவற்றை
நேற்று உன்னிடம் பெற்ற
அதே உதாசீனம்
நாளை நீ நிமிர்ந்த உடன்
பெறுவேன் என்று அறிந்திருந்தும்
நம்மிடையே சமுதாயம்
ஏற்படுத்திய கட்டாய உறவு காரணமாக அல்ல
தெருவில் போகும் ஒரு
பரிச்சயமற்றவனுக்கும்
அதை செய்திருப்பேன்
என்பதால்