ஆர் வத்ஸலா
நெருங்கி வருகிறது இன்னொரு நட்பு
உனதளவு இல்லாவிட்டாலும்
நிறைய அன்புடனும்
அதேயளவு மதிப்புடனும்
புரிந்துணர்வுடனும்
கொசுருக்கு
கதை கவிதை பற்றின
கருத்து பரிமாற்ற சாத்தியத்துடன்
ஆனால்
அச்சம் மனமூலையிலமர்ந்து
பின்னுக்கு இழுக்கிறது
என்னை
உன் விலகலை நினைவூட்டி
எனக்கும்தான் தெம்பில்லை
இன்னொரு நட்பின்
தொலைதலை தாங்க