This entry is part 9 of 13 in the series 2 ஜூலை 2023

ஆர் வத்ஸலா

நெருங்கி வருகிறது இன்னொரு நட்பு

உனதளவு இல்லாவிட்டாலும்

நிறைய அன்புடனும்

அதேயளவு மதிப்புடனும்

புரிந்துணர்வுடனும்

கொசுருக்கு

கதை கவிதை பற்றின 

கருத்து பரிமாற்ற சாத்தியத்துடன்

ஆனால்

அச்சம் மனமூலையிலமர்ந்து

பின்னுக்கு இழுக்கிறது

என்னை

உன் விலகலை நினைவூட்டி

எனக்கும்தான் தெம்பில்லை 

இன்னொரு நட்பின்

தொலைதலை தாங்க

Series Navigationமுரண்இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-2023