ஆர் வத்ஸலா
ஒவ்வொரு முறை
அவன் நினைவு வரும் போதும்
என்னை நானே அடித்துக் கொண்டு
நினைவூட்டிக் கொள்கிறேன்
அவனுக்கு நான் வேண்டாம்
என்பதை
“எப்படியடி
கொள்ளி வைக்க முடிந்தது அவனால்
பல்லாண்டு அன்புக்கு
ஒரு கணத்தில்?”
என
கேட்கிறது மனம்
வயிறு எரிய
சபிக்கிறேன்
அவனை
இதயம் தூங்கும்
ஒரு கணத்தில்
பின் துணுக்குற்று
வேண்டுகிறேன் தெய்வத்தை
என் சாபம்
பலிக்காமல் போகட்டுமென